முதுமை காரணமாகத் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற

. நினைக்கும் கோ.சி.மணி, தன் மகனை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினராக்கப் போராடி வருகிறார். ஆனால், 'கோ.சி.மணி குடும்பத்துக்கு ஸீட் தரக்கூடாது’ என்று தி.மு.க- வினர் சிலர் குரல் எழுப்பி வருகிறார்கள். இந்த களேபரத்துக்கு இடையே காங்கிரஸ் கட்சியினர், 'எங்களுக்குத்தான் கும்பகோணம் தொகுதியை ஒதுக்கவேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றி களத்தில் குதித்து இருப்பதால், பரபரப்பாகிக் கிடக்கிறது தொகுதி!.
கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் கடந்த

வாரம் நடைபெற்றது. இதில், 'கடந்த 1952 முதல் 1988-ம் ஆண்டு வரை கும்பகோணம், காங்கிரஸ் தொகுதியாகவே இருந்தது. அதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் கும்பகோணம் தொகுதி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி காங்கிரஸ் வேட்பாளராக சுரேஷ் மூப்பனாரை அறிவிக்க வேண்டும் என முதல் அமைச்சர் கருணாநிதி, மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், தங்கபாலு, ஜி.கே.வாசன் ஆகியோரைக் கேட்டுக்கொள்கிறோம்’ என தீர்மானம் நிறைவேறி உள்ளது.

'பழகத் தெரிந்த நாள் முதலாய் என் உயிரினும் உயர்வான உடன்பிறப்பு’ என கருணாநிதியால் பாராட்டு பெற்று, ஒருங்கிணைந்த மிகப்பெரிய தஞ்சை மாவட்டத்தில் தி.மு.க. செயலாளராக கொடிநாட்டியவர் கோ.சி.மணி. அவரது முதுமை காரணமாகவே, மாவட்ட தி.மு.க. செயலாளர் பதவி, தஞ்சாவூர் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பழனிமாணிக்கத்திடம் கொடுக்கப்பட்டது. வேளாண்மைத் துறை, உள்ளாட்சித் துறை, கூட்டுறவுத் துறை என சகலத்திலும் அமைச்சராக மின்னியவருக்கு, 'முன்னாள் ராணுவ நலத்துறை’ அமைச்சர் பதவி கொடுத்தபோது எல்லோருக்கும் சுருக்கென்றது. பிறகு மீண்டும் கூட்டுறவுத் துறை கொடுக்கப்பட்டாலும் 'வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கோ.சி.மணி விரும்பவில்லை. முதுமையில் முழுமையான ஓய்வை விரும்புகிறார்’ என தகவல் பரவி விட்டது.

''தான் அரசியலில் இல்லை என்றாலும், தனது குடும்பத்தினர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது கோ.சி.மணியின் ஆசை. அதனால், அவர் மகன் இளங்கோவனை எம்.எல்.ஏ-வாக்க ஆசைப்படுகிறார்...''

என கூறும் உள்ளூர் தி.மு.க-வினர், ''கோ.சி.மணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது கும்பகோணமும் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றது. தஞ்சையை தி.மு.க கோட்டையாக மாற்றியவரை பண அரசியலும், முதுமைக் காரணங்களும் ஒதுக்க நினைக்கிறது. தனக்குப் பிறகு தன் மகனை அரசியலுக்குள் கொண்டு வரத்தான் கும்பகோணம் தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் பதவியில் அமர்த்தினார். இளங்கோவன் இப்போது திருவிடைமருதூர் யூனியன் துணை சேர்மனாக இருந்து வருகிறார். தனக்கு வேண்டாம் என்று சொல்லி மகனுக்கு கருணாநிதியிடம் கண்டிப்பாக ஸீட் வாங்கிவிடமுடியும் என கோ.சி.மணி நம்புகிறார்! ஆனால், இளங்கோவனின் அரசியல் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதால், தி.மு.க-வினரே கோ.சி.மணியின் கோரிக்கைக்கு எதிராக நிற்கிறார்கள். எப்படியாவது கோ.சி.மணியின் குடும்ப ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!'' என்று ஆவேசப்படுகிறார்கள்.

ஆனால், இதை மறுக்கும் கோ.சி.மணியின் ஆதரவாளர்கள், ''இந்த தொகுதிக்கு கோ.சி.மணி நிறையவே செய்திருக்கிறார். அதனால் தன் மகனுக்கு ஸீட் வாங்கிக் கொடுப்பார். எப்படியும் தாங்கள் ஸீட் வாங்கிவிட வேண்டும் என்று ஸ்டாலின் மூலம் காய்நகர்த்தி வரும் சாக்கோட்டை அன்பு, தமிழழகன் ஆகியோரது பாச்சா பலிக்காது!'' என்றனர் நம்பிக்கையாக.

கோ.சி.மணியின் குடும்ப ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேன்டும் என்பதற்காக, இந்தத் தொகுதியை காங்கிரஸுக்குத் தள்ளிவிட வாய்ப்பிருக்கிறது என்று கருதுகிறார்கள் உடன்பிறப்புகள்.

தஞ்சாவூர் வடக்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜாங்கம், ''ஜி.கே.மூப்பனார் தனது அரசியல்

பயணத்தைக் கும்பகோணத்தில் இருந்துதான் தொடங்கினார். 36 வருஷங்கள் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கும்பகோணத்தில் பணியாற்றி வந்தனர். பின்னர் கூட்டணி காரணமாக எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், நாங்கள் போட்டியிட்டு ஒருபோதும் தோற்றதில்லை. கும்பகோணத்தில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு நிறைய உள்ளது. முதுமையின் காரணமாக கோ.சி.மணி போட்டியிட மாட்டார் எனக் கூறப்படுவதால்தான் காங்கிரஸ் கட்சிக்குத் தொகுதியை ஒதுக்குமாறு கேட்கிறோம். பல வருடங்களாய் நாங்கள் இழந்த தொகுதி கும்பகோணம்! அதைக் கேட்பதில் தவறு இல்லை...'' என்றவரிடம்,

''தொகுதி வேட்பாளராக சுரேஷ் மூப்பனாரை அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுத் தீர்மானம் நிறைவேற்ற என்ன காரணம்?'' என கேட்டோம். ''அவர் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும் ஜி.கே.வாசன் மத்திய அமைச்சரவை பொறுப்பில் இருப்பதால், இங்கேயே இருந்து தொடர்ந்து செயலாற்ற காங்கிரஸுக்கு சுரேஷ் மூப்பனார் தேவைப்படுகிறார். ராகுல் காந்தி வருகைக்குப் பிறகு இளைஞர்கள் அதிக அளவில் காங்கிரஸில் இணைந்துள்ளனர். அவர்களை வழிநடத்த ஓர் இளைஞர் தேவை என்ற முறையிலும் சுரேஷ் மூப்பனார்தான் சரியான நபர்! இந்தத் தொகுதி மட்டும் கிடைத்தால், நிச்சயம் அவர்தான் வெல்வார்!'' என்றார் திடமாக.

'கோ.சி.மணியின் மகனா? ஜி.கே.மூப்பனாரின் மருமகனா?’ என்கிற இந்த கும்பகோண பட்டிமன்றத்துக்கு சில மாதங்களில் விடை தெரிந்துவிடும்!

- சி.சுரேஷ், படங்கள்: கே.குணசீலன்