கடந்த ஒன்பதாம் தேதி புதுக்கோட்டையில் மக்கள் தமிழகம் கட்சி, தமது அரசியல் மாநாட்டை நடத்தியது. அதில் பேசப்பட்டவை அனைத்துமே பகீர் ரகம். தமிழ்நேசன் பேசும் போது, ''தமிழக முதல்வர் நம் இனத்தை தேவேந்திர குல வேளாளர் என அழைப்பது தொடர்பாக நீதிபதி ஜனார்த்தனன் தலைமையில் ஒரு குழு அமைத்து இருக்கிறார். நாம் குடும்பர், பன்னாடி எனப் பிரிந்து கிடப்பது தெரிந்துதான் அந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. எப்படியும் ஓட்டு வாங்கி விடலாம் என்பது அவருடைய கணக்கு. ஜெயலலிதாவும் அப்படித்தான் செய்வார். அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இடம்தரக் கூடாது!'' என்றார் காட்டமாக.

முத்தரையர் சங்கத் தலைவரான குழ.செல்லையா, ''இந்த நாட்டில்தான் பெரும்பான்மை மக்களை

. சிறுபான்மையினர் ஆள்கிறார்கள். இந்த நிலை மாற சாதி ரீதியான கணக்கெடுப்பு வேண்டும். முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் படுகொலையைக் கண்டித்து சட்டமன்றத்தில் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கூட கொண்டு வரவில்லை. அந்த அளவுக்கு நாம் நாதியற்றுக் கிடக்கிறோம். சிறுபான்மையைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் வரை அமைச்சர்களாக இருக்கிறார்கள். நமக்கு இன்னும் அந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. இனிமேல் தேவேந்திர குல சமூகத்துக்கு எங்கள் முத்தரையர் சமூகம் ஆதரவு அளிக்கும், அதே போல் தேவேந்திர குலமும் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும்!'' என்றார் சூடாக..
மக்கள் தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் புரட்சி கவிதாசன், ''தமிழகத்தில் ஒன்றரைக் கோடி தேவேந்திர குல மக்கள் இருந்தும், மத்திய மாநில மந்திரி சபைகளில் அநாதைகளாக இருக்கிறோம். சட்டமன்றத்தில் 24 தொகுதிகளும், நாடாளுமன்றத்துக்கு ஐந்து தொகுதிகளும் வேண்டும். ஒரு மாநகராட்சி மேயர், மத்தியில் இரண்டு மந்திரிகள், மாநிலத்தில் நான்கு மந்திரிகள் தரவேண்டும். இதை எல்லாம் யார் தருகிறார்களோ அவர்களோடு வரும் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்வோம்!'' என முழங்கியவர் மேலும், ''புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைத் தொகுதியில் மட்டும் 57 ஆயிரம் தேவேந்திர குல மக்கள் இருக்கிறார்கள். எங்களோடு முத்தரையர் மக்களும். இஸ்லாமிய மக்களும் இணைந்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று தொகுதிகளைக் கைப்பற்ற முடியும். இதே போல் தமிழகம் முழுவதும் பின்பற்றினாலே நம்மை நாமே ஆளும் நிலை வந்து விடும்...'' என்று அனல் கக்கினார்.

அரசியல் கட்சிகளே... இவர்கள் பேச்சு கேட்குதா?

- வீ.மாணிக்கவாசகம், படங்கள்: பா.காளிமுத்து