'இறந்துபோன ஓர் உடலை வைத்து இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவின் மூத்த சகோதரர் பெயரும் அடிபடுகிறது. உடனே வந்து பாருங்கள்!’ என்று கடந்த 11-ம் தேதியன்று நமது ஜூ.வி.ஆக்ஷன் செல் (எண் 044 4289 0005) அலறியது.

என்.கே.கே.பி.ராஜாவை சர்ச்சைகள் சுற்றுவது வழக்கம்தான், இப்போது அவரது சகோதரருமா? என்ற கேள்வியுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தோம்.

என்னதான் பிரச்னை?

ஈரோடு மாவட்டம் பெருந்தலையூரைச் சேர்ந்த முஸ்லிம் பாட்டி ஒருவரின் உடலை

. வைத்துப் போராட்டம் நடத்தும் பெருந்தலையூர் சுன்னத் ஜமாத்தின் தலைவர் ஷஹாபுதீனை சந்தித்துப் பேசினோம். ''எங்கள் தர்காவுக்கு வழி வேண்டும் என்றுதான் போராட்டம் நடத்துகிறோம். எங்கள் பாரம்பரியமான இடத்தில் தர்கா இருக்கிறது. சுமார் 700 வருடங்களாக இதைப் பயன்படுத்தி வருகிறோம். திப்புசுல்தான் காலத்தில், எங்களுக்குக் கொடையாக 17.5 ஏக்கர் நிலங்கள் தர்காவுக்கு அருகே கொடுக்கப்பட்டது. எங்கள் முன்னோர்கள் அதை வறுமையின் காரணமாக பழனிச்சாமி என்பவருக்கு விற்றுவிட்டனர். அப்துல் ரஹீம் என்பவரும், அதையட்டி இருந்த அவரது சொந்த இடத்தில், தர்காவுக்கு போகும் வழியாக இருந்த எட்டு சென்ட் இடத்தைத் தவிர்த்து மீதமிருந்த .இடத்தை விற்பனை செய்துவிட்டார். ஆனால், பழனிச்சாமி போலியான பட்டா மூலம் வழி இருந்த இடத்தையும் தன் பெயரில் கிரயம் செய்துகொண்டார். கடந்த வருடம் பழனிச்சாமி வழி மறித்த பிறகுதான் இந்த விவகாரங்கள் எங்கள் கவனத்துக்கு வந்தன..
உடனே இது சம்பந்தமாக கோபி தாசில்தாரிடம் பல முறை முறையிட்டும், எந்தப் பலனும் இல்லை. இதற்காக மூன்று மாதங்களுக்கு முன் போராட்டம் நடத்தினோம். ஆர்.டி.ஓ. உத்தரவின்படி, தாசில்தார் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்படி, 'மேல்முறையீடு உத்தரவு வரும் வரை இஸ்லாமியர்கள் வியாழன், வெள்ளி மற்றும் சிறப்பு நாட்களில் தர்காவுக்குச் செல்லும் வழியை மறித்து இடையூறு செய்யக் கூடாது!’ என்று சொன்னார்கள்.

ஆனாலும் பழனிச்சாமி பல்வேறு வகைகளில் தொந்தரவு கொடுக்கிறார். நாங்கள் தர்காவுக்குப் போகும் வழியில் கரும்புச் சருகுகளைப் போட்டு வைக்கிறார். தேவையே இல்லாமல் குழி தோண்டி வாய்க்கால் வெட்டுகிறார். அவருக்குப் பக்கபலமாகவும், தூண்டுதலாகவும் இருக்கிறார் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவின் மூத்த அண்ணன் என்.கே.கே.பி.சத்தியன். அவர்தான் பழனிச்சாமியிடம், 'மாமா, அவங்க வர்ற வழியில் முள்ளைப் போட்டு வை, நாலு பன்னிய வாங்கிக் கட்டு, அப்பத்தான் இந்தப் பக்கம் வரமாட்டானுங்க’ன்னு சொல்கிறார். அவர் இருக்கும் தைரியத்தில் பழனிச்சாமி உடன்பாட்டுக்கு வரமறுக்கிறார். இந்த நிலையில் எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இறந்து போன பாட்டியின் உடலை நடுரோட்டில் வைத்துப் போராடுகிறோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராவோம்...'' என்றார்.

இதற்குள் தகவல் கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த தாசில்தார் சாவித்ரி, ''ஆர்.டி.ஓ-கிட்ட உங்க பிரச்னையை விளக்கி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன். பிணத்தை இப்படி ரோட்டில் போட்டுப் போராட்டம் செய்வது சரியில்லை. முதலில் நல்லபடியாக அடக்கம் பண்ணிட்டு வாங்க...'' என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

குற்றம் சாட்டப்பட்ட பழனிச்சாமியைத் தொடர்பு கொண்டு பேசினோம். ''எங்க அப்பா காலத்திலேயே இந்த நிலங்களை வாங்கி இருக்கிறோம். அதற்கான பட்டா என்னிடம் இருக்கிறது. தர்காவுக்கு

முன்புறம் இவர்களுக்கு வழி கிடையாது. பின்புறமாகத்தான் வழி இருக்கிறது. இங்கு இருக்கும் இஸ்லாமியப் பெரியவர்களுக்கு இந்த விவரம் நன்றாகவே தெரியும். அதனால்தான் அந்தப் பெரியவர்கள் யாரும் ஷஹாபுதீன் நடத்தும் போராட்டங்களில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி இருக்கிறார்கள். இந்த ஷஹாபுதீன் போலீஸ்காராக இருந்து தில்லுமுல்லு செய்த காரணத்தால் சஸ்பென்ட் செய்யப்பட்டவர். அவர்தான் அண்ணன் தம்பியாக ஒற்றுமையாகப் பழகிவரும் எங்களிடம் பிரிவினையைத் தூண்டி விடுகிறார். மேலும் ஷஹாபுதீன், வஃக்பு தலைவரும் கிடையாது. ஆரிபுல்லாகான்தான் தலைவர். எதற்கெடுத்தாலும் 'சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்கிறீர்கள்’ என்று சொல்லிக் கொண்டு என்னிடம் சண்டைக்கு வருகிறார். மேலும் எங்கள் காட்டுக்கு வேலைக்கு வரும் தாழ்த்தப்பட்ட மக்களிடமும், 'காட்டு வேலைக்குப் போகாதீங்க’ என்று தடுத்து நிறுத்துகிறார். இந்தப் பிரச்னைக்கும், என்.கே.கே.பி.சத்தியனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவரும் நானும் மாமன், மச்சான் உறவு. இந்த வழியாக சத்தியனும் போவார். போகும்போது கும்பலாக இருந்தால்... 'என்ன மாமா, பிரச்னையா?’ன்னு கேட்பார். அப்படி அவர் கேட்பது தப்பா?'' என்றார்.

குற்றச்சாட்டுக்கு உள்ளான என்.கே.கே.பி.சத்தியன் பெருந்தலையூர் அண்ணாநகரில் வசிக்கிறார். அவரிடமும் பேசினோம். ''இந்தப் பிரச்னை ரொம்ப காலமா நடந்து வருது. ஆனால், இந்தப் பிரச்னைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தேவை இல்லாமல் என் பேரை இந்த விவகாரத்தில் இழுக்குறாங்க. காழ்ப்பு உணர்ச்சி காரணமாகத்தான் என்னை இதில் குற்றம் சாட்டுகிறார் ஷஹாபுதீன்...'' என்றார் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்.

இறந்துபோன பாட்டியை அடக்கம் செய்து விட்டார்கள். ஆனால், பிரச்னை இன்னும் முடியவில்லை!

- வீ.கே.ரமேஷ்