ஒன்பது வருடங்களுக்கு முன்பு எரித்துக் கொல்லப்பட்டதாகச்

. சொல்லப்பட்ட மணிமேகலை என்ற பெண், திடீரென சொந்த ஊருக்கு உயிரோடு வந்தால்... அது அற்புதம்தான்! ஆனால், அந்த அற்புதத்துக்குப் பின்னால், மணிமேகலையைக் கொன்ற குற்றத்தின் பேரில் கொலைக்குற்றவாளிகளாக நான்கு பேர் சிறைக் கொட்டடியில் நரகவேதனைப் பட்டார்களே... அதற்கு என்ன பதில்?.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் இருக்கிறது பேரூர். மணிமேகலா என்ற மணிமேகலையின் சொந்த ஊர் அதுதான். மணிமேகலையிடம் பேசினோம். ''நான் இரண்டு வயசா இருந்தப்ப எங்க அம்மா கன்னிமரியாள், பேரூரில் இருந்து திருப்பூருக்கு அழைச்சிட்டுப் போனாங்க. அங்க பனியன் கம்பெனியில் வேலை பார்த்து குடும்பம் நடத்தினாங்க. 10 வருஷங்களுக்கு முன்னாடி

அம்மா இறந்துட்டாங்க. அனந்தகுமார் என்பவரைக் காதலித்து நான் திருமணம் செய்தேன். 2002-ம் வருடம் ஏப்ரல் மாதம் எங்களுக்குள் ஒரு சின்னத் தகராறு வந்துச்சு. அதனால் கணவர்கிட்ட சொல்லாம, பேரூருக்குச் சென்று எங்க பெரியப்பா சண்முகராஜா வீட்டில் 19 நாட்கள் தங்கினேன். மனசு வெறுத்துப்போய் அங்கே யாரிடமும் சொல்லாமல் கிளம்பி, மதுரையில் அம்மாவுக்கு வேண்டிய ஒருத்தர் வீட்டில் நான்கு நாட்கள் தங்கினேன்.

இதற்கிடையில், அனந்தகுமார் பேரூருக்குப்போய் என்னைத் தேடியிருக்கார். 'அவளைக் காணலை’னு அங்க உள்ளவங்க சொன்னதும், ஸ்ரீவைகுண்டம் மகளிர் போலீஸில் புகார் செய்துட்டு திருப்பூருக்குப் போயிட்டார். அதைத் தொடர்ந்து நானும் திருப்பூருக்குப் போயிட்டேன். என் வீட்டுக்காரர் இப்போது துபாயில் இருக்கிறார். ஒன்பது வருசத்துக்கு பிறகு கடந்த 8-ம் தேதி, 'ஊருக்குப் போயிட்டு வரலாமே’னு இரண்டு குழந்தைகளோட பேரூருக்கு வந்தேன். அங்கே என்னைப் பார்த்து எல்லாரும் ஆச்சர்யப்பட்டு, 'நீ இன்னமும் உயிரோடு இருக்கிறியா?’ன்னு கேட்டாங்க. என்னன்னு விசாரிச்சப்பதான் உண்மை தெரிஞ்சது. என் கணவர் புகார் கொடுத்த சமயத்தில், முறப்பநாடு பக்கத்தில், ஒரு உடல் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் போலீஸுக்கு கிடைச்சிருக்கு. அதை நான்தான்னு முடிவு செஞ்ச போலீஸ், அந்த வழக்கில் கோவில்பிள்ளை, பாலசுப்பிரமணியன், குருநாதன், தாசன் நான்கு பேரையும் ஜெயிலுக்குள்ள தள்ளிட்டாங்க. நல்லவேளையா இப்ப அவங்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது...'' என்றார், ஆச்சர்யம் மறையாமல்!

கைதாகி சிறையில் இருந்து வெளியில் வந்திருக்கும் பாலசுப்பிரமணியனை

சந்தித்தோம். ''போலீஸாரின் தவறான நடவடிக்கையால் எங்களுடைய எதிர்காலமே இருண்டு போச்சுங்க. கோவில்பிள்ளைக்கும் மணிமேகலையின் பெரியப்பா சண்முகராஜாவுக்கும் நிலப் பிரச்னை உண்டு. அதை சந்தேகப்பட்ட போலீஸார், அவங்களோட சொந்தக்காரர்களான எங்களை அடிச்சுத் துவைச்சு கொலையை ஒப்புக்கொள்ள வைச்சுட்டாங்க. அப்போ ரூரல் டி.எஸ்.பி-யா இருந்த மூர்த்திதான் இதற்கெல்லாம் காரணம். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் எல்லாருமே, 'இது தப்புதான்’னு சொன்னாங்க. ஆனா, டி.எஸ்.பி-யும் அவர் கூடவே வர்றவங்களும் சம்மதிக்கலை. இப்போ உண்மை வெளிச்சத்தில் வந்துடுச்சு. போலீஸாரின் தவறான நடவடிக்கையால் நாங்கள் தேவை இல்லாமல் 90 நாட்கள் ஜெயிலில் கஷ்டப்பட்டோம். குற்றத்தை நிரூபிக்க முடியாமல் போனதால் எங்களை வழக்கில் இருந்து விடுதலை செய்தது கோர்ட். எங்களை கொலைகாரர்களாக்கிய போலீஸ் அதிகாரிகள் பற்றி எந்த கோர்ட்டிலும் இதை சொல்லத் தயாராக இருக்கிறோம்...'' என்றார் வேகமாக.

இந்த நான்கு பேர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் திலக், ''விசாரணையின் போதே, 'மணிமேகலை உயிரோடுதான் இருப்பார். இறந்தது அவர் இல்லை’ என்று நான் கோர்ட்டில் வாதாடினேன். நான் சொன்னபடியே அந்தப் பெண் உயிரோடுதான் இருக்கிறார். எரித்துக் கொலை செய்யப்பட்ட பெண் யார் எனக் கண்டுபிடிக்க முடியாத போலீஸ், இரண்டு வழக்குகளையும் ஒரே நேரத்தில் முடிக்க நாடகமாடி, இப்போது வசமாக மாட்டிக் கொண்டார்கள். இதை நாங்க சும்மா விடப்போறதில்லை. பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பொய்யான வழக்குப் பதிவு

செய்து அவர்கள் அலைக்கழிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே, 318-வது பிரிவின்படி அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். தவறான நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போகிறோம்!'' என்றார்

அப்போது ரூரல் டி.எஸ்.பி-யாக இருந்த மூர்த்தி இப்போது திருவாரூர் மாவட்ட எஸ்.பி. அவரிடம் பேசினோம். ''இந்தத் தகவல் வந்ததும் தூத்துக்குடி போலீஸ்காரர்களிடம், 'எப்படி ரெக்கார்ட் செய்யப்பட்டிருக்கு?’ எனக் கேட்டேன். 'காணாமல்போன பெண்ணின் போட்டோவையும், இறந்து கிடந்த பெண்ணின் தலைப்பகுதியையும் 'சூப்பர் இம்போசிஷன் டெக்னாலஜி’ மூலம் டெஸ்ட் எடுத்து சரி பார்த்ததாகச் சொன்னார்கள்’ என்றவர், ''இந்த வழக்கில் இன்வெஸ்டிகேஷன் ஆபீஸர் நான் கிடையாது. அதனால், இது சம்பந்தமா எந்தக் கருத்தும் சொல்லக் கூடாது!'' என்றார்.

நெல்லை சரக டி.ஐ.ஜி-யான சண்முகராஜேஷ்வரன் நம்மிடம், ''காணாமல் போனதாக ஸ்ரீவைகுண்டம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்கப்பட்ட புகார், எரித்துக் கொலை செய்யப்பட்டிருந்த பெண் குறித்து முறப்பநாடு ஸ்டேஷனில் பதியப்பட்ட வழக்கு, இப்போது தவறு நடந்திருப்பதாக சொல்லப்படுவது’ என மூன்று விதமாக சிறப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. விசாரணை முடிந்த பிறகே முழு விவரங்கள் தெரியும்...'' என்றார்.

அதேபோல் சில போலீஸ் அதிகாரிகள், ''வந்திருப்பது மணிமேகலைதானா என்பது முதலில் விசாரிக்க வேண்டும். அதுக்குப் பிறகுதான் மற்ற விசாரணையும் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்!'' என்கிறார்கள்.

இப்போதாவது நல்லா விசாரியுங்க சார்!

- எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள்: ஏ.சிதம்பரம்