Published:Updated:

''மின்வெட்டை சரிசெய்ய முடியவில்லை என்றால் நடையைக் கட்டு!''

சென்னையில் கொந்தளித்த தி.மு.க.

''மின்வெட்டை சரிசெய்ய முடியவில்லை என்றால் நடையைக் கட்டு!''

சென்னையில் கொந்தளித்த தி.மு.க.

Published:Updated:
##~##
''மின்வெட்டை சரிசெய்ய முடியவில்லை என்றால் நடையைக் கட்டு!''

மிழ்நாட்டில் வரலாறு காணாத மின்வெட்டு வாட்டி வதைக்கிறது. சென் னை​யில் இரண்டு மணி நேரமும் மற்ற இடங்களில் 18 மணி நேரம் வரையிலும் நீடிக்கிறது. ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் மின்வெட்டு சரியாகிவிடும் என்ற முதல்வர் ஜெயலலிதா இப்போது 2013-ல் பிரச்னை தீர்ந்துவிடும் என்று கூறியுள்ளார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், 'மின்சாரம் கொடுக்க முடிய​வில்லை என்றால் ஆட்சியைவிட்டு இறங்கு... நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று களத்தில் இறங்கிய தி.மு.க., மின்​வெட்டைக் கண்டித்து கடந்த 18-ம் தேதி, மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத் தியது.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தென்சென்னை, வட சென்னை மாவட்​ட தி.மு.க. சார்பில் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம். ''பாழாய்போன ஜெயா ஆட்சியில் நோயாய்ப்போனது தமிழ்நாடு. நாடே இருண்டு​ போனது  ஜெயா ஆட்சியில். இருள் தொலைந்திட... ஹிட்லர் ஜெ. ஆட்சி ஓய்ந்திட...'' என்று, முன்னாள் சென்னை மேயர் சுப்பிரமணியன் கோஷம் போட்டதை கருணா​நிதி வெகுவாக ரசித்தார்.

''மின்வெட்டை சரிசெய்ய முடியவில்லை என்றால் நடையைக் கட்டு!''

முதலில், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.பி.சற்குணபாண்டியன் பேசினார். ''மின்வெட்டை

''மின்வெட்டை சரிசெய்ய முடியவில்லை என்றால் நடையைக் கட்டு!''

சரி செய் வேன் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சியைப் பிடித்தார் ஜெயலலிதா. தி.மு.க-வினர் மீது பொய் வழக்குப் போடவே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது. ஜெயலலிதாவின் ஆணவத்தை ஒடுக்கும் வகையில் தமிழகமே திரண்டு எழுந்து ஆர்ப்பாட்டம் நடத்து​கிறது. மின்வெட்டை சரிசெய்ய முடிய வில்லை என்றால், வீட்டுக்கு நடையைக் கட்டு. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என்றார்.

சுப.வீரபாண்டியன் பேசுகையில், ''தமிழ்நாட்டுக்கு இனி வெளிச்சம் சூரியனால் மட்டுமே என்பது உறுதியாகி விட்டது. கிராமங்களில் மின்சாரம் செல்லும் கம்பிகளில்தான் இப்போது துணி உலர்த்துகிறார்கள். தெளியவைத்து அடிப்பதுபோல ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறிது நேரம் மின்சாரம் விடுகிறார்கள். இனிமேல் குதிரை சிறகுக்கு ஓட்டுப் போட மாட்டோம் என்று மக்கள் முடிவு எடுத்து விட்டனர். இப்போது இரட்டை இலை சின்னத்தைக் குதிரை சிறகுகள் என்றுதான் அவர்களே சொல்கிறார்கள்'' என்றார் கிண்டலாக.

குஷ்பு பேசுவார் என்று அறிவிக்கப்பட்டதும் விசில் சத்தம் காதைப் பிளந்தது. ''ஆட்சிக்கு வந்தவுடன் மூன்று மாதங்களில் மின்வெட்டுப் பிரச்னை சரியாகிவிடும் என்று ஜெயலலிதா அம்மையார் சொன்னார். 18 மாதங்கள் ஆகிவிட்டன. குறையும் என்று பார்த்தால், மின்வெட்டு கூடிக்கொண்டே போகிறது. மாணவர்கள் படிக்க முடியவில்லை. தொழிற்சாலைகள் மூடியே கிடக்கின்றன. தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. குடும்பங்கள் கஷ்டத்தில் தவிக்கின்றன. விவசாயம் முடங்கி விட்டது.

ஆட்சிக்கு வந்தவுடன் வெளிச்சம் வரும் என்றார். ஆனால், தமிழ்நாடே இருட்டில் கிடக்கிறது. தமிழ்​நாட்டுக்கு வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்றால் கலைஞர் ஆட்சிக்கு வர வேண்டும்.

ஆளும் அ.தி.மு.க-வுக்கு  சொரணை இருந்தால் உடனே மின்சாரம் வழங்க வேண்டும். மின்சாரம் கேட்டு கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்கள். மின்சாரம் இல்லாததற்கு யார் மீது எல்லாமோ பழி போட்டு, கடைசியில் கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்கள். தமிழ்நாடு இருட்டில் இருப்பது பற்றி கவலை இருப்பதாகவே தெரியவில்லை. இதற்கு ஜெயலலிதா அம்மையார் பதில் சொல்லியே ஆக வேண்டும்'' என்று விளாசினார்.

''மின்வெட்டை சரிசெய்ய முடியவில்லை என்றால் நடையைக் கட்டு!''

நிறைவாகப் பேசிய கருணாநிதி, கலெக்டர்கள் - போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடப்பதில் இருந்தே தொடங்கினார். ''ஒன்றரை ஆண்டு ஆட்சியில் 928 கொலைகள், 768 கொள்ளைகள், 476 செயின் பறிப்புகள், 480 வழிப்பறி மோசடிகள். இப்படிப்பட்ட ஆட்சியைத்தான் அகில இந்தியாவில் எங்கும் இல்லாத அமைதியான ஆட்சி என்று மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் முழங்கியிருக்கிறார். தமிழகத்தில் அமல் படுத்துவதாகக் கூறியுள்ள மின் திட்டங்களை நீதி மன்றம் கண்காணிக்கும் என்று கூறியுள்ளது. அரசின் நேர்மை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.

வீரபாண்டி ஆறுமுகத்தை ஐந்தாறு சிறைகளுக்கு மாற்றி அலைக்கழித்து, அதனால் அவர் உடல் நலம் குன்றி உயிரையே விட்டுவிட்டார். இந்த அரசின் கொடூரத்துக்கு எல்லையே இல்லை. இதெற்கெல்லாம் பயப்பட மாட்டோம். கொடுமைகளை இந்த அளவோடு நிறுத்துங்கள். 'பொறுத்தது போதும்... பொங்கி எழுவோம்’ என்ற நிலைமைக்கு ஆளாக்​காதீர்கள்'' என்று எச்சரித்தார்.

ஆளும் கட்சிக்கு தி.மு.க. ஷாக் கொடுத்​துள்ளது.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

படங்கள்: ஆ.முத்துக்குமார்