Published:Updated:

தி.மு.க-வுடன் கூட்டு... கான்ட்ராக்ட் கொள்ளை!

மீஞ்சூர் குமுறல்

தி.மு.க-வுடன் கூட்டு... கான்ட்ராக்ட் கொள்ளை!

மீஞ்சூர் குமுறல்

Published:Updated:
##~##
தி.மு.க-வுடன் கூட்டு... கான்ட்ராக்ட் கொள்ளை!

'மீஞ்சூர் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர்களான எங்களுக்கு, எங்கள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.ஏ.மோகன வடிவேல் துரோகம் செய்கிறார். தி.மு.க-வினரோடு ரகசிய​க் கூட்டணி வைத்துக்கொண்டு எங்களுக்கு கான்ட்ராக்ட் கொடுக்காமல் ஏமாற்றுகிறார்’ என்ற குமுறலோடு ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044 66808002) ஒரு பதிவு. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சம்பந்தப்பட்ட நபரைத் தேடிச்சென்று பேசினோம். ''என் பெயரைச் சொல்லாமல் எழுதுங்க சார். அவர் செய்யும் தவறுகளைத் தட்டிக்கேட்பவர்களை எல்லாம், ஏதாவது திட்டம் போட்டு, கட்சியைவிட்டே தூக்கிவிடுகிறார். எனக்கும் அந்த நிலைமை வந்துடக் கூடாது'' என்றபடியே பேசத் தொடங்கினார்.

''மீஞ்சூர் ஒன்றியத்தில் மொத்தம் 26 கவுன்சிலர்​கள் இருக்காங்க. அதில் சுயேச்சை கவுன்சிலர் நான்கு பேர். மற்ற அனைவரும் அ.தி.மு.க-வினர்​தான். அதில் இப்போது, இரண்டு பேர்தான் ஒன்றியச் செயலாளர் மோகனவடிவேலுக்கு ஆதரவா இருக்காங்க. மற்ற அனைவரும் அவருக்கு எதிராகத்தான் இருக்கோம். காரணம், தி.மு.க. ஒன்றியக் கவுன்சிலரான கே.ஜி.பாஸ்கர் சுந்தரமும், மோகன வடிவேலும் சேர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு எந்த கான்ட் ராக்ட்டும் கொடுப்பது கிடையாது. பாஸ்கர் சுந்தரம் யாரைக் கை காட்டுகிறாரோ, அவருக்குத்தான் கான்ட்ராக்ட் கிடைக்கிறது. அவர் தி.மு.க-காரர்களுக்குத்தான் கான்ட்​ராக்ட் வாங்கித் தருகிறார். ஒவ் வொரு கான்ட்ராக்ட்டிலும் ஏகப்பட்ட பணம் லஞ்சமாக விளையாடுகிறது. எங்களுக்கும் கான்ட்ராக்ட் கொடுங்கள் என்று கேட்டுக்கேட்டு ஓய்ந்து விட்டோம். இது​வரை ஒரு கான்ட்ராக்ட்கூட எங்களுக்குக் கொடுத்தது இல்லை. அப்புறம் நாங்க எப்படித்​தான் பிழைக்கிறது?

தி.மு.க-வுடன் கூட்டு... கான்ட்ராக்ட் கொள்ளை!
தி.மு.க-வுடன் கூட்டு... கான்ட்ராக்ட் கொள்ளை!

மோகன வடிவேல் என்ன செய்யணும், எப்படிச் செய்யணும்னு எல்லாத்தையும் சொல்லிக்​கொடுக்​கிறது பாஸ்கர் சுந்தரம்தான். கழகத்துக்காக உழைத்த பல கான்ட்ராக்டர்கள் இருக்கும்போது, பொதுப் பணித் துறையில் வந்த சுமார் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள 17 வேலைகளை தி.மு.க-வைச் சேர்ந்த இருவருக்கு மட்டுமே கொடுத்துட்டாங்க. அதே​போல, சத்துணவு முட்டை சப்ளை செய்யும் கான்ட்ராக்ட்டையும் தி.மு.க-காரங்களுக்கே கொடுத்திருக்காங்க.

மோகன வடிவேல், ஒன்றியக் கவுன்சிலர் பதவியில் இருக்கிறார். அவருடைய மனைவி கலைச்செல்வி, மீஞ்சூர் ஒன்றியக் குழுத் தலை​வராக இருக்காங்க. இரண்டு பேரும் எங்களை ஒதுக்குறாங்க. இதுவரை கட்சிக்காக இவங்க என்ன செய்திருக்காங்கன்னு பார்த்தா, ஒண்ணுமே இல்லை. அம்மா அறிவிக்கிற கூட்டங்களைக்கூட நடத்துறது கிடையாது. எவ்வளவோ நலத்திட்டங்கள் இருந்தும், அதைச் செயல்படுத்துவது கிடையாது.

இவரைப்பற்றிய எல்லா விஷயங்களையும் எத்தனையோ முறை அம்மாவுக்கு அனுப்பி இருக்​கோம். ஆனால், கார்டனில் இருக்கும் முக்கிய நபரைப் பிடிச்சு எந்தத் தகவலும் அம்மாவிடம் போகாமல் பார்த்துக்கொள்கிறார். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் உங்களைத் தேடி வந்திருக்கிறோம்'' என்றனர் ஆதங்கமாக.

தி.மு.க-வுடன் கூட்டு... கான்ட்ராக்ட் கொள்ளை!

இதுகுறித்து, மோகன வடிவேலிடம் பேசினோம். ''சமீபத்தில் கட்சியில் இருந்து சிலரை அம்மா தூக்கினாங்க. அதுக்கு நான் என்ன சார் செய்ய முடியும்? அந்தக் கோபத்தை என் மீது காட்டுகிறார்கள். எப்படியாவது என்னை ஒன்றியச் செயலாளர் பதவியில் இருந்து தூக்கிட்டு, அங்கே அவங்க வரணும்னு நினைக்கிறாங்க.  எந்த கவுன்சிலருக்கும் நான் கான்ட்ராக்ட் கொடுக்கலைன்னு அவங்க சொல்றது பொய். மொத்தம் 2.75 கோடி ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு கவுன்சிலருக்கும் 11 லட்சம் ரூபாய்க்கு கான்ட்ராக்ட் கொடுத்து இருக்கேன். ஆனா, எதுவுமே கொடுக்கலைன்னு ஏன் பொய் சொல்​றாங்கன்னு தெரியலை. அவங்களுக்குக் கொடுக்கிற கான்ட்​ராக்ட்டில் சிங்கிள் டீ குடிக்கக்கூட காசு வாங்கினது கிடையாது. தி.மு.க. ஒன்றியக் கவுன்சிலருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் மீது எதாவது பழியை சுமத்தி கட்சியில் கெட்ட பெயர் உருவாக்கணும்னு இப்படி எல்லாம் பண்றாங்க'' என்றார் கோபமாக.

தி.மு.க. ஒன்றியச் செயலாளரான கே.ஜி.பாஸ்கர் சுந்தரத்தைத் தொடர்புகொண்டோம். ''எனக்கும் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் மோகன வடிவேலுவுக்கும் எந்த நட்பும் இல்லை. என்னோட தொடர்புபடுத்தி பேசினால், அவரைக் கட்சியில இருந்து நீக்கிடுவாங்கன்னு தெரிஞ்சுகிட்டு, அ.தி.மு.க-காரங்க சிலர் இப்படிப் பேசுறாங்க. ஒரு திருமண வீட்டில் இரண்டு பேரும் யதார்த்தமா சந்திச்சுப் பேசிய போட்டோவை வச்சுக்கிட்டு, அவரை மிரட்டுறாங்கன்னு கேள்விப்பட்டேன்'' என்றார்.

மக்கள் பணி செய்வதைவிட்டு, கான்ட்ராக்ட்​டுக்காக அடித்துக்கொள்ளும் கொடுமையை என்னவென்று சொல்ல..?

- கவிமணி