Published:Updated:

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி!

ஆசைப்படுகிறார் சங்கரய்யா

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி!

ஆசைப்படுகிறார் சங்கரய்யா

Published:Updated:
##~##
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி!

திருவண்ணாமலையில் விவசாயிகள் ஒன்றுகூடி ஆர்ப்பரித்து, தங்கள் பலத்தைக் காட்டி இருக்கின்றனர். தண்ணீர்ப் பிரச்னை, தொழில் துறை சிக்கல்கள், மின்வெட்டு, அன்னிய முதலீடு போன்ற பல பிரச் னைகளைக் கையில் எடுத்த செங்கொடியினர், மதுரை ஆதீனத்தையும் விட்டு வைக்கவில்லை! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவண்ணாமலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 28-வது மாநில மாநாடு கடந்த 15, 16, 17 நாட்களில் நடைபெற்றது. மாநாட்டைத் தொடங்கி வைத்த அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் பிள்ளை, ''வருமானம் குறைந்த தொழிலாக விவசாயம் மாறிவிட்டது. பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்காக விளைநிலங்கள் கையகப் படுத்தப்படுகின்றன. விளைபொருட்களுக்கு நியா யமான விலை கிடைக்கவில்லை. வங்கிகள் மூலம் நான்கு சதவிகிதத்துக்கும் குறைவான வட்டியில் விவ சாயத்​துக்குக் கடன் வழங்க வேண்டும். இந்தியாவில் ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு 3,300 ரூபாய் மட்டுமே மானியமாக வழங்கப்படுகிறது. ஜப்பானில் 1.30 லட்சமும் அமெரிக்காவில் 1.10 லட்சமும் கிடைக்​கிறது. தொழில் துறை, சேவைத் துறைகளுக்கு வழங்குவதைப்போல விவசாயத்துக்கும் மானியத்தை அதிகரிக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் ஆண்டுதோறும் 26 லட்சம் கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. அரசின் தவறான கொள்கைகளால் சாதாரண மக்களிடம் இருந்து விவ சாயம் அன்னியமாகிறது'' என்று பொங்கி​னார்.

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி!

தமிழகத்தின் உயிர்நாடியாகத் திகழும் காவிரி பாசனப் பகுதிக்கு கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறக்காததால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட் டங்களில் மட்டும் 14 லட்சம் ஏக்கர் நெற்பயிர் கருகி உள்ளது. உடனடியாக 12 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டும். தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தாருக்கு தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். காவிரி பாசனப் பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாயும், வேலை இழந்து தவிக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும். விவசாயிகளின் பயிர்க் கடனை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் கடுமையான மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பற்றாக்குறையான 4,000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். விவசாயம், தொழிற் சாலைகளுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும். தர்மபுரியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்த ரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி!

  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுக்கா முக்குடி, எருக்கலி, வெள்ளூர் ஆகிய இடங்களில் சிவகங்கை ஜமீனால் மதுரை ஆதீனத்துக்கு நிலவரி வசூல் செய்ய சுமார் 1,200 ஏக்கர் நிலம் அனுமதிக்​கப்பட்டது. அதை மதுரை ஆதீனம் தனது பெயருக்குப் பட்டா போட்டுக்கொண்டார். அங்கு சாகுபடி செய்து வந்த விவசாயிகளுக்கு நிலத்தை முறைப்படுத்தித் திரும்ப வழங்க வேண்டும் என்பது இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்களில் ஒன்று.  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலச் செயலாளர் சங்கரய்யாவின் பேச்சு உணர்ச்சிகரமாக இருந்தது. ''இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நம் இயக்கத்தினரின் பங்கு அதிகம். ஆனால் இன்று அன்னியர்கள் அதிகாரப்பூர்வமாக உள்ளே நுழை​கிறார்கள். அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது. அன்னியர்​களின் வருகையை இந்தியாவில் நிலைநாட்ட மன்மோகன்சிங் அரசு முயற்சி செய்கிறது. சிறு வியாபாரிகளின் வாழ்க்கையைப் பாதுகாக்க உங்களுக்குப் பின்னே செங்கொடி இயக்கம் இருக்கிறது என்று உறுதி கூறுகிறோம். அயல்நாட்டு முதலாளிகளும் இந்தியப் பெரு முதலாளிகளும் வாழ்வதற்கு மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் செயல்படுகிறார்கள். நம்முடைய நாட்டின் பொதுத் துறைப் பங்குகளைத் தனியார்மயமாக்குகிறார்கள். இன்சூரன்ஸ், வங்கித் துறைகளில் அயல்நாட்டு முதலாளிகளுக்குக் கதவைத் திறந்து விடுகிறார்கள். இன்றைக்கு வேலையில்லாத் திண்டாட்டம், மின் சாரத் தட்டுப்பாடு, காவிரி நதிநீர்ப் பிரச்னை போன்றவை தீர்க்கப்படாமலே இருக்கிறது.

தர்மபுரியில் ஒரு பிற்படுத்தப்பட்ட பெண் தாழ்த்தப்பட்ட பையனைத் திருமணம் செய்து​கொண்டதற்காக பல கிராமங்கள் சூறையாடப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் தெருவில் நிற்கிறார்கள். பெரியார், அண்ணா கொள்கைகளைப் பின்பற்றும் கட்சியினர் கலப்புத் திருமணங்களை ஆதரிக்க வேண்டும். இதன் மூலம்தான் தீண்டாமைக் கொடுமைக்கு முடிவு கட்ட முடியும். தமிழ்நாட்டு அரசியலை இடதுசாரிகள் பாதையில் திருப்பி, மேற்கு வங்கத்தைப்போல், கேரளத்தைப்போல் வெற்றிக் கொடி நாட்டப் போராடுவோம்'' என்று ஆவேசமாக பேசினார்.

இவரது பேச்சு விவசாயிகள் அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்தது!

- கோ.செந்தில்குமார்

படங்கள்: பா.கந்தகுமார்