Published:Updated:

ரூ.5,000 போதாது... ரூ. 25,000 வேண்டும்!

டெல்டா கோரிக்கை

ரூ.5,000 போதாது... ரூ. 25,000 வேண்டும்!

டெல்டா கோரிக்கை

Published:Updated:
##~##
ரூ.5,000 போதாது... ரூ. 25,000 வேண்டும்!

ழக்கமாக டிசம்பர் மாதத்தில் கடல்போல் பரந்து விரிந்து அலையடிக்கும் மேட்டூர் அணை, இப்போது தண்ணீர் இன்றி வறண்டு குட்டைபோல் காட்சி அளிக்கிறது. இனி கர்நாடக அரசு மனது வைத்து தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே அணைக்குத் தண்ணீர் வரும். இந்தச் சூழ்நிலையில் என்ன ஆகும் டெல்டா? 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனைத்து விவசாயச் சங்கங்களின் கூட்ட மைப்பின் தலைவர் வலிவலம் சேரன், ''பயிரிடப்பட்ட சம்பாவைக் காப்பாற்ற விவசாயிகள் தரப்பில் எல் லாமும் செய்து பார்த்தாகி விட்டது. எப்படியும் ஆற்றில் தண்ணீர் வரும் அல்லது, மழையாவது பெய்துவிடும் என்று நம்பினர். ஜெனரேட்டர் வைத்துக்கூட வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சினர் விவசாயிகள். இனி, அதுவும் இல்லை என்ற நிலை யில் அவர்களுக்கு மற்றவர்களைவிட கூடுதல் நஷ்டம்தான். வெறுமே வாய்க்கால் பாசனத்தை மட்டுமே நம்பியவர்களின் பயிர்கள் எல்லாம் கடந்த மாதமே கருகிவிட்டன. மேட்டூரில் இதுவரை திறந்து விடப்பட்ட 10 ஆயிரம் கன அடித் தண்ணீரும் ஆற்றின் அடியில்தான் போனது. அதை வயல்களுக்குப் பாய்ச்ச முடியவில்லை. அதனால், வயல்களில் ஆடு, மாடுகளை விட்டு மேய்த்துவிட்டனர். பள்ளமான இடங்களில் கொஞ்சம் தண்ணீர் இருந் ததால், இதுவரை தண்ணீர் இறைத்து வந்தனர். இனி, தண்ணீர் வராது என்பதால், அவையும் காய்ந்து முற்றிலுமாகச் சாகுபடி என்பதே இல்லாமல் போய்விடும். எல்லாமும் முடிந்துபோய் விட்டது. இனி, என்ன சொல்லியும் எங்கள் வேதனை தீரப்போவது இல்லை'' என்றார்.  

ரூ.5,000 போதாது... ரூ. 25,000 வேண்டும்!

எந்த அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்படும் என்பது பற்றி சொல்கிறார் டெல்டா விவசாயிகள்

ரூ.5,000 போதாது... ரூ. 25,000 வேண்டும்!

கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம். ''உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கொடுத்த சாகுபடிப் பரப்பு 14 லட்சத்து 95 ஆயிரம் ஏக்கர். அதன்படி பார்த்தால் கிட்டத்தட்ட 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மகசூல் இழப்பு ஏற்படும். அதில் நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே 2,750 கோடி ரூபாய் மகசூல் இழப்பு ஏற்படும். இதன்மூலம் தனிப்பட்ட விவசாயி பாதிக்கப்படுவது ஒரு பக்கம் என்றால், டெல்டாவின் பணச் சுழற்சி மற்றும் மாநிலத்தின் பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்படும். இப்போதே 80 சதவிகிதத் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். சென்ற ஆண்டு 'தானே’ புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை வேறு எந்த வருமானமும் இல்லாத நிலையில், இந்த ஆண்டும் வருமான இழப்பு ஏற்பட்டு இருப்பதால், இனி கரையேறவே முடியாத அளவுக்குக் கடனில் மூழ்குகிறார்கள். பயிர்கள் கருகி​யதைப் பார்த்த பல விவசாயிகள் இப்போது மனப்பாதிப்பில் இருக்கிறார்கள். இனி, தங்கள் எதிர்காலம் குறித்த கவலையில் எத் தனை விவசாயிகள் மனமொடியப் போகி​றார்களோ என்ற கவலை ஏற்படுகிறது'' என்று கூறுகிறார்.

விவசாயிகளின் கவலைகளைப் போக்கும் வழியைச் சொல்கிறார் தமிழ்நாடு விவசாயி​கள் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சாமி.நடராஜன். ''இழப்பீடு வழங்குவதும், அவர்கள் வாங்கி இருக்கும் கடன்களைத் தள்ளுபடி செய்வதும்தான் எஞ்சியிருக்கும் வழிகள். அதுவும் மாநில அரசு ஏற்கெனவே அறிவித்தபடி ஏக்கருக்கு 5,000 ரூபாயை மட்டும் வழங்கினால் போதாது. அதேநேரம், முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளபடி 40 ஆயிரம்

ரூ.5,000 போதாது... ரூ. 25,000 வேண்டும்!

ரூபாயையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், அவர் முதல்வராக இருந்தபோது ஏற்பட்ட பாதிப்பைப் போக்க அவர் கொடுத்தது 3,000 ரூபாய்தான் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். சாகுபடிக்காக இதுவரை ஆகியிருக்கும் செலவு 18 ஆயிரம் ரூபாய். அதோடு மேற்கொண்டு 7,000 ரூபாயைச் சேர்த்து 25 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. தண்ணீர் வராததால் சாகுபடி செய்யாமல் போட்டு வைத்திருக்கும் நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும். அதோடு செய்ய வேண்டிய இன் னொரு முக்கிய விஷயம், கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கி இருக்கும் விவசாயக் கடன் கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்கிறார் சாமி.நடராஜன்.

''பயிர்க் காப்பீட்டின் மூலமாக 8,674 ரூபாய் கிடைக்கும் என்று மாநில அரசு சொல்வதும் நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத விஷயம். மாதிரி அறுவடை மூலமாகக் கணக்கிடப்பட்டு, அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் இழப்பீடு வழங்கப்படும். அதிலும், முழுமையான பாதிப்பு என்றாலே 90 சதவிகிதத் தொகை மட்டும்தான் வழங்கப்படும். அதனால், அதில் எல்லா விவசாயிகளுக்கும் பலன் கிடைத்து விடும் என்று சொல்ல முடியாது'' என்றும் விவசாய சங்க பிரமுகர்கள் சொல்கிறார்கள்.

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் தாமோதரனிடம் பேசி​னோம். ''சம்பா பயிரைக் காப் பாற்ற 12 மணி நேர மும்முனை மின்சாரம், டீசலுக்கு மானியம், பல வகை நீர்த் தெளிப்பான்கள், நீர் கொண்டுபோக குழாய்கள், நடமாடும் தெளிப்பான்கள் என்று முதல்வர், எல்லாவித முயற்சியையும் எடுத்து வருகிறார்கள். அதுதவிர  அனைத்து விவசாயிகளையும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்தாகிவிட்டது. பயிர் இழப்பு ஏற்பட்டால் அது ஒட்டு​மொத்தமான பாதிப்பாக இருப்பதால், கணக் கெடுப்பதில் குறைபாடு இருக்காது. விவசாயிகளின் நஷ்டங்கள் ஆரா யப்பட்டு வாழ்வாதாரம் பாது​காக் கப்படும்'' என்றார் ஆறுதலாக.

இந்த வாக்குறுதி ஓரளவாவது நிறைவேறினால்தான் விவசாயிகளுக்கு நம்பிக்கை வரும்!

- கரு.முத்து

படங்கள்: கே.குணசீலன்