Published:Updated:

தி.மு.க. கட்டடத்தில் 'களியாட்டம்'!

தர்மபுரி உவ்வே

தி.மு.க. கட்டடத்தில் 'களியாட்டம்'!

தர்மபுரி உவ்வே

Published:Updated:
##~##
தி.மு.க. கட்டடத்தில் 'களியாட்டம்'!

'பாதி கட்டப்பட்ட நிலையில் இருக்கும் தர்மபுரி தி.மு.க. அலுவலகத்தின் உள்ளே பல்வேறு உவ்வே சமாசாரங்கள் அரங்கேறுகின்றன’ -ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குப் (044-66808002) புகார் வர, விசாரணையில் இறங்கினோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தர்மபுரியில் தி.மு.க. அலுவலகம் கட்டுவதற்கு கடந்த 2007-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பாதிக் கட்டடம் கட்டிய நிலையில், கட்டுமானப் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டன. கடந்த மூன்று ஆண்டுகளாகவே கேட்பாரற்றுக்கிடக்கும் இந்தக் கட்டடத்தில்தான் தினமும் விதவிதமான அசிங்கங்​கள் அரங்கேறுவதாக புகார்கள்.

''ஆரம்பத்தில் ஒரு வாட்ச்மேன் இருந்தார். அவர் இருந்த வரை எந்தப் பிரச்னையும் இல்லை. அவர் இறந்த பிறகு, இங்கே அத்துமீறி வருபவர்களைக் கேள்விக் கேட்க ஆள் இல்லை. அதனால் பகலில் பலரும் டாஸ்மாக் சரக்குகளைக் கொண்டு வந்து பார் ஆக்குகிறார்கள். ஏகத்துக்கும் குடித்து பலரும் இங்கேயே மயங்கி விடுகின்றனர். போதை தலைக்கேறி ஆடை கழன்று நிர்வாணக் கோலத்தில் பலரும் கிடப்பது சகஜம். ரூம்களில் அவ்வப்போது பணம் வைத்து சூதாட்டமும் நடக்கிறது. பகலில் இந்தக் கூத்து என்றால், ராத்திரியில் நடக்கும் அசிங்கம் இதைவிட ஓவர். பொண்ணுங்களைக் கூட்டிக்கிட்டு பலர் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். இதற்காகத்​தானா தி.மு.க-வினர் இந்தக் கட்டடத்தைக் கட்டினார்கள்?'' என்று சுற்றி இருப்பவர்கள் கேட்கிறார்கள்.

தி.மு.க. கட்டடத்தில் 'களியாட்டம்'!
தி.மு.க. கட்டடத்தில் 'களியாட்டம்'!

இந்தக் கட்டடத்தை ஒட்டியே உழவர் சந்தை இருக்கிறது. சந்தைக்குக் காய்கறி கொண்டுவரும் விவசாயிகளில் பலர் முதல் நாள் இரவே வரு கிறார்கள். இவர்களில் பெண் விவசாயிகளும் உண்டு. இவர்கள் விடியும் வரை சந்தைத் திடலுக்கு உள்ளேயும், வாசலிலும் படுத்துத் தூங்குகிறார்கள். தி.மு.க. அலுவலகக் கட்டடத்துக்கு பெண்களைக் அழைத்து வரும் ஆட்கள், போதையில் உழவர் சந்தை வாசலில் தூங்கும் பெண் விவசாயிகளிடமும் சேட்டை செய்வதும், அது விவகாரம் ஆவதும் தொடர்ந்து நடக்கிறதாம்.

''தி.மு.க-வின் உட்கட்சி விவகாரம் காரணமாகத்தான் இந்தக் கட்டடம் முழுமையாகாமல் இருக்கிறதாம். அவர்களின் பிரச்னையால் எங்களை மாதிரி குடியிருப்புவாசிகள்தான் தர்மசங்கடத்துக்கு ஆளாகிறோம். செல்வாக்கு மிக்க கட்சியான தி.மு.க-வுக்காக கட்டப்பட்ட அலு வலகத்தில் நடக்கும் அசிங்கத்தை சம்பந்தப்பட்டவர்கள் தலையிட்டு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டனர்.

தி.மு.க. கட்டடத்தில் 'களியாட்டம்'!

கட்டுமானப் பணியை பாதி யில் நிறுத்திய உட்கட்சிப் பூசல் பற்றி தி.மு.க-வினர் சிலரிடம் கேட் டோம். ''முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தலைமையில் ஒரு தரப்பும், இறந்துபோன முன்னாள் எம்.எல்.ஏ-வான பெரியண்ணன் தலைமையில் ஒரு தரப்பும் செயல்பட்டாங்க. இவங்க சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க, மாவட்டக் கழகத்தை இரண்டாகப் பிரித்து தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக முல்லைவேந்தனையும், வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக பெரியண்ணனையும் தலைமை நியமித்தது. இங்கே 2007-ல் தளபதி ஸ்டாலின்தான் அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய நேரத்தில், கட்டடப் பணிகளை வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த பெரியண்ணன் கவனித்துவந்தார். கடந்த 2009-ல் உடல்நலக் கோளாறால்

தி.மு.க. கட்டடத்தில் 'களியாட்டம்'!

பெரியண்ணன் இறந்த பிறகு, அவருடைய மகன் இன்பசேகரன் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஆனார். ஆனால், கட்டடப் பணி தொடராமல் அப்படியே நின்றுபோனது. இதற்கிடையில், 'கட்டடம் அமைந்திருக்கும் இடம் தெற்கு மாவட்ட எல்லையில் இருக்கிறது. அதனால் அலுவலகத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று முல்லைவேந்தன் தரப்பு தலை மையிடம் கோரிக்கை வைத்தது.

'எங்க முயற்சியில் உருவான கட்டடத்தை எதிர்த் தரப்புக்குத் தர மாட்டோம்’ என்று வடக்கு மாவட்டத் தரப்பு கடுமையாக எதிர்க்கிறது. இந்தப் பஞ்சாயத்து காரணமாகத்தான் கட்டுமானப் பணி அப்படியே நிற்கிறது. கேட்பாரற்றுக் கிடப்பதால், இப்போது கண்ட அசிங்கங்கள் எல்லாம் அரங்கேறுகிறது. தலைமை தலையிட்டால்தான் தீர்வு பிறக்கும்'' என்று கட்சியின் உள்ளூர்ப் பிரமுகர்களே வேதனைப்பட்டனர்.

தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் முல்லைவேந்தனிடம் இதுபற்றி கேட்டோம். ''பெரியண்ணன்தான் அந்த அலுவலகத்துக்கான கட்டுமானப் பணிகளைக் கவனித்தார். அவர் மறைவால் பணிகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிகிறது. மீதி இருக்கும் பணிகளை நிறைவு செய்த பிறகுதான், அந்த அலுவலகத்தை யார் பயன்படுத்துவது என்பதைத் தலைமை முடிவு செய்யும்'' என்றார்.

வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இன்பசேகரனிடம் பேசினால், ''அப்பாவின் மறைவின்போது நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடரவில்லை. எங்கள் கட்சிக்கான அலுவலகத்​தில் இனி நீங்கள் குறிப்பிடுவது போன்ற அசிங்கங்கள் நடக்க அனுமதிக்க மாட் டோம். விரைவில், தலைமைக்குத் தெரிவித்து பணி​களை வேகமாக முடிக்க ஏற்பாடு செய்கிறேன்'' என்றார்.

இனியாவது கட்சி அலுவலகமாக மட்டும் அது இருக்கட்டும்!

- எஸ்.ராஜாசெல்லம்

படங்கள்: வி.ராஜேஷ்