Published:Updated:

ரயில் இல்லை என்றால், தேர்தல் இல்லை!

கொங்கு கொந்தளிப்பு

ரயில் இல்லை என்றால், தேர்தல் இல்லை!

கொங்கு கொந்தளிப்பு

Published:Updated:
##~##
ரயில் இல்லை என்றால், தேர்தல் இல்லை!

ரோடு - பழனிக்கு ரயில் பாதை கேட்டு 60 வருடங்களாகப் போராடும் கொங்கு மண்டல மக்களை, தொடர்ந்து ஏமாற்றி வருகிறது மத்திய அரசு. மத்திய அமைச்சர்களும், எம்.பி-க்களும் கண்டுகொள்ளாத நிலை யில், இனியும் ஏமாறத் தயாராக இல்லை எனக் குமுறும் மக்கள், வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்துப் போராட இருக்கிறார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக ஓர் அமைப்பை ஏற்படுத்திப் போராடி வரும் லிங்கம் சின்னச் சாமி, ''ஈரோடு - பழநி ரயில் பாதை 1915-ல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டது. இந்தத் திட் டத்தை நிறைவேற்ற வேண்டும் என 1952-ல் 'ஈரோடு - பழநி ரயில்வே விஸ்தரிப்பு மக்கள் பணிச்சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்திப் போராடினார் தியாகி குள்ளம்பாளையம் லிங்கசாமி கவுண்டர். எங்கள் பகுதி மக்களை அழைத்துக்கொண்டு டெல்லியில் முகாமிட்டு அன்றையப் பிரதமர்கள் நேரு முதல் வி.பி.சிங் வரை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். போராடிப் போராடி அவரும் எதையும் நிறைவேற்ற முடியாமல் மறைந்து விட்டார்.

ரயில் இல்லை என்றால், தேர்தல் இல்லை!

அதன்பிறகு, நாங்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தால் 2004-ல் மூன் றரைக் கோடி ரூபாயை ஒதுக்கியது தென்னக ரயில்வே. முதல் கட்டமாக சென்னிமலை, காங்கேயம், தாராபுரம், பழநி எனப் பாதை வரையறுத்து சர்வே செய்தனர். குறைந்தது ஐந்து ஆண்டுகளில் ரயில் வந்து விடும் என்று நம்பி

ரயில் இல்லை என்றால், தேர்தல் இல்லை!

இருந்தோம். ஆனால், திட்ட மதிப்பீடு செய்ததோடு சரி. அடுத்து எந்த நகர்வும் இல்லை. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் உலகப்புகழ் பெற்ற சென்னிமலை, காங்​கேயம் பகுதியில் தயாராகும் போர்வை, ஜமுக்காளங்கள், ஜவுளிகள், எண்ணை வித்துக்களை எளிதாக மற்ற பகுதிகளுக்குக் கொண்டு செல்ல முடியும்.

வருடம் முழுவதும் வட மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் ஈரோடு வரை ரயிலில் வந்து அங்கிருந்து பஸ்ஸில்தான் பழநிக்குப் போகிறார்கள். இந்தத் திட்டம் நிறைவேறினால், அரசுக்கு வருவாய் தரக்கூடிய பாதையாக இது அமையும். இதைப் போராடிப் பெற வேண்டிய தமிழக எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் மௌனிகளாக இருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது முதல்வர் ஜெயலலிதா, 'எங் கள் கூட்டணிக் கட்சி ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்திக்கு வாக்களித்தால், ஈரோடு - பழநி ரயில் பாதை அமைத்துக்கொடுக்கப் போராடுவோம்’ என பேசினார். ஆனால், வெற்றி பெற்ற கணேசமூர்த்தி இந்தக் கோரிக்கை குறித்து நாடாளுமன்றத்திலும் பேசவில்லை; நாங்கள் நடத்திய போராட்டத்திலும் கலந்து​கொள்ளவில்லை. இதேநிலை தொடர்ந்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப்​போகிறோம். அப்போதாவது கட்சிகளும் அதிகாரிகளும் எங்கள் கோரிக்கையை நிறை வேற்றுகிறார்களா என பார்க்கலாம்'' என்று வேதனைப்பட்டார்.

சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் பேசினோம்.''ரயில் விட வேண்டும் என

தொடர்ந்து போராடுபவர்கள் ஒரு பக்கம். அதே நேரத்தில் நில ஆர்ஜிதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாய சங்கத்தினர் இன்னொரு பக்கம் எனத் தொடர் போராட்டத்தில் குதித்தனர். இதனால், ஈரோடு - பழநி ரயில் பாதைத் திட்டத்​துக்கு ஒதுக்க இருந்த நிதி, வட மாநிலங்களுக்குப் போய்விட்டது. ரயில்வே கையகப்படுத்தும் நிலங்களுக்கு நடப்பு (மார்க்கெட்) விலை கொடுக்க வேண்டும். நிலம் கொடுக்கும் குடும்பத்தாரின் நிலை அறிந்து ரயில்வே துறையில் வேலையும் கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இப்போது உத்தரவிட்டுள்ளது. இனி வேலைகள் தொடர வாய்ப்பு உள்ளது'' என்றனர்.

இதுகுறித்து, சேலம் கோட்ட கட்டுமானப் பிரிவு முதன்மைப் பொறியாளர் நந்தகுமார், ''திட்ட மதிப்பீடு தயாரித்து ரயில்வே அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. நிதி ஒதுக்கீடுக்காகக் காத்திருக்கிறோம். நிதி ஒதுக்கியதும் ரயில் பாதை அமைக்கும் பணி தொடங் கும்'' என்றார்.

தொகுதி எம்.பி-யான கணேசமூர்த்தி, ''இந்தத் திட்டத்தைப் பற்றி நான் எதுவுமே பேசவில்லை என்று கூறுவது சரியல்ல. திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என ரயில்வே அமைச்சர், ரயில்வே உயர் அதிகாரிகளைச் சந்தித்துத் தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறேன்'' என்றார்.

புல்லட் ரயில், தூரந்தோ ரயில் என்று வேகம் காட் டும் அரசு, மக்களின் 60 ஆண்டு கோரிக்கைக்கும் உடனே செவிசாய்க்க வேண்டும்!

- இரா.முத்துநாகு                      

படங்கள்: ரமேஷ் கந்தசாமி