Published:Updated:

''எங்கப்பா எடுத்த முடிவுதான் எங்களுக்கும்..''

சங்கரன்கோவிலில் விவசாயி தற்கொலை

''எங்கப்பா எடுத்த முடிவுதான் எங்களுக்கும்..''

சங்கரன்கோவிலில் விவசாயி தற்கொலை

Published:Updated:
##~##
''எங்கப்பா எடுத்த முடிவுதான் எங்களுக்கும்..''

ருவ மழை பெய்யவில்லை, ஆற்றுப் பாசனம் பொய்த்துப்போனது போன்ற காரணங்​களால் பயிர்கள் கருகுகின்றன. இந்த வேதனையைத் தாங்க முடியாமல் டெல் டா விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் பெருகு​கின்றன. அப்படிப்பட்ட ஒரு கொடுமை நெல்லை மாவட்டத்திலும் அரங்கேறி விட்டது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளப்பனேரி கிராமத்தில் அ.தி.மு.க. கிளைக் கழகச் செயலாளராக 25 ஆண்டுகளாக இருந்த எம்.ஜி.ஆர் என்ற செந்தூர் பாண்டியன்தான் உயிரை இழந்தவர்.

செந்தூர் பாண்டியனின் மனைவி முத்துவிடம் பேசினோம். ''எனக்கு மூன்று குழந்தைகள். கடன் வாங்கி

''எங்கப்பா எடுத்த முடிவுதான் எங்களுக்கும்..''

மூத்த மகளுக்குக் கல்யாணம் செஞ்சோம். அந்தக் கடனையே இன்னும் அடைக்க முடியல. மகன் மணிகண்டன் 10-வது முடிச்சதும் மேலே படிக்க ஆசைப்பட்டான். ஆனா, குடும்பக் கஷ்டம் காரணமா அவனைப் படிக்க வைக்க முடியல. அவன் சம்பாதிச்சாத்தான் வீட்டில் உலை வைக்க முடியும் என்பதால், திருப்பூருக்கு அனுப்பிட்டோம். கூலி வேலை செஞ்சு அவனுக்குக் கிடைக்கும் சம்பளத்தை நம்பித்தான் நாங்க இருக்​கோம். இன்னொரு பெண் குழந்தைக்கு மனவளர்ச்சி இல்லை.

என் கணவரின் குடும்பத்துக்குச் சொந்தமாக் கொஞ்சம் நிலம் இருக்கிறது. மழை பெய்ததும் அதை நம்பி கடன் வாங்கி விவசாயம் செய்தோம். நாங்க எதிர்பார்த்த மாதிரி தொடர்ந்து மழை பெய்யல. பயிர்கள் கருகிடுச்சு.

கிணற்றிலும் தண்ணீர் வற்றிப்​போயிருச்சு. அதனால் மறுபடியும் தெரிந் தவர்களிடம் கடன் வாங்கி ஆழ்துளைக் குழாய் போட்டோம். அதிலும் தண்

''எங்கப்பா எடுத்த முடிவுதான் எங்களுக்கும்..''

ணீர் கிடைக்கல. மொத்தம் மூணு லட் சத்துக்குக் கடனாகிப்போச்சு. எப்படி அடைக்கிறதுன்னு புலம்ப ஆரம்பிச்​சிட் டார். போன மாசம் 23-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே போனவர், மறுபடியும் வீட்டுக்கு வரல. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியல. பனவடலி சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செஞ்சோம். இந்த மாதம் 1-ம் தேதி அவர் ஒரு பாழடைஞ்ச கிணற்றின் மிதி கல்லில் கயிறு கட்டி, அதில் தொங்கியதை ஊர்க்காரர்கள் கண்டுபிடித்துச் சொன்னாங்க. இனி என் புள்ளைகளை எப்படிக் காப்பாத்துறதுன்னே புரியலையே' என்று தலையில் அடித்துக் கதறினார்.

உடன் இருந்த அவரது மகன் மணி கண்டன், ''எங்கப்பா இந்த ஊரில் 25 வரு ஷமா தொடர்ந்து அ.தி.மு.க. கிளைக்கழகச் செயலாளரா இருந்தார். போன வருஷம்தான் வேறு ஒருவர் அந்தப் பொறுப்புக்கு வந்தார். எம்.ஜி.ஆர். மேல ரொம்பவும் மரியாதை வச்சிருந்தார். அவரை யாராவது தப்பாப் பேசிட்டா, சண்டைக்குப் போயிடுவார். அதனால் எங்க அப்பாவை ஊர்க்காரங்க எம்.ஜி.ஆர்-னுதான் கூப்பிடுவாங்க.

''எங்கப்பா எடுத்த முடிவுதான் எங்களுக்கும்..''

இந்த அளவுக்கு கட்சிக்கு விசுவாசமா இருந்த அவரோட மரணத்துக்கு, கட்சியின் நிர்வாகி​கள் யாரும் அனுதாபம் சொல்லக்கூட வரல. கடனாளியா நாங்க தவிச்சுக்கிட்டு இருக்கோம். எங்களுக்கு அரசாங்கம் உதவி செய்யலன்னா, நாங்களும் எங்கப்பா எடுத்த முடிவையே எடுக்க​ வேண்டிய சூழ்நிலையில் இருக்கோம்'' என்றார் கண்ணீர் மல்க.

இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், 'விவசா​யத்தில் ஏற்பட்ட கடன் பிரச்னையே செந்தூர் பாண்டியனின் மரணத்துக்குக் காரணம் என்பதால், அவரது குடும்பத்துக்கு இழப்​பீட்டுத் தொகை வழங்க வேண்டும்’ என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளித்​தனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளரான பாஸ்கரன், ''நெல் லை மாவட்டத்தில் இந்த வருட ஆரம்பத்தில் கொஞ்சம் மழை பெய்ததும், விவசாயிகள் பலரும் மழையை நம்பி பயிர் செய்யத் தொடங்​கினர். அதன்பிறகு, மழை பெய்யவில்லை. அதனால் கடனை வாங்கி நிலத்தில் பயிர் செய்தவர்கள் சொல்ல முடியாத வேதனையில் துடித்தனர்.

வெள்ளைப்பனேரி கிராமத்தைச் சேர்ந்த செந்தூர் பாண்டியன் கடன் வாங்கி நான்கு ஏக்கரில் வாழை, வெண்டைக்காய், மக்காச்​சோளம் பயிரிட்டு இருந்தார். ஆனால், மழை இல்லாமல் அத்தனையும் கருகிப்போனது. கடன் கொடுத்தவர்கள் நெருக்குவார்களே என்ற கவலையில் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயிகள் நிலைமை நெல்லை மாவட்டம் முழுவதும் இப்படித்தான் இருக்கிறது. இந்த வருடம் பாசன நிலத்தில் 15 சதவிகிதம் மட்டுமே பயிரிடப்பட்டு உள்ளது. அதுவும் தண்ணீர் இல்லாமல் கருகிவிட்டது. அதனால், அதிர்ந்து கிடக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும். உயிர் இழந்த செந்தூர் பாண்டியன் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடும் அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க வேண்டும்'' என்று படபடத்தார்.    

விவசாயிகளின் அழுகுரலுக்கு அரசாங்கம் என்ன பதில் சொல்லப்போகிறது?

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்