Published:Updated:

'அமைச்சருக்கு அன்பளிப்பு 250 கிலோ நெய்'

காரைக்குடி ஆவினில் ஊழல் பெருச்சாளிகள்

'அமைச்சருக்கு அன்பளிப்பு 250 கிலோ நெய்'

காரைக்குடி ஆவினில் ஊழல் பெருச்சாளிகள்

Published:Updated:
##~##
'அமைச்சருக்கு அன்பளிப்பு 250 கிலோ நெய்'

'காரைக்குடி ஆவினில் அதிகாரிகள் சிலர் கூறு​போட்டுக் கொள்ளை அடிக்கிறாங்க’ என்று  ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) குமுறியிருந்தார்  சிவகங்கை மாவட்ட பி.ஜே.பி. பொதுச் செயலாளர் குரு.நாகராஜன். அவரைச் சந்தித்தோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

    ''இப்போது டி.எஸ்.பி. தங்கராஜ் தலைமையிலான ஆவின் விஜிலென்ஸ் அதிகாரிகள் காரைக்குடி ஆவினில் விசாரணை நடத்தி ஆவணங்களை அள்ளிக்கொண்டு இருக்கிறார்கள்'' என்றபடி பேச ஆரம்பித்தார். ''கடந்த மே 9-ம் தேதியன்று டி.ஐ.ஜி. ரவி தலைமையில் ஆவின் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணைக்கு வந்தனர். அந்த சமயத்தில் பண்ணையில் 20,409 லிட்டருக்கு பால் பாக்கெட்டுகள் இருந்தன. ஆனால், லெட்ஜரின்படி 15,228 லிட்டர்தான் இருக்கணும். 'கூடுதலாக சுமார் 5,000 லிட்டர் எப்படி வந்தது?’னு விஜிலென்ஸ் அதிகாரிகள் கேட்டதற்கு, '15 நாட்களுக்கு ஒரு தடவை பைப் லைனில் தண்ணீர் விட்டு சுத்தம் பண்ணுவோம். அதில் கூடியிருக்கும்’னு பதில் சொல்லிருக்காங்க.

'அமைச்சருக்கு அன்பளிப்பு 250 கிலோ நெய்'

உண்மை என்னவென்றால் தினமும் பைப் லைனில் தண்ணீர் விட்டு, பாலின் தரத்தைக் கெடுத்து அதன் மூலம் கிடைக்கும் கூடுதல் பாலைக் கள்ளத்தனமாகக் கடத்தி விற்கிறார்கள். 360 லிட்டருக்கான பால் பாக்கெட்டுகள் உற்பத்தித் தேதி பிரின்ட் செய்யப்படாமல் இருந்தன. இன்னோர் அறையில் 500 லிட்டர் நெய்யும் 100 கிலோ பால்கோவாவும் எந்தக் கணக்கு வழக்கும் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேடுகளுக்குக் காரண​மான இரண்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி விஜிலென்ஸ் அதிகாரிகள் ரிப்போர்ட் எழுதி இருக் காங்க. ஆனால் இதுவரை, எந்த நட வடிக்கையும் இல்லை.

'அமைச்சருக்கு அன்பளிப்பு 250 கிலோ நெய்'

மார்க்கெட்டில் 4.5 சதவிகிதம் கொழுப்பு உள்ள பால், 3.5 சதவிகிதம் கொழுப்பு உள்ள பால்னு ரெண்டு விதமான பால் பாக்​கெட்டுகள் ஆவினில் இருந்து விற்பனைக்கு வரு கின்றன. ஆனால், இங்குள்ள சிலர் நரித்தனமானச் செயல்பட்டு, 4.5 சத விகிதப் பாலிலும் கூடுதலாக ஒரு சதவிகித கொழுப்பைப் பிரித்து, அதில் இருந்து உற்பத்தி செய்யும் நெய்யைக் கடத்தி காசு பார்க்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தணிக்கையில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு முறைகேடுகளைக் கண்டுபிடித்து ரிப்போர்ட் எழுதுகிறார்கள். ஆனால், எதற்குமே நடவடிக்கை எடுப்பது இல்லை. பணத்தைக் கறந்துகொண்டு,

'அமைச்சருக்கு அன்பளிப்பு 250 கிலோ நெய்'

ஆவினுக்குச் சொந்தமான பார்லர்களை எல்லாம் தனி யாருக்குத் தாரை வார்க்கிறார்கள். அந்த டீலர்​களிடம் இருந்து வரவேண்டிய பால் பணம் கோடிகளைத் தாண்டி நிற்கிறது. ஆனால், அவர்​களுக்கான கமிஷனை மட்டும் பைசா பாக்கி இல்லாமல் செட்டில் பண்றாங்க'' என்றவர், அனைத்துக் குற்றச்சாட்டுக்கும் ஆதாரங்களைக் கொடுத்தார்.

''தவறான பதவி உயர்வு வழங்கியதாகச் சொல்லி அக்கவுன்ட்ஸ் மேனேஜர் ஒருவருக்கு 2006-ல் 12 லட்சம் ரெக்கவரி போட்டாங்க. அதை வசூலிக்காமலேயே அவருக்குப் பணப் பயன்களோடு ஓய்வு கொடுத்திருக்காங்க. இதேபோல், இன்னும் எட்டுப் பேருக்கு முறையற்ற வகையில் பதவி உயர்வு வழங்கப்பட்டதாக தணிக் கையில் குறிப்பிடப்பட்டும், அவை பிடித்தம் செய்யப்படவில்லை. இந்த எட்டுப் பேருக்கும் வழங்கப்பட்ட பதவி உயர்வுகளை நிரந்தரமாக்கும்படி தொழில் உறவு மற்றும் நிர்வாக மேலாளர் கதிரேசனுக்கு ஆவின் பொதுமேலாளர் கிறிஸ்டோபரும் அவரது மகனும் நிர்ப்பந்தம் கொடுத்திருக்கிறார்கள். அமைச்சர் ஒருவரின் பெயரைச் சொல்லியும் டார்ச்சர் கொடுத்திருக்கிறார்கள். இந்த உரையாடல்களின் சி.டி. ஆதாரமும் என்னிடம் இருக்கிறது.

இவர்கள் சொன்னதைச் செய்யவில்லை என்பதற்காக கதிரேசனை சிவகங்கைக்கு டிரான்ஸ்ஃபர் செய்தனர். போன வருஷம் பொங்கலுக்கு அமைச்சர் ஒருவருக்கு 'அன்பளிப்பு’ என்று சொல்லி 250 கிலோ நெய்யை வெளியில் கொண்டு போயிருக்காங்க. வாசலில் செக்யூரிட்டி தகராறு செய்யவும், லெட்ஜரில் மட்டும் 25 கிலோவாக திருத்தி வெளியில் கொண்டு போயிட்டாங்க. இதை, எங்களுடைய மாநிலத் துணைத் தலைவர் ஹெச்.ராஜா பொதுக் கூட்டத்தில் பேசினார். இதுக்கு கதிரேசன்தான் காரணம்னு சொல்லி, மறுநாளே அவரையும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக பால் உற்பத்தி மேலாளர் ராஜாராமையும் சஸ்பெண்ட் செய்து விட்டனர்.    

கோடிக்கணக்கான ரூபாய்க்கு இங்கு நடந்தி​ருக்கும் 12 ஊழல்களை ஆதாரங்களுடன் பட்டிய​லிட்டு கலெக்டருக்கு மனு கொடுத்தோம். உரிய நடவடிக்கை இல்லாததால், டிசம்பர் 26-ல் ஆவின் பண்ணைக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை அறிவித்து இருக்கிறோம். நேற்று என்னைச் சந்தித்த ஆவின் விஜிலென்ஸ் டி.எஸ்.பி. தங்கராஜ், 'தப்பு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. அதுவரை உங்களது போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்று கேட்டார். நாங்கள், 'நடவடிக்கை எடுங்கள்; போராட்டத்தைக் கைவிடுகிறோம்’னு தெளிவாகச் சொல்லி விட்டோம்'' என்றார்  நாகராஜன்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்க ஆவின் பொதுமேலாளர் கிறிஸ்டோபரைத் தொடர்பு கொண்டோம். அவரைத் தொடர்பு​கொள்ள முடியாததால், விஜிலென்ஸ் விசாரணைக்காக சென்னையில் இருந்த மார்க்கெட்டிங் மேனேஜர் முருகாநிதி​யிடம் பேசி​னோம். ''பொது மேலாளருக்கு உடம்பு சரியில்லை. அதனால் அவர் ஒரு மாதம் மெடிக்கல் லீவில் இருக்கிறார். நிர்வாகத்தைப் பற்றி புகார் சொல்பவர்கள் மிகைப்படுத்துகிறார்கள். அவர்கள் சொல்வது​போன்று எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை. விஜி லென்ஸ் விசாரணை நடப்பதால் விரிவாக எதையும் நான் பேச முடியாது'' என்றார்.

நடவடிக்கை இனியாவது விறுவிறுப்படை​யுமா?    

- குள.சண்முகசுந்தரம்    

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்