Published:Updated:

விளையாடப் போனாள்... பிணமாக வந்தாள்!

மாணவி கொலையில் மர்ம முடிச்சுகள்

விளையாடப் போனாள்... பிணமாக வந்தாள்!

மாணவி கொலையில் மர்ம முடிச்சுகள்

Published:Updated:
##~##
விளையாடப் போனாள்... பிணமாக வந்தாள்!

போதையால் மீண்டும் ஒரு பாலியல் பலாத்கார மரணம் நிகழ்ந்தே விட்டது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ளது ஆண்டியப்பனூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகள் சங்கீதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) நான்காம் வகுப்பு படித்தாள். கடந்த 27-ம் தேதி வீட்டுக்குப் பக்கத்தில் விளையாடச் சென்றவள், வீடு திரும்பவே இல்லை. மறுநாள் காலை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த வாழைத் தோப்பில் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாகத்தான் பார்த் திருக்கிறார்கள்.

சங்கீதாவின் அம்மா கௌரிக்கு ஆறுதல் சொல்லிப் பேசினோம். ''ஸ்கூல் முடிந்து வந்தது சாப்பிட்டதும் வழக்கமா விளை யாடப் போவாள். அன்னைக்​கும் அப்படித்தான் போனா. ஆனா, இருட்டிய பிறகும் வீட்டுக்கு வர வில்லை. பயந்துபோய் நாங்க எல்லா இடத்திலும் தேடினோம்.  கண்டுபிடிக்கவே முடியலை. மறுநாள் காலையில் வாழைத் தோப்புப் பக்கம் போன

விளையாடப் போனாள்... பிணமாக வந்தாள்!

ஆளுங்க, அங்கே என் புள்ளை செத்துக்கிடந்ததைப் பார்த்திருக்​காங்க. தகவல் தெரிஞ்சதும் பதறியடிச்​சுட்டு ஓடினோம். பெத்த புள்ளையை அம்மா எந்தக் கோலத்துல பார்க்கக் கூடாதோ, அந்தக் கோலத்துல கிடந்தா. உடம்பெல்லாம் நகக்கீறல். கன் னத்தைக் கடிச்சு வச்சிருந்தாங்க. பச்சைப் புள்ளையை எந்தப் பாவிப் பய இப்படி நாசம் செஞ்சான்னு தெரியலைங்களே...'' என்று நெஞ்சில் அறைந்து கொண்டு அழுதவர், ''போலீஸுக்குத் தகவல் சொன்னேன். அவங்க, 'உம் பெண்ணை யாரும் கெடுக்கலை. அடிச்சுத்தான் கொன் னுட்டாங்க’னு சொல்றாங்க. அவங்க எதையோ மறைக்கப் பார்க்கிறாங்கய்யா. சங்கீதாவை நாசமாக்கினவனைச் சும்மாவிடக் கூடாது'' என்று பெருங்குரலெடுத்து கதறினார்.

விளையாடப் போனாள்... பிணமாக வந்தாள்!
விளையாடப் போனாள்... பிணமாக வந்தாள்!

இதற்கிடையில், அதே ஊரைச் சேர்ந்த குணா என்பவரை போலீஸார் இந்த விவகாரத்தில் கைது செய்திருக்கிறார்கள். வழக்கை விசாரிக்கும் திருப்பத்தூர் டி.எஸ்.பி. நாகராஜனைச் சந்தித்தோம். ''சங்கீதா விளையாடிக்கொண்டு இருந்தபோது, அந்த ஊரைச் சேர்ந்த குணா வந்திருக்கிறான். இரண்டு பேருக்கும் ஏதோ தகராறு நடந்திருக்கிறது. கோபத்தில், பக்கத்தில் இருந்த கல்லை எடுத்து சங்கீதாவைப் பலமாகத் தாக்கி இருக்கிறான். அதில் சங்கீதா இறந்து விட்டார். உடனே பயந்துபோனவன், சங்கீதாவின் உடலைப் பக்கத்தில் இருந்த வாழைத் தோப்பில் போட்டுவிட்டு ஓடிவிட்டான். அந்த சமயத்தில் அவன் அளவுக்கு மீறிக் குடித்திருந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மற்றபடி பாலியல் பலாத்காரம் எதுவும் நடக்கவில்லை. அதை மறைக்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை'' என்றார்.

மீண்டும், சங்கீதாவின் அம்மாவிடம் பேசினோம். ''சங்கீதா விளையாடப் போன நேரத்தில், குணாவும் அவனுடைய சினேகிதக்காரன் கலை​யரசனும் கூடவே

விளையாடப் போனாள்... பிணமாக வந்தாள்!

போயிருக்காங்க. இதை ஊர்க்காரங்க பலரும் பார்த்​திருக்காங்க. 'கலையரசன் அண்ணன் என்னைத் தொட்டுத் தொட்டுப் பேசுதும்மா’னு சங்கீதா பல தடவை என்கிட்ட  சொல்லியிருக்கா. நானும் அந்தப் பையனைக் கூப்பிட்டுக் கண்டிச்சிருக்கேன். அவனுங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் சங்கீதாவை நாசமாக்கி இருக்கானுங்க. போலீஸ் ஏதோ காரணத்துக்காக எல்லாத்தையும் மூடி மறைக்கிறாங்க'' என்று மீண்டும் உறுதியாகச் சொன்னார்.

மாணவி கொலை தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கரிடம் பேசினோம். ''தடய அறிவியல் சிறப்பு மருத்துவர்​கள் அந்தச் சிறுமியைப் பிரேதப் பரிசோதனை செய்து இருக்கிறார்கள். பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்பது ஒரு வாரம் கழித்துத்தான் தெரியவரும். இந்தக் கொலை சம்பவத்தில் வேறு யாராவது சம்பந்தப்பட்டு இருந்தாலும், அவர்களும் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள். இந்த விவகாரத்தில் விரிவான விசா ரணை நடத்த உத்தரவு போட்டிருக்கிறேன்'' என்றார்.

டெல்லி மாணவியின் மரணத்துக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவுமே குரல் கொடுத்துக்கொண்டிருக்க... சத்தமில்லாமல் சில கொலைகள் புதைந்து விடக்கூடாது.

- கே.ஏ.சசிகுமார்,

படங்கள்: கா.முரளி