Published:Updated:

திரண்டு வரும் கொசுப் படை...

திரும்பிப் பார்க்காத அரசியல்வாதிகள்...பரிதவிக்கும் பனையூர்

திரண்டு வரும் கொசுப் படை...

திரும்பிப் பார்க்காத அரசியல்வாதிகள்...பரிதவிக்கும் பனையூர்

Published:Updated:
##~##
திரண்டு வரும் கொசுப் படை...

'போக்குவரத்துக்குச் சாலை, மழை நீரும் கழிவு நீரும் செல்வதற்குக் கால்​வாய், இருட்டு பயம் தவிர்க்க தெரு விளக்கு போன்ற எந்த அடிப்படை வசதியுமே இல்லாமல் தவிக்கும் எங்கள் நிலையை ஆள்வோருக்கு எடுத்துச்சொல்லி அவலம் போக்க உதவுங்களேன்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66802929) கோரிக்கை விடுத்து இருந்​தனர், சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் இருக்கும் பனையூர் - குடுமி​யாண்டித்தோப்புவாசிகள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குடுமியாண்டித்தோப்பு முழுவதும் கல்லும் மண்ணு​மான சாலைதான். அதுவும் கழிவுநீர் சூழ்ந்து நிற்பதால், கவனமாக ஒவ்வொரு கல்லிலும் கால் வைத்து சர்க்​கஸில் நடப்பது போல்தான் நடக்க வேண்டி இருந்தது. அங்கு, குப்பைத் தொட்டி எதுவும் இல்லாததால், கட்டு மானம் பாதியில் நிறுத்தப்பட்ட  மனை ஒன்றில் குப் பைகளைக் கொட்டி இருந்தனர். அதுவும் நிறைந்து வழிந்து துர்நாற்றம் வீசியது.

திரண்டு வரும் கொசுப் படை...

அந்தப் பகுதியில் வசிக்கும், மனித உரிமைகள் கழக காஞ்சி மாவட்டச் செயலாளர் எஸ்.ஷாகுல்

திரண்டு வரும் கொசுப் படை...

அமீது, ''சோழிங்கநல்லூர் பேரூராட்சியில் இருந்தபோதும் சரி, இப்போது சென்னை மாநகராட்சியின் 198-வது வார்டாக மாறி ஒரு வருடம் ஆனபிறகும் சரி, எங்கள் பகுதியின் நிலை மாறவே இல்லை. தெருக்​களில் தேங்கும் கழிவு நீரால் கொசுக்கள் பெருகி டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் அடிக்​கடி பரவுகின்றன. கொசு மருந்து அடிக்க வருபவர்கூட எங்கள் பகுதிக்குள் வருவதே இல்லை. கேட்டால், உங்கள் பகுதிக்குள் வண்டியைக் கொண்டுவர முடியவில்லை என்கிறார். வீடுகளுக்கு வந்துபோவதே பெரும்போராட்டமாக இருக்கிறது. எத் தனையோ முறை எங்கள் குறையை அரசு அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் ஒன்றும் நடக் க​வில்லை. இப்போதுகூட வார்டு கவுன்சிலர், மண்டல குழுத் தலைவர், எம்.எல்.ஏ. மற்றும் சென்னை மேயருக்கும் போட்டோவோடு குறைகளை அனுப்பி இருக்கிறேன்'' என்றார் ஆற்றாமையுடன்.

திரண்டு வரும் கொசுப் படை...

காந்திமதி என்பவர், ''தெரியாத்தனமா இந்த ஏரியாவில் இடம் வாங்கிக் குடிவந்துட்டேன். ரோடு இல்லை, தெரு விளக்கு இல்லை, கழிவு நீர்க் கால்வாய் இல்லை. பல நேரங்களில் குடி தண்ணியும் வர்றது இல்லை. சாயங்காலம் ஆனா, கொசுப்படை மட்டும் சரியா வந்துடும். லேசா மழை பெஞ்சாலே தண்ணி தேங்குறதோட, வீட்டுக்கு உள்ளேயும் வந்துடும். தெரு விளக்கு இல்லாம பொம்பளைங்களால வெளியே போகவே முடியலை. பாம்புகள் நடமாட்டமும் இருக்கு. ஓட்டு கேட்டு வரும்போது, 'உங்களுக்கு ரோடு வந்துடும், சாக்கடை வந்துடும்’னு சொல்றாங்க. ஜெயிச்ச பிறகு இந்தப் பக்கம் வர்றதே இல்லை. இனிமே பொய் வாக்குறுதி கொடுத்துட்டு, யாரும் இங்கே வர முடியாது. எங்களுக்கான வசதிகளை செஞ்சு கொடுத்தா மட்டும்தான் ஓட்டுப் போடுவோம்'' என்றார் ஆவேசமாக.

திரண்டு வரும் கொசுப் படை...

தென்சென்னை கேப்டன் மன்ற மாவட்டச் செய லாளர் ஏ.அப்பாஸ் அலி, ''விவசாயப் பகுதியாக இருந்த பட்டா இடத்தை 15 வருடங்களுக்கு முன் பிளாட் போட்டனர். அப்போது, சிலர் வாங்கி வீடு கட்டினர். பத்து வருடங்களுக்கு முன் நிறைய குடித்தனக்காரர்கள் வந்துவிட்டனர். ஆறேழு வருடங்களுக்கு முன், சோழிங்கநல்லூர் பேரூராட்​சியில் இருந்து இந்த ஏரியாவுக்குப் பள்ளிக்கூடம் தெரு என்று பெயர் சூட் டினர். இங்கே இருக்கிறவர்களும் முறையாக வீட்டு வரி, தண்ணீர் வரி செலுத்துகிறார்கள். வரி வாங்கும் அர சாங்கம் இந்த மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய அடிப்படை வசதி​களை செய்து தரவே இல்லை. அ.தி.மு.க-காரர்களிடம் கேட்டால், உங்கள் பகுதி தி.மு.க. கவுன்​சிலரிடம் கேளுங்கள் என்கிறார்கள். கவுன்சிலரிடம் கேட்டாலும் எதுவும் நடக்கவில்லை. அரசு நிர்வாகம் சார்பில் தெருப்பெயர் சூட்ட முடிகிறது, வரி வசூலிக்க முடிகிறது. ரோடு வசதி கேட்டால் மட்டும் தனியார் லே-அவுட் என்று கூறுவது முறை இல்லை. இனிமேலும் எங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்றால், பொதுமக்களைத் திரட்டி சாலை மறியல் செய்வேன்'' என்றார் அதிரடியாக.

198-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் அரவிந்த் ரமேஷிடம் பேசினோம். ''இந்தப் பகுதி பேரூராட்சி நிர் வாகமாக இருந்தபோது, சாலை போட முயன்றேன். ஆனால், இடத்தை லே-அவுட் போட்டவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் சாலை போடவில்லை.. இப்போது மாநகராட்சியாகி விட்டது. குடியிருப்புகளும் அதிகமாகி விட்டன. அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவது நிர்வாகத்தின் கடமை. இப்போது, அதிகாரிகளை அழைத்து வந்து ஆய்வு செய்து​விட்டேன். அந்த இடத்தில் அனைத்துப் பகுதி களுக்கும் சாலை போடுவதற்கு நிதி ஒதுக்கப்பட உள் ளது. கழிவு நீர் கால்வாய் கட்டுவதோடு, உடனடியாகத் தெரு விளக்கும் போடப்படும்'' என்றார்.

சொல்லிக்கொண்டே இருக்காமல் செயலில் காட்டுங்கள்!

- எம்.செய்யது முகம்மது ஆசாத்