Published:Updated:

எங்கள் பணம் யார் கையில்?

மிரட்டுகிறது புதிய திட்டம்

எங்கள் பணம் யார் கையில்?

மிரட்டுகிறது புதிய திட்டம்

Published:Updated:
##~##
எங்கள் பணம் யார் கையில்?

'உங்கள் பணம் உங்கள் கையில்’ என்ற திட் டத்தை புதுச்சேரிக்கு டிக் அடித்திருக்​கிறது மத்திய அரசு. இந்தத் திட்டம் புதுச்சேரிக்குத் தேவையா என்பதில்தான் பெரும் குழப்பம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்ன திட்டம் அது?

''ஆண்டுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாயை மானியமாக பொதுமக்களுக்குச் செலவு செய்கிறது மத்திய அரசு. புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மானியங்களை நேரடியாகப் பொதுமக்களின் வங்கிக் கணக்கில் சேர்ப்பதுதான் 'உங்கள் பணம் உங்கள் கையில்’ திட்டம். விரைவில் இந்தத் திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்திக் காட்டுவேன் என்று பிரதமரிடம் உறுதி அளித்துள்ளேன்'' என்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். இந்தத் திட்டத்தின் மீது புதுச்சேரிக்காரர்கள் புகார் சொல்கிறார்கள்.

எங்கள் பணம் யார் கையில்?
எங்கள் பணம் யார் கையில்?

புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான விஜயமூர்த்தி இந்தத் திட்டத்தில் உள்ள குளறுபடிகள் குறித்துப் பேசினார். ''சாமானிய மக்கள் தங்கள் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத்தான் ரேஷன் கடைகளை நாடு கிறார்கள். இந்தத் திட்டம் அமலாக்கப்பட்டால், மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்பதுதான் உண்மை. இன்று ரேஷன் கடைகளில் 15 ரூபாய் கொடுத்தால் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் கிடைக்கிறது. அதன் மார்க்கெட் விலை 50 ரூபாய். இப்போது, மத்திய அரசு 35 ரூபாயை மானியமாகக் கொடுக்கிறது. 'உங்கள் கையில் உங்கள் பணம்’ திட்டம் அமலாக்கப்பட்டால், முதல் மூன்று மாதங்களுக்குப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மண்ணெண்ணெய் மானியத்தை மத்திய அரசு செலுத்திவிடும். ரேஷன் கடைகளில் அதன் அடக்க விலையான 50 ரூபாயைக் கொடுத்து மண்ணெண்ணெய் வாங்கிக்கொள்ள வேண்​டும். இவை எல்லாம் முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே. நான்​காவது மாதத்தில் இருந்து ரேஷன் கடைகளில் உங்கள் சொந்தப் பணம் 50 ரூபாய் கொடுத்து மண்ணெண்ணெய் பெற வேண்டும். அதன்பிறகே, வங்கிக் கணக்கில் மத்திய அரசு மானியத் தொகையைச் செலுத்தும். இது ஏழைகளால் நிச்சயம் முடியவே முடி யாது. அதனால், பொருட்களை வாங்க முடியாமல் போய்விடும்.

எங்கள் பணம் யார் கையில்?

கடந்த 2011-ம் ஆண்டு, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டம் கோட்காசிம் தாலுக்காவில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. திட்டம் ஆரம்பித்த ஆண்டின் முடிவில், ஒரு சிலரைத் தவிர பலருக்கும் மானியத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப் படவில்லை. ஏனென்றால், சுமார் 70 சதவிகிதம் வரை ரேஷனில் மண்ணெண்ணெய் விற்பனை குறைந்து விட்டது. அதாவது, ஏழைகள் பணம் கொடுத்து வாங்குவதற்கு முன்வரவில்லை. அதனால் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், ரேஷன் கடைகளை மூடவேண்டிய நிலை ஏற்படும். அதன் பிறகு, தனியார் முதலாளிகளுக்கும், வால்மார்ட் போன்ற மெகா நிறுவனங்களுக்கும்தான் சாதகமான நிலை இருக்கும்'' என்றார்.

பாகூரைச் சேர்ந்த விவசாயி ராமசாமி, ''எங்களை மாதிரி சாதா ரண ஆளுங்க வங்கியில் கணக்கு ஆரம்பிக்கிறதே பெரிய சமாச்சாரமா இருக்கு. அதுக்கப்புறம் வங்கிப் பணத்தை எடுக்கிறதுக்கு நான் பத்து ரூவா செலவு பண்ணிட்டுப் போகணும். பல வீடுகளில் பொம்பளைங்கதான் ரேஷன் கடைக்குப் போய் அரிசி வாங்குறாங்க. பணம் எல்லாம் கணவனின் வங்கிக் கணக்குக்குப் போச்சுன்னா, ஆம்பிளை எடுத்துக் குடிச் சிட்டுப் போயிடுவான். குடும் பம் எப்படிங்க சோறு திங்கும்? இந்தத் திட்டத்தால் எந்தப் பிர யோஜனமும் இல்லை'' என்கிறார் வேதனையோடு.

''நிதிப் பற்றாக்குறையால் சிக் கித் தவிக்கும் புதுச்சேரிக்கு, இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் 100 கோடி ரூபாயை உடனே தருவதாக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்த 100 கோடி ரூபாய்க் காகவே முதல்வரும் தலையாட்டிப் பொம்மையாக இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதெல்லாம் எங்கே போய் முடியும் என்று தெரி யவில்லை'' என்கிறார்கள் எதிர்க் கட்சியினர்.

புதுச்சேரி மாநிலத்தின் கல்வி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தியாக ராஜனிடம் இந்தத் திட்டம் பற்றிப் பேசினோம். ''மக்களின் நன் மைக்காகத்தான் மத்திய அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு​வந்திருக்கிறது. முதல்வரும் மக்கள் நன்மையைக் கருத்தில் கொண்டுதான் ஒப்புதல் அளித்திருக்கிறார். இதில் ஏதேனும் பிரச்னைகள் இருக்கிறதா என் பதைத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு நிச் சயம் ஆராய்வோம். குறைகள் இருந்தால், அதை நிச்சயம் சரிசெய்வோம். ஏழைகளுக்கு இன்னல் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்க மாட்டோம்'' என்று சொன்னார்.

பார்க்கலாம்!

- நா.இள.அறவாழி

படங்கள்: ஜெ.முருகன்