Published:Updated:

கடவுளுக்கு வந்த சோதனை!

இருட்டில் சுவாமிமலை முருகன்

கடவுளுக்கு வந்த சோதனை!

இருட்டில் சுவாமிமலை முருகன்

Published:Updated:
##~##
கடவுளுக்கு வந்த சோதனை!

றுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோயிலில், முறைகேடாக மின் இணைப்பைப் பயன்படுத்தினர் என்று அபராதம் விதித்ததோடு இல்லாமல், மின் இணைப்பையும் துண்டித்து விட்டனர்.  இதனால், அதிர்ந்துபோய் நிற்கிறார்கள் முருக பக்தர்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்ன விவகாரம் என்று விசாரித்தோம்!

கோயில் ஊழியர் ஒருவர் நம்மிடம் பேசினார். ''சட்டமன்றத்தில் அரசு அறிவித்த திட்டத்தின்படி 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 22 அறைகள் கொண்ட தங்கும் விடுதி கட்டிக்கொண்டு இருக்கிறோம். கடந்த அக்டோபர் மாதம் டெண்டர் விடப்பட்டு 4-ம் தேதி முதல், கட்டட வேலைகளைத் தொடங்கினோம். கட்டடம் கட்ட எங்களிடம் உள்ள வர்த்தக இணைப்புகளில் இருந்து மின்சாரத்தைப் பயன் படுத்தினோம். கடந்த 22-ம் தேதி திடீரென்று கோயிலுக்கு வந்த மின் திருட்டுத் தடுப்புக் குழுவினர், கட்டடம் கட்டுவதற்குத் தற்காலிக மின் இணைப்பு பெற்றுத்தான் பயன்படுத்த வேண்டும் என்றனர். அதோடு, நாங்கள் பயன்படுத்திய இணைப்புக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் கூறினர்.

கடவுளுக்கு வந்த சோதனை!

அப்போது, கோயிலின் துணை ஆணையர் சென்னையில் இருந்தார். அவருக்குத் தகவல் சொல்லிவிட்டு, மின் திருட்டுத் தடுப்புக் குழுவினர் விதித்த அபராதத் தொகையைச் செலுத்தினோம். மேற்கொண்டு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றவர்கள், அதைக் செலுத்தவில்லை என்று, மறுநாளே மின்இணைப்பைத் துண்டித்து விட்டனர்'' என்று நடந்ததைச் சொன்னார்.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதைக் கேட்டு கடும் கோபத்தில் பேசினார் இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி. ''இது என்னங்க அநியாயம்? அவர்கள் என்ன கொக்கி போட்டு மின்சாரம் திருடினார்களா அல்லது சாதாரணக் கட்டணத்தில் உள்ள இணைப்பில் இருந்து மின்சாரம் எடுத்தார்களா? வர்த்தகக் கட்டணத்தில் உள்ள இணைப்பில் இருந்துதானே எடுத்தார்கள்? அதற்காக அபராதம் விதித்து இணைப்பையும் துண்டிப்பது கடவுளுக்கே அடுக்காது. இது தவறு என்றால், இப்படி செய்யக் கூடாது என்று எச்சரித்து, இனி எப்படிச் செய்ய வேண்டும் என்று வழிகாட்டுதல் செய்யலாம். அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கோயில் மீது கடுமை காட்டுவதுபோல், மின் வாரியம் செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என்றார்.

கடவுளுக்கு வந்த சோதனை!

சுவாமிமலை கிரிவலக் கமிட்டியின் தலைவர் சிவ​சங்கரன், ''லட்சக்கணக்கான ஏழைகளுக்கு இலவசமாக மின்சாரம் தரும் இந்த அரசு, ஏன் கோயிலுக்கு இலவசமாகத் தரக்கூடாது? இல வசமாக வேண்டாம், வீட்டுக்கு வாங்கும் கட்டணத்தையாவது வாங்கலாம் இல்​லையா? கட்டணம் அதிகமாக இருப்பதால், ஆயிரக்கணக்கான சிறிய கோயில்கள் இருட் டில் கிடக்கின்றன. அப்படி இந்தக் கோயி​லையும் இருட்டில் தள்ளிவிடக் கூடாது. அதனால், இந்த அபராதத் தொகையை அரசு உடனடியாக ரத்துசெய்து, இணைப்பைக் கொடுக்க வேண்டும்'' என்றார்.

இணைப்பு துண்டிக்கப்பட்டதால்,  கோயிலில் இப்போது  உள்ள ஜெனரேட்டர்கள் தொடர்ந்து இயக்கப்படுகிறது. இதற்காக, நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டீசல் வாங்கப்படுகிறது.

''அபராதத் தொகையை செலுத்தி பிரச் னையை முடிவுக்குக் கொண்டுவந்தால் என்ன?'' என்று கோயில் துணை ஆணையர் கஜேந்திரனிடம் கேட்​டோம். ''செய்யாத தப் புக்கு நாங்கள் எதற்காக அபராதம் செலுத்த வேண்டும்? வர்த்தக இணைப்பில் இருந்தும் ஜெனரேட்டர் மூலமும்தான் நாங்கள் கட் டடம் கட்ட மின்சாரம் எடுத்தோம். அதுவும் அக்டோபர் மாதத்தில் இருந்துதான். ஆனால், எதையுமே ஆராயாமல் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நாங்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தியதாக ஒரு வருடத்துக்கு அபராதம் விதித்து இருக்கிறார்கள். அதை எதிர்த்து நாங்கள் அப்பீலுக்குப் போய் இருக்கிறோம். அதில் என்ன முடிவாகிறது என்று பார்த்து விட்டுத்தான் பணம் செலுத்துவோம்'' என்றார் உறுதியாக.

மின்வாரிய அதிகாரிகளிடம் பேசினோம். ''கோயிலாக இருந்தாலும் தனியாராக இருந்தாலும் ஒரே சட் டம்தான். புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்றால், தற்காலிக இணைப்பு பெற்றுத்தான் பயன்படுத்த வேண்டும். அதற்கு மற்ற எல்லாவற்றையும்விட கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இவர்கள் அப்படிச் செய்யவில்லை. எங்களுக்குப் புகார் வந்தது, நடவடிக்கை எடுத்தோம். அதை அன்று அவர்கள் ஏற்றுக்கொண்டு சமரசத் தொகையையும் செலுத்தி விட்டனர். இனி, அவர்கள் அபராதத் தொகையில் பாதியைக் செலுத்தி விட்டு மேற்பார்வை பொறியாளரிடம் அப்பீல் செய்யலாம். அதில், அக்டோபர் மாதத்தில் இருந்துதான் மின்சாரத்தை பயன்படுத்தினர் என்பதை சான்றுகளுடன் நிரூபித்து, அபராதத்தைக் குறைத்துக் கொள்ள முடியும். எது எப்படியானாலும், அபராதத் தொகையில் 50 சத விகிதத்தை செலுத்தினால் மட்டுமே திரும்பவும் இணைப்பு வழங்கப்படும்'' என்று உறுதியாகச் சொன் னார்கள்.

பணம் செலுத்தினால்தான் இணைப்பு என்கிறது மின் வாரியம். செலுத்த முடியாது என்கிறது கோயில் தரப்பு. அப்பனுக்கே உபதேசம் செய்த சுவாமிமலை முருகா... இவர்களுக்கு உபதேசம் செய்ய மாட்டாயா?

- கரு.முத்து, படங்கள்: கே.குணசீலன்