Published:Updated:

கண் இழந்த மாணவி... கண்டுகொள்ளாத பள்ளி!

பட்டுக்கோட்டை சோகம்

கண் இழந்த மாணவி... கண்டுகொள்ளாத பள்ளி!

பட்டுக்கோட்டை சோகம்

Published:Updated:
##~##
கண் இழந்த மாணவி... கண்டுகொள்ளாத பள்ளி!

டிக்காதவர்களுக்குக் கண் இருந்​தாலும், அதைப் புண் என்கிறார் திருவள்ளுவர். ஆனால், படிக்க அனுப்பியதாலேயே, என் மகளுக்குக் கண் புண்ணாகப் போச்சே என்று கதறுகிறார்கள். பட்டுக்கோட்டையில் உள்ள செயின்ட் ஜோசப் நர்சரி - பிரைமரி பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சஞ்சனா என்ற மாணவிக்குத்​தான் இந்த அநியாயம் நடந்துள்ளது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த ஜூலை 5-ம்தேதி அன்று நடந்த சம்பவத்துக்கு, பள்ளித் தரப்பிலும் காவல் நிலையத்திலும் நியாயம் கிடைக்காததால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை நாடி இருக்கிறார்கள் பெற்றோர். நடந்தது என்ன?

மாணவி சஞ்சனா விடம் பேசினோம். ''அன் னைக்கு மலர் டீச்சர் பாடம் நடத்திட்டு இருந்​தாங்க. எனக்குப் பக்கத்தில் இருந்த கோகிலா பேசிட்டே இருந்தா. டீச்சர் கோபமாகி, 'ஏன் பேசிட்டே இருக்க?’ன்னு கையில் இருந்த பிரம்பைத் தூக்கி எறிஞ்சாங்க. அது என் கண்ணுல குத்தி ரத்தம் வந்துச்சு. இப்போ வலது கண் சுத்தமாத் தெரியலை. இப்பவும் அதே ஸ்கூலுக்குப் போய்க்கிட்டுத்தான் இருக்கேன். மலர் டீச்சரும் கால் உடைஞ்சிடுச்சுனு ஸ்கூலுக்கு வர்றது இல்லை'' என்றாள்.  

கண் இழந்த மாணவி... கண்டுகொள்ளாத பள்ளி!

சஞ்சனாவின் சித்தப்பா மோகன்தாஸ், ''அன் னைக்கு மதியம், 'உங்க பொண்ணு கண்ணில் ரத் தம் வருது’னு ஸ்கூல்ல இருந்து போன் வந்தது. பதற் றத்தோட ஓடினோம். கண்ணில் ரத்தத்துடன் சஞ்சனா ஆபீஸ் ரூமில் உட்கார்ந்து இருந்தா. என்ன நடந்ததுன்னு ஸ்கூல்ல கேட்டதுக்கு, 'என்னன்னே தெரியல, திடீர்னு கண்ணுல இருந்து ரத்தம் வருது’ன்னாங்க. 'ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகலையா?’னு கேட்டதுக்கு, 'அதுக்குத்தான் உங்களை வரச் சொன்னோம்’னு அசால்ட்டா பதில் சொன்னாங்க. சஞ்சனா

கண் இழந்த மாணவி... கண்டுகொள்ளாத பள்ளி!

வலியால் துடிச்சுட்டு இருந்ததால், அதுக்கு மேல பேசிட்டு இருக்காம பக்கத்தில் இருந்த கண் ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போனோம். அவங்க, 'இதை இங்க பார்க்க முடியாது. மதுரைக்குத்தான் கொண்டு போகணும்’னு சொல்லிட்டாங்க. உடனே மதுரைக்குப் போனோம். அங்கே நாலு நாள் பெட்ல வெச்சிருந்தாங்க. கண் பார்வை வரும்னு உறுதியா சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ஊருக்கு வந்ததும் பட்டுக் கோட்டை போலீஸ்ல புகார் கொடுத்தோம். போலீஸும்விசாரிக்கப் போயிருக்​காங்க. உடனே, ஸ்கூல் ஹெச்.எம். அகஸ்டின் விக்டோரியா எங்க அண்ணனுக்கு போன் பண்ணி, 'நீங்க ஏன் போலீஸுக்குப் போறீங்க? உங்கப் பொண்ணு கண்ணுக்கு நாங்க பொறுப்பு’னு சொல்லி சமாதானம் செஞ்சாங்க'' என்று நிறுத்தினார்.

தொடர்ந்த சஞ்சனாவின் அப்பா ராமையன், ''மதுரையில் இருந்து என் பொண்ணை அழைச்சுட்டு வந்ததும், ஸ்கூல்ல இருந்து நிறைய டீச் சர்கள் வந்து பார்த்தாங்க. 'நீங்க ஒண்ணும் கவலைப்​படாதீங்க. எவ்வளவு செலவு ஆனாலும் நாங்க பார்த்துக்குறோம்’னு உருகி உருகிப் பேசினாங்க. நாங்களும் நம்பினோம். அதுக்குப்பிறகு, நாலு தடவை மதுரைக்குப் போய்க் காட்டிட்டு வந்தோம். கடைசியா, 'நரம்பு எல்லாம் வீக்காயிடுச்சு. இனிமே பார்வை வராது’னு சொல்லிட்டாங்க. உடனே, ஸ்கூலுக்குத் தகவல் சொன்னோம். ஆனா, அதை அவங்க கண்டுக்கவே இல்லை. ஊர்ல இருந்து நாலு பேர் போய்க்கேட்டோம். அதுக்கு ஹெச்.எம்., 'இதுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’னு சொல்​லிட்டாங்க. அந்த கிளாஸ் டீச்சரைக் கூப்பிட்டுக் கேட்டதுக்கு, அவங்க உண்மையைப் பேசினாங்க. 'அப்படின்னா நீங்களே பொறுப்பு ஏத்துக்கோங்க’ன்னு மிரட்டினதும், அவங்களும் மழுப்பிட்டாங்க. போலீஸும் ஸ்கூலுக்கு ஆதரவாப் பேசி அனுப்பிட்டாங்க. அப்புறம், கல்வித் துறை, முதல்வரின் தனிப்பிரிவுனு பல இடங்களுக்கும் மனு போட்டோம். அதிகாரிகளும் வந்து விசாரிச்சுட்டுப் போனாங்க. ஆனா, இதுவரை எந்தத் தகவலும் வரலை. அதனாலதான் இப்போ கோர்ட்டுக்குப் போயிருக்கோம்'' என்றார் கண்ணீருடன்.

பள்ளிக்குச் சென்றோம். அலுவலகத்தில் இருந்த உதவியாளர், ''சிஸ்டர் (ஹெச்.எம்.) சர்ச்சுக்குப் போயிருக்காங்க'' என்றார். பள்ளி வளாகத்தில் இருந்த சர்ச்சுக்குப் போனோம். ''சிஸ்டர் இல்லை. அவங்க எப்ப வருவாங்கன்னு தெரியாது'' என்றார் அங்கிருந்த ஒரு பெண். அதனால் அகஸ்டின் விக்டோரியாவின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டோம். அதில் பேசியவர், ''சிஸ்டர் இல்லை. அவங்க எப்ப வருவாங்கன்னு தெரியாது'' என்று அதே பதிலையே சொன்னார். சர்ச்சில் பேசியதும் போனில் பேசியதும் ஒருவரேதான். அவர் அகஸ்டின் விக்டோரியாதான் என்பது சர்ச்சில் இருந்த ஒருவர் அடையாளம் காட்டிய பிறகுதான் தெரிந்தது. மீண்டும் அவரிடமே விசாரித்தபோது, ''அந்த ஸ்கூலுக்கும் எனக் கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்று மறுத்தார்.

பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தியிடம் பேசினோம். ''சஞ்ச னாவின் பெற்றோர் புகார் கொடுத்ததும் உடனே பள்ளிக்குச் சென்று விசாரித்தோம். பள்ளித் தரப்பில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சொல்லி விட்டனர். அந்த மாணவி தரப்பிலும் மீண்டும் எங்களை அணு கவில்லை. இப்போது அவர்கள் கோர்ட்டுக்குப் போயிருப்பதால், விசாரணை விவரங்களை அங்கே தெரிவித்து இருக்கிறோம்'' என்றார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மதியிடம் பேசினோம். ''இந்தப் புகார் எங்களுக்கும் வந்தி ருக்கிறது. அதிகாரிகள் விசாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதுகுறித்த அறிக்கை வந்ததும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

- வீ.மாணிக்கவாசகம்,

எம்.புண்ணியமூர்த்தி