Published:Updated:

அரசு தடையை உடைத்த தி.மு.க.!

தூத்துக்குடி சரவெடி

அரசு தடையை உடைத்த தி.மு.க.!

தூத்துக்குடி சரவெடி

Published:Updated:
##~##
அரசு தடையை உடைத்த தி.மு.க.!

அ.தி.மு.க. அரசு எடுக்கும் சில நடவடிக்கைகள் தி.மு.க-வுக்குச் சாதகமாக அமைந்து விட் டது. தூத்துக்குடியில் திட்டமிடப்பட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்துக்குத் திடீரென அரசு தடை விதித்தது அப்படித்தான் மாறிப்போனது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட் டம்தோறும் செயல்வீரர்கள் கூட்டத்தை தி.மு.க. நடத் துகிறது. கடந்த 28-ம் தேதி, தூத்துக்குடியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் திடீரெனத் தடை விதிக்கவே, வேறு ஓர் இடத்தில் அதைவிடப் பிரமாண்டமாகக் கூட்டத்தை நடத்தி தூத்துக்குடியைப் பரபரப்பாக்கி விட்டனர்.

அழகிரியின் ஆதரவாளர் என்று சொல்லப்பட்டு வந்த அனிதா ராதாகிருஷ்ணன், விழா மேடையில் ஸ்டாலின் புராணம் பாடி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்​தார். ''கடந்த ஆட்சியின்போது எங்கள் தொகுதி மக்களுக்குத் தேவையான திட்டங்களை கலைஞர்தான் செய்தார். அதற்குத் தளபதி ஸ்டாலின் துணையாக இருந்தார். தளபதி மீது யாரும் குறைகூற முடியவில்லை. அவர் அந்த அளவுக்குச் சுத்தமானவர். தளபதி அவர்களே நீங்கள் கை காட்டுங்கள்... சொன்னதை எல்லாம் செய்து முடிப்போம்'' என்று முழங்கினார்.

அரசு தடையை உடைத்த தி.மு.க.!

அடுத்த முறை வாய்ப்பு கிடைக்குமா... கிடைக்காதா என்ற சந்தேகத்தில் இருக்கும் எம்.பி-யான ஜெய துரை, கடந்த தி.மு.க. ஆட்சியின்சாதனை​களை புள்ளிவிவரத்துடன் அடுக்கடுக்காகப் பட்டியல் போட்டதை ஸ்டாலின் ரசித்துக் கேட்டார்.

இறுதியாகப் பேசிய ஸ்டாலின், ''இப்போது நாங்கள் நடத்தும் கூட்டங்களில் எல்லாம் மக்கள் ஏராள மாகக் கூடுகிறார்கள் என்றாலும், தூத்துக்குடியில் எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டனர். ஆளும் கட்சி மீது மக்களுக்கு இருக்கும் கோபமும், இந்தக் கூட்டத்தை நடத்த விடாமல் தடுப்பதற்குச் செய்த சூழ்ச்சியும்தான் இந்த எழுச்சிக்குக் காரணம். இந்த நடவடிக்கைக்காக ஜெயலலிதாவுக்கும் அவர் பேச்சைக் கேட்கும் காவல் துறையினருக்கும் கோடானுகோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனையோ நெருக்கடி நிலைகளை எல்லாம் கடந்துவந்த நாங்களா, இவர்களுக்குப் பயந்து ஒதுங்கிப்போவோம்? ஜெயில் என்ன எங்களுக்குப் புதுசா? எங்களையா மிரட்டப் பார்க்கிறார்கள்? நாங்கள் எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம். சாதாரண செயல்வீரர் கூட்டத்துக்கே இத் தகைய கெடுபிடி என்றால், மாநாடு நடத்துவது என்றால் எவ்வளவு இடையூறு செய்வார்கள்? மாவட்டச் செய லாளர் பெரியசாமி அத்தனைக்கும் தயாராக இருக்க வேண்டும். இவர்கள் இடம் தர மறுத்தால் நான் நடு ரோட்டில் நின்றுகூட பேசத் தயாராக இருக்கிறேன்'' என் றார் ஆவேசமாக.

அரசு தடையை உடைத்த தி.மு.க.!

கூட்டத்துக்கு ஏற்​பாடு செய்திருந்த மாவட்​டச் செய லாள​ரான பெரிய​சாமியிடம் நடந்ததைக் கேட்​டோம். ''நாட்டு மக்களுக்கு நல்லது செய்றதை விட்டுட்டு எங் களிடம் அடக்குமுறை காட்டுவதையே வேலையா வச்சிருக்காங்க அந்த அம்மா. எங்கள் கட்சித் தலைமையில் இருந்து கூட்டம் நடத்தணும்னு அறிவிப்பு வந்ததும் முறையாக மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களைச் செலுத்தி ரசீதும் வாங்கிட்டோம். அதனால், பந்தல் போடும் வேலையில் மும்முரமா இருந் தோம். எல்லா ஏற்பாடும் முடியும் நேரத்தில் திடீர்னு போலீ​ஸார் வந்து, 'உங்களுக்கு அனுமதி கொடுக்கலை. இந்த இடத்தில் கூட்டம் நடத்த முடியாது’னு தடுத் தாங்க. 'இப்போ வந்து சொன்னா எப்படி? நாள் நெருங்கிடுச்சே?’னு கேட்டேன். நிலைமையைச் சொல்லி அதிகாரிங்ககிட்டேயும் பேசிப் பார்த்தேன். எல்லோரும் 'மேலிடத்து உத்தரவு... நாங்க என்ன செய்ய முடியும்’னு கையை விரிச்சுட்டாங்க. திரும்பவும் ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லை மோதிப் பார்த்துடலாம்னு தயாரானேன். ஆனால் தலைவர், 'வேணாம்ப்பா, வெளியில இருந்து நீ வேலையைப் பாரு’னு சொல்லிட்டார். அதனால், கோர்ட்டுக்குப் போனோம். இப்போ கோர்ட் அனுமதியோட என் மூத்த மகன் ராஜாவின் சொந்த இடத்திலேயே கூட்டத்தை நடத்திட்டோம். காடு மாதிரி கிடந்த இடத்தை ஒரே ராத்திரியில் சுத்தமாக்கி மறுநாளே கூட்டத்தை நடத்தி இருக்கோம். அரசாங்கத்தின் மேல் ஏற்பட்ட கோபத்தினால் எங்க தொண்டர்களும் வந்து குவிஞ்சிட்டாங்க. பார்த்துக்கிட்டே இருங்க... வரும் தேர்தலில் நாங்கதான் ஜெயிப்போம்'' என்றார் நம்பிக்கையாக.

இந்த நடவடிக்கை குறித்து மாநகராட்சியின் ஆணையரான மதுமதியிடம் கேட்டோம், ''கூட்டம் நடத்துவதற்குப் பணம் செலுத்தி ரசீது பெற்று இருப் பது உண்மைதான். ஆனால், ரசீது பெற்றதுடன் மாநகராட்சியின் அனுமதிக் கடிதமும் பெற வேண்டும். கூட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று பெரியசாமியின் ஹோட்டல் நிர்வாகியிடம் தகவல் தெரிவித்து விட்டோம்'' என்றார்.

''கட்சியின் சார்பில் நடத்தப்படும் கூட்டத்துக்கு அனுமதி இல்லை என்ற கடிதத்தை ஹோட்டலுக்கு அனுப்புவது சரியா... 10 நாட்களாகப் பந்தல் போடும் வேலை நடந்தது மாநகராட்சிக்குத் தெரியதா... கூட்டம் நடப்பதற்கு முந்தைய நாள்தான் தடை விதிப்பார்களா?'' என்று உடன்பிறப்புகள் கேட்கும் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

அ.தி.மு.க-வின் நடவடிக்கையால் தூத்துக்குடி தி.மு.க-வில் பெரியசாமி கோஷ்டியும் அனிதா ராதா கிருஷ்ணன் கோஷ்டியும் ஒற்றுமையானதுதான் மிச்சம்!

- எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள்: ஏ.சிதம்பரம்