Published:Updated:

''சிங்களவன் கையாலேயே செத்திருக்கலாம்..!''

செங்கல்பட்டில் ஈழத் தமிழர்கள்

''சிங்களவன் கையாலேயே செத்திருக்கலாம்..!''

செங்கல்பட்டில் ஈழத் தமிழர்கள்

Published:Updated:
##~##
''சிங்களவன் கையாலேயே செத்திருக்கலாம்..!''

''செங்கல்பட்டு, பூந் தமல்லியில் இருப்பதைச் சிறப்பு முகாம் என்று சொல்​வதைவிட, சிங்கள முகாம் என்று சொல்வதுதான் சரி. அந்த அளவுக்கு நாங்கள் சித்ரவதைகளை அனுபவிக்​கி றோம்'' என்று கதறுகிறார்கள் இலங்கையில் இருந்து வந்த நம் தொப்புள்கொடி உறவுகள்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செங்கல்பட்டு முகாமில் நிலவும் பிரச்னைகளுக்காக  சில மாதங்களுக்கு முன், ஈழத் தமி ழர்கள் உண்ணாவிரதம் இருந்​தனர். ஆனாலும் பிரச்னைகள் தீரவில்லை. அதனால், கடந்த 23-ம் தேதியில் இருந்து தவதீபன், காண்டீபன், செல்வராஜ், நந்த​குமார், ஜான்சன், சசிகுமார், சௌந்தரராஜன் ஆகிய ஏழு பேரும் காலவரையற்ற உண்ணா​நிலை அறப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கின்றனர்.

ஈழ அகதிகள் ஒருங்கிணைப்​பாளர் ஈழ நேரு இதுகுறித்து நம்மிடம் பேசினார். 'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதா னவர்களை அடைப்பதற்கு என்றுதான் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம் (சிறை) அமைக்கப்பட்டது. அந்த வழக்கு வெவ்வேறு கட்டங்களுக்குச் சென்ற பிறகும் மத்திய அரசுக்குக் கணக்கு காட்டுவதற்காக இந்த முகாமை கியூ பிரிவு போலீஸார் தொடர்ந்து நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 115 அகதி முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் இருக்கும் அப்பாவி மக்கள் மீது பொய் வழக்குப் போடுவது போலீஸாருக்கு வாடிக்கையாகி விட்டது. பொதுவாக, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஒவ்வொரு 45 நாட்களிலும் அங்கிருக்கும் சிலரை விடுதலை செய்வது வழக்கம். ஆனால், கடந்த 90 நாட்களாக யாரையும் விடுதலை செய்யாமல் போலீஸார் அலைக்கழித்து வருகிறார்கள். அதனால்தான் இவர்கள் கால வரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்கி​றார்கள்'' என்றார்.

''சிங்களவன் கையாலேயே செத்திருக்கலாம்..!''
''சிங்களவன் கையாலேயே செத்திருக்கலாம்..!''

உண்ணாவிரதத்தில் இருக்கும் தவதீபனிடம் பேசினோம். ''திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பக்கத்தில் இருக்கும் பெருமாள்புரம் முகாமில் இருந்த என்னைக் கைதுசெய்து இங்கே அடைச்சிருக்காங்க. நான் தினக்கூலி வேலைக்குப் போவேன். நான் வேலைக்குப் போனால்தான் எங்க குடும்பத்தில் எல்லோரும் சாப்பிட முடியும். நான் வெளிநாடு போக முயற்சி செஞ்சதாக என் மீது பொய் வழக்குப் போட்டிருக்காங்க. நாங்க 22 வருடங்களா இங்கேதான் இருக்கோம். இங்கிருந்து எங்கேயும் போகவும் மாட்டோம். அப்படி இருக்க போலீஸ், இங்கிருக்கும் ஒவ்வொருத்தர் மீதும் ஏதாவது ஒரு பொய்யான காரணத்தைச் சொல்லி வழக்குப் போடுறாங்க. முகாமில் என் குடும்பம் சாப்பிடாமல் இருக்கும்போது, நான் மட்டும் எப்படி சாப்பிட முடியும்? இந்திய அரசு எங்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

''சிங்களவன் கையாலேயே செத்திருக்கலாம்..!''

சொந்த மண்ணை​விட்டு அகதியாகக் கிளம்பியபோது எம் மக்களோடு வாழலாம் என்ற நம்பிக்கையில்தான் தமிழகம் வந்தோம். இங்கு இருக்கும் மக்க​ளால் எங்களுக்கு எந்தப் பிரச் னையும் இல்லை. ஆனால், அதிகாரி​கள் எங்களை குற்ற​வா ளிகளாகவே பார்க்கிறார்கள். இங்கு நாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்க்கும்​போது, சிங்களவன் கையாலேயே செத்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன் றுகிறது'' என்று கண் கலங்குகிறார்.

உண்ணாவிரதம் இருப்பவர்​களில் 12 பேரின் உடல்நிலை மோசமானதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கிடையில், தாசில்தார் இளங்கோவன் மற்றும் கியூ பிரிவு டி.எஸ்.பி. ராமசுப்ர​மணியன் ஆகியோர் உண்ணாவிரதம் இருப்பவர்களிடம் பேச்சு​வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் இன்னமும் உண்ணா​விரதம் தொடர்கிறது.

பேச்சுவார்த்​தைக்குச் சென்ற தாசில்​தார் இளங்கோவன், ''இது தொடர்பாக நான் எதுவும் சொல்ல முடி​யாது. நீங்கள் டி.எஸ்.பி-யிடம் பேசிக்​கொள்​ளுங்கள்'' என்று நழுவினார். டி.எஸ்.பி. ராமசுப்ரமணியனை பலமுறைத் தொடர்பு​கொண்​டும் நம்மிடம் பேசு​வதைத் தவிர்த்து​விட்டார்.

இதுபோன்ற சிறப்பு முகாம்களில் அடைக்கப்​பட்ட​வர்கள் நிலைமை குறித்து தனி நீதிபதி கொண்டு விசா​ரணை நடத்த வேண்டும், அவர்களில் அப்பாவிகள் இருந்தால், உடனே விடுதலை செய்ய வேண்டும். இதுபோன்ற சிறப்பு முகாம்களில் இருப்பவர்கள் அனைவருமே போலீஸாரின் பழிவாங்கும் நடவடிக்​கை​களுக்குப் பலியானவர்கள் தான் என்கிறார்கள் ஈழ ஆதர​வாளர்கள்.

என்ன செய்யப் போகிறது தமிழக அரசு!

- செ.திலீபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism