Published:Updated:

மகா சட்டமா?

மகா சட்டமா?

மகா சட்டமா?

மகா சட்டமா?

Published:Updated:
##~##
மகா சட்டமா?

'திருவள்ளூர் மாவட்டம் மணவூரில், மகா என்பவர் ஊர் மக்களை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்கிறார். அவரது அடாவடி குறித்து போலீஸில் புகார் கொடுத்தால், வாங்க மறுக்கிறார்கள். நாங்கள் என்னதான் செய்வது?’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66802929) புகார் தெரிவித்து இருந்தார் அந்தக் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவரான டில்லி பாபு. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவரைச் சந்தித்தோம். ''மகா வெச்சதுதான் இந்த ஊர்ல சட்டம். அவரை எதிர்த்து நான் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிச்சுட்டேன். அந்தக் கோபத்தில் மகாவின் ஆளுங்க என் தம்பியை வெட்டிட்டானுங்க. இப்போ அவனுக்கு உசுரு மட்டும்தான் இருக்கு... உடம்பு கோமாவுல கிடக்கு. போலீஸ் காரங்களே அந்த மகாவைப் பார்த்துப் பயப்படுறாங்க. மகாவோட அட்டூழியம் தாங்க முடியாமல், இரண்டு குடும்பங்கள் ஊரைவிட்டே போயிட்டாங்க.

மகா சட்டமா?

எங்க ஊருக்கு மேல்நிலைப் பள்ளி சாங்ஷன் ஆகி​யுள்ளது. அந்தப் பள்ளிக்கூடக் கட்டடத்தை வேறு இடத்துக்குக் கொண்டுபோய் கட்டச் சொல்லி மகா பிரச்னை செய்கிறார். ஆனாலும் நான் மேல்நிலைப் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு விடாமல் முயற்சி செய்வதால், என் மீது கோபத்தில் இருக்கிறார். சமீபத்தில்கூட, என்னுடைய இன்னொரு தம்பியையும் என் மகளையும், மகாவோட ஆட்கள் துரத்தினர். எப்படியோ அவங்க தப்பிச்சு வந்துட்டாங்க. 'சீக்கிரமே மணவூர் ஊராட்சிக்கு இடைத்தேர்தல் வரப் போகுது’னு பகிரங்​கமாகவே மிரட்டுகிறார். எனக்கோ அல்லது என் குடும்பத்​தாருக்கோ ஏதாவது நேர்ந்தால், அதுக்கு மகாதான் காரணம்'' என்று கொந்தளித்தார் டில்லி பாபு.

அடுத்துப் பேசிய உயர் நீதிமன்ற வழக்கறிஞரான சுமதி, ''என்னுடைய மாமா ஒருவரை, மகாவின் ஆட்கள் அடித்து விட்டனர். அதில் நான் தலையிட்டு நியாயம் கேட்டேன். அதற்காக இப்போது என் னையும் என் குடும்பத்தையும் அழிச்சிடுவேன்னு மகாவின் ஆட்கள் மிரட்டுறாங்க. நான் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறேன். 'புகாரை வாபஸ் வாங்கலைனா, கோர்ட்டில் வைத்தே உன்னை

மகா சட்டமா?

மானபங்கப்படுத்துவோம்’னு மிரட்டுகிறார்கள். என் அப்பா அம்மாவையும் மிரட்டுகிறார்கள். எங்க ஊர்ப் பெண்களைக் கிண்டல் செய்வதும் கையைப் பிடித்து இழுப்பதுமாக மகாவும் அவருடைய ஆட்களும் செய்யும் அட்டகாசம் தாங்க முடிய வில்லை. நாங்கள் போலீஸில் மகாவைப் பற்றி எந்தப் புகார் கொடுத்தாலும், அது அடுத்த நிமிடமே அவருக்குப் போய்விடுகிறது. அந்த அளவுக்குப் போலீஸ் அவருக்கு விசு வாசமாக இருக்கிறது'' என்று வேதனைப்​பட்டார்.

மகா என்ற மகாலிங்கத்திடம் இந்தக் குற்றச்​சாட்டுகள் பற்றி கேட்டோம். ''20 வரு ஷமா நான் மக்கள் சேவை செஞ்சுட்டு இருக்​கேன். எங்க சுத்து வட்டாரத்தில் எந்த ஊர்ல என்ன விசேஷம்னாலும் என்னைத்தான் கூப்பிடுவாங்க. டில்லி பாபுவை யாருமே மதிப்பது இல்லை என்ற பொறாமையில்தான்

மகா சட்டமா?

ஏதேதோ சொல்கிறார். ஊருக் குள் கோயில் நிலம் நாலு ஏக்கர் இருக்கு. அந்த இடத்தில் பள்ளிக்கூடத்தைக் கட்டுங்கன்னு சொல்றேன். அவங்க கேட்க மாட்டேன்னு சொல்றாங்க. நான் போலீஸை மிரட்டுறேன்னு சொல்றது எல்லாம் வேடிக்கையா இருக்கு. எங்க ஊர்ல இருக்கும் எஸ்.ஐ. நான் சொல்றதைக் கேட்டாலும், அவருடைய மேலதிகாரிங்க எல்லாம் பார்த்துட்டு சும்மாவா இருப்பாங்க? வக்கீல் சுமதியையும் நான் மிரட்டியது இல்லை. அவரது குடும்பத்தாரையும் மிரட்டவில்லை. என் மீது அவர்கள் சொல்லும் எந்தக் குற்றச்சாட்டுக்குமே ஆதாரம் கிடையாது. என்னுடைய பேரைக் கெடுக்கணும்னே இப்படிக் கிளப்புறாங்க'' என்றார் நிதான மாக.

ஊர் மக்களிடம் விசாரித்தோம். 'டில்லி பாபுவின் சொந்த மாமா பையன்தான் மகா. ரெண்டு பேருக்குள் யாரு பெரிய ஆளுன்னு போட்டி வந்துடுச்சி. அதுதான் இத்தனைப் பிரச்னைகளுக்கும் காரணம். ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கிய தகராறு, உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் பெரிசாயிடுச்சு. ஒருத்தரை எதிர்த்து இன்னொருத்தர் போட்டி போட்டதால், வெட்டுக் குத்து வரை போயிடுச்சு'' என்கிறார்கள்.

திருவாலங்காடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மண்ணு ரெட்டியிடம் பேசினோம். 'இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் அரசியல் பிரச்னைதான் இது. மகா மீது இதுவரை எந்தப் புகாரும் எங்களுக்கு வரவில்லை. புகார் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறேன்'' என்றார்.

ஊருக்கும் மக்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு போலீஸாருக்குத்தான் இருக்கிறது!

- நமது நிருபர்

படம்: எஸ்.நாகராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism