Published:Updated:

இலங்கையில் மீன் பிடிக்க அனுமதி கிடைக்குமா?

போராட்டத்தில் மீனவர்கள்

இலங்கையில் மீன் பிடிக்க அனுமதி கிடைக்குமா?

போராட்டத்தில் மீனவர்கள்

Published:Updated:
##~##
இலங்கையில் மீன் பிடிக்க அனுமதி கிடைக்குமா?

'இலங்கைக் கடல் பகுதி​யில் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெற்றுத்தர வேண்டும்’ என்ற கோரிக்கையோடு நாகை மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்​டத்தில் இறங்கி உள்ளனர். இந்தப் போராட்டம் மற்ற கட லோர மாவட்டங்களுக்குப் பரவும் வாய்ப்பும் ஏற்பட்டு இருக்கிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த டிசம்பர் மாதம் 2-ம் தேதி, கடலில் மீன் பிடித்துக்​கொண்டு இருந்த காரைக்கால் மீனவர்கள் 13 பேர் மற்றும் நாகப்பட்டினம் மீனவர்கள் 14 பேரை இலங்கைக் கடற்படை கைதுசெய்து சிறையில் அடைத்​தது. பல முயற்சிகளுக்குப் பிறகு கடந்த 29-ம் தேதிதான் அவர்கள் நாடு திரும்பினர். அன்று முதல், மீனவர்களும் வேலை நிறுத் தத்தைத் தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து, இந்திய தேசிய மீனவர் சங்கத்தின் தலைவர் ராஜேந்​திரன் நாட்டாரிடம் பேசினோம். ''1984-ம் ஆண்டில் இருந்து இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கொன்று இருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டுமே நாகப்பட்டினம் மீனவர்களை மூன்று முறை கைதுசெய்து இருக்கிறார்கள். 14 முறை கடுமையாகத் தாக்கி மீன்களையும் வலை​​களையும் பறித்து இருக்கிறார்கள். இதுபோலவே ராமேஸ்வரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி மீனவர்களையும் தாக்கி, கைதும்செய்து இருக் கிறார்கள்.

இலங்கையில் மீன் பிடிக்க அனுமதி கிடைக்குமா?

இந்த நிலையில்தான் நாகை மாவட்ட மீன் வளத் துறையின் சார்பில் கடந்த மாதம் 27-ம் தேதி எங்களை அழைத்துப் பேசினர். 'நாகப்பட்டினம் துறைமுகத்தைச் சேர்ந்த நீங்கள்தான் இலங்கை

இலங்கையில் மீன் பிடிக்க அனுமதி கிடைக்குமா?

எல்லைக்குள் அதிகமாக நுழைகிறீர்கள் என்று இலங்கை அரசு கடிதம் எழுதி இருக்கிறது. அதனால், நீங்கள் இனி எல்லைத் தாண்டிப் போகாதீர்கள்’ என்று எங்களிடம் வலியுறுத்தினர். சுனாமிக்குப் பிறகு, நாகை மாவட்டக் கடல் பகுதியில் சுத்தமாக மீன் வளமே இல்லை. அதனால், ஆழ்கடலுக்குத்தான் நாங்கள் செல்லவேண்டி இருக்கிறது. அது இலங்கை எல்லைக்குள் வந்துவிடுகிறது. அங்கே போக வேண்டாம் என்றால், நாங்கள் கடலுக்குள் போவதற்கு வேலையே இல்லை. அத னால்தான், இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடிக்க அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துகிறோம்'' என்றார்.

''இந்தக் கோரிக்கை நடைமுறைக்கு சாத்தியம்தானா?'' என்ற கேள்வியுடன் அக் கரைப்பேட்டை மீனவப் பஞ்சாயத்தின் பொருளாளரான திருவளர்செல்வனை சந்தித்தோம். ''இது சாத்தியமா, இல்லையா என்பதல்ல விஷயம். வேறுவழி இல்லை என்றுதான் சொல்கிறோம். இலங்கை மீனவர்கள் நம் இந்தியப் பகுதியில் ஒடிசா வரை வந்து மீன்பிடிக்கிறார்கள். பாகிஸ்தான் கடல் பகுதியில் நம் மீனவர்களும், நம் கடல் பகுதியில் பாகிஸ்தான் மீனவர்களும் மீன் பிடிக்கிறார்கள். அங்கு எல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லை. இலங்கைக் கடல் பகுதியும் நம் கடல் பகுதியும் அருகருகே இருப்பதால், காலம் காலமாக இப்படித்தான் மீன் பிடித்துக்கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில் திடீரென்று கட்டுப்பாடுகள் விதிப்பதால், இலங்கையிடம் பேசி முறைப்படி அனுமதி வாங்கித் தாருங்கள் என்று கேட்கிறோம்.

12 மாதங்களில் மீன்பிடித் தடைக் காலம் ஒன்றரை மாதங்கள் போக மீதம் உள்ள எல்லா மாதங்களிலும் அங்கே போய் மீன் பிடிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்காவது அனுமதி வேண்டும் என்றுதான் கேட்கிறோம். இப்படி ஒப்பந்த அடிப்படையில் உலகெங்கும் பக்கத்து நாட்டுக் கடல் எல்லையில் மீன்பிடிக்கத்தான் செய்கிறார்கள். இலங்கை மீனவர்கள் இங்கேயும், நம் மீனவர்கள் அங்கேயும் போய் இது சம்பந்தமாகப் பேசி இருக் கிறார்கள். அதை முறைப்படி அரசு சார்பில் பேசி னால், நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்'' என்றார்.

அதேசமயம், ''இலங்கை மீனவர்கள் அலை வலையை மட்டும்தான் பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் நாட்டு மீன் வளம் குறையவில்லை. நமது மீனவர்கள் இழுவை வலையைப் பயன்படுத்துவதால், மீன் வளம் வேகமாகக் குறைந்துகொண்டே வருகிறது. இவர்களும் அலை வலையைப் பயன் படுத்தினால், இங்கே திரும்பவும் மீன் வளம் பெருகும். அதைச் செய்யாமல், அங்கே போய் மீன் பிடிக்க அனுமதி கேட்பது முரண்பாடான விஷயம். அரசும் இழுவை வலைக்குத் தடை விதிக்க வேண்டும்'' என்று மீனவர்களில் ஒரு தரப்பினர் சொல் கிறார்கள்.

இதுகுறித்து, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபாலிடம் பேசினோம். ''மீனவர்கள் என்னைச் சந்திக்க வந்தபோது, 'உங்கள் கோரிக்கைகளை அம்மாவிடம் பேசி சீக்கிரம் நிறைவேற்ற முயற்சிக்கிறேன். அதற்காக வேலைநிறுத்தம் எல்லாம் வேண் டாம்’ என்று சொன்னேன். ஆனாலும், வேலை நிறுத்தத்தில் இறங்கி விட்டனர். இது, இரு நாடுகள் பேசித் தீர்க்கவேண்டிய விஷயம். இலங்கை அரசிடம் பேசுவதற்கான வேலைகள் நடக்கின்றன. அது ஓரிரு நாளில் முடிகிற விஷயம் அல்ல. அதனால், மத்திய அரசையும் அணுகி இந்த விஷயத்தில் விரைவில் நல்ல தீர்வு காணப்படும். அதுவரை காத்திருக்காமல் மீனவர்கள் தொழி​லுக்குத் திரும்ப வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

மீனவர் வாழ்க்கையில்  எப்போ துதான் நிம்மதி ஏற்படுமோ?

- கரு.முத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism