Published:Updated:

''நிதி நெருக்கடியை நோக்கி பாரதிதாசன் பல்கலைக்கழகம்!''

பதறும் ஊழியர்கள்

''நிதி நெருக்கடியை நோக்கி பாரதிதாசன் பல்கலைக்கழகம்!''

பதறும் ஊழியர்கள்

Published:Updated:
##~##
''நிதி நெருக்கடியை நோக்கி பாரதிதாசன் பல்கலைக்கழகம்!''

'சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதுபோன்ற நிலைமை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்​​கழகத்துக்கும் ஏற்படப் போகிறது’ என்று அலறு​கிறார்கள் அதன் ஊழியர்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பல்கலைக்கழகப் பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் பேசினோம். ''பாரதிதாசன் பல் கலைக்கழகத்தில் 2011-ம் ஆண்டு, ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமனம் செய்ததில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. அதனால், அந்தப் பணி நியமனத்தை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை பெஞ்சில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், இப்போது 38 பேராசிரியர்களை பல்கலைக்கழகம் அவசர அவசரமாக நியமனம் செய்துள்ளது. 'வழக்கு முடிந்த பிறகுதான், புதிய நியமனம் செய்ய வேண்டும்’ என்ற எங்களின் கோரிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. லஞ்சம் பெற்றுக் கொண்டு நியமனம் செய்துள்ளனர். புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு மட்டுமே கூடுதலாக இரண்டே கால் கோடி ரூபாய் மாதம்தோறும் செலவாகும்.

''நிதி நெருக்கடியை நோக்கி பாரதிதாசன் பல்கலைக்கழகம்!''

பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கை மூலமாகவே முன்பு நிறைய வருவாய் வந்தது. இப்போது, மாணவர் சேர்க்கை குறைந்து விட்டதால், பல்கலைக்கழகத்துக்கு

''நிதி நெருக்கடியை நோக்கி பாரதிதாசன் பல்கலைக்கழகம்!''

வருமானம் குறைந்து விட்டது. அதனால், எதிர்​காலத்தில் பணியாளர்களுக்குச் சம்பளம் தரவே பணப்பற்றாக்குறை ஏற்படும் நிலை. இதுபற்றி கவர்னர், முதல்வர், உயர்கல்வித் துறை அமைச்சர், கல்வித் துறை செயலாளர் உள்ளிட்ட பலருக்கும் புகார் மனு அளித்துள்ளோம். கவர் னரைச் சந்தித்து நிலவரத்தை விளக்கிச் சொல்லவும் ஏற்பாடுகள் நடந்தன. எங்கள் நட வடிக்கையைக் கண்டு சுதாரித்துக்கொண்ட நிர்வாகம், சிண்டிகேட் கூட்டத்தைக் கூட்டி புதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் பெறும் நடவடிக்கையை எடுத்தது. டிசம்பர் 22-ம் தேதி நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் 18 உறுப்பினர்களில் ஒன்பது பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அதிலும் மிகமுக்கியமான சிண்டிகேட் உறுப்பினரான உயர்கல்வித் துறை செயலாளர் கலந்து கொள்ளவில்லை. அவரது சார்பில் கலந்து கொண்ட துணைச் செயலாளர் சுகுணா, புதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அரசுத் துறை செயலாளரின் எதிர்ப்பை மீறி, மற்ற சிண்டிகேட் உறுப்பினர்​களிடம் ஒப்புதல் பெற்று சனிக்கிழமை என்றும் பார்க்காமல் இரவோடு இரவாக 38 பேராசிரியர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இது, பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டுக்கே சிரமத்தைக் கொடுக்கப்போகிறது'' என்று புலம்பினர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் இணைந்து டிசம்பர் 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்ட ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் பாண்டியனைச் சந்தித்தோம். ''பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது பற்றி நாங்கள் கொடுத்த புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். ஏற்கெனவே நடந்த பணியாளர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் புதிய பணியாளர்களை நியமிக்க அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன? இதில் இருந்தே ஏதோ தவறு நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்'' என்றார் ஆவேசமாக.

பல்கலைக்கழக துணைவேந்தரைச் சந்திக்க முயன்றோம். ''டிசம்பர் 29-ம் தேதி பல்கலைக்கழக செனட் கூட்டம் நடக்கிறது. அப்போது பத்திரி கையாளர்களைச் சந்திக்கும் துணைவேந்தர், உங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பார்'' என்று  கூறப்பட்டது. அவர்கள் சொன்னபடியே நாம் ஆஜர் ஆனோம். அன்றைய தினம் பத்திரிகையாளர்களிடம் பேசிய துணைவேந்தர் மீனா, ''சிலர் வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்புகின்றனர். பேராசிரியர்கள் நியமனமானது, பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு வழிமுறைப்படி தகுதிமிக்க நபர்களைக் கொண்ட குழுவினரால் நடத்தப்பட்டது. இந்த நியமனத்துக்கு ஒருமனதாக அனைத்து சிண்டிகேட் உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். புதிய பணியாளர் நியமனத்தை எதிர்த்து மூன்று வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நடந்து வருவதால், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 'நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டும்’ என்கிற நிபந்தனையுடன் பணி நியமன ஆணை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதால், மேற்கொண்டு எதுவும் சொல்ல இயலாது'' என்றார்.

சிண்டிகேட் கூட்டத்தில் உயர்கல்வித் துறை செயலாளரின் பிரதிநிதியாக கலந்து கொண்ட துணைச் செயலாளர் சுகு ணாவிடம் பேசினோம். ''சிண்டிகேட் கூட் டத்தில், புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்குவதை தள்ளி ​வைப்போம் என்றேன். மற்ற சிண்டிகேட் உறுப்பி​னர்கள் ஒப்புதல் அளிக்கலாம் என்றனர். அந்தக் கூட்டத்தில் நடந்தவற்றைப்பற்றி எனது துறை செயலாளருக்கு அறிக்கை அனுப்பியுள்ளேன்'' என்றார்.

திடீர் நியமனத்துக்கு என்னதான் அவசியமோ?

- அ.சாதிக்பாட்ஷா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism