Published:Updated:

''ஊழல் குற்றவாளியின் அருகே சகாயம்?''

சேலம் திகுதிகு

''ஊழல் குற்றவாளியின் அருகே சகாயம்?''

சேலம் திகுதிகு

Published:Updated:
##~##
''ஊழல் குற்றவாளியின் அருகே சகாயம்?''

தான் செல்லும் இடங்களில் எல்லாம் ஊழலுக்கு எதி ரான பிரசாரம் செய்கிறார் சகாயம் ஐ.ஏ.எஸ். ஆனால், லஞ்சம் வாங்கும், ஊழல் செய்யும் ஒருவருடன் ஒரு நிகழ்ச்சியில் அவரே கலந்து கொண்டார் என்பதுதான் சேலம் பரபரப்பு. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'லஞ்சம், ஊழல் அற்ற சமுதாயம்’ என்ற சிறப்புக் கருத்​தரங்கம் சேலம் குஜராத்தி திருமண மண்டபத்தில் கடந்த 30-ம் தேதி நடந்தது. 'நுகர்வோர் குரல்’ அமைப்பின் தலைவர் பூபதி, ''நாம் வெள்ளையரிடம் இருந்து விடுதலை பெற்றுவிட்டோம். கொள் ளையரிடம் இருந்துதான் இன்னும் விடுதலை பெற முடியவில்லை. நமக்கு லட்சம் பெரியது அல்ல; லட்சியம்தான் பெரியது. கோடி பெரியது அல்ல; கொள்கைதான் பெரியது. நம் இதிகாசத்தில் சொல்லப்பட்டு இருப்பதுபோல, எங்கு அதர்மம் தலைதூக்குகிறதோ, அங் கெல்லாம் உத்தமப்புருஷன் தோன்றுவார். அதுபோலவே நம் சகாயம் தோன்றி இருக்கிறார். ஊழல், லஞ்சம் அற்ற நாடு என்பதுதான் உண்மையான சுதந்திரம் பெற்றதற்கான அடையாளம்'' என்றார்.

''ஊழல் குற்றவாளியின் அருகே சகாயம்?''

சேலம் ஜெய்ராம் கல்லூரியின் தாளாளர் ராஜேந்திர பிர சாத் பேசும்போது, ''எல்லாத் துறைகளிலும் ஊழல் அதிகரித்து​விட்டது. அதிகாரிகள் தவறு செய்தால், தண்டிக்கப்படுவது இல்லை. ஒரு நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு கொடுக்கபோன ஒரு இன்ஸ்பெக்டரும் ஒரு பெண் காவலரும் அங்கே தனியாக ஓர் அறைக்குள் இருந்திருக்கிறார்கள். அதையே ஒரு சாதாரண மனிதன் செய்திருந்தால், அவர்கள் மீது விபசார வழக்கு போட்டிருப்பார்கள். தவறு செய்தவர்களை இப்போது இடமாற்றம் மட்டுமே செய்திருக்கிறார்கள்'' என்று பேச, பின் வரிசையில் இருந்து எழுந்த 'சேலமே குரல் கொடு’ அமைப்பின் தலைவர் பியூஸ் மானஸ், ''லஞ்சம், ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு ராஜேந்திர பிரசாத்துக்கு எந்தத் தகுதியும் இல்லை. அவர் கல்விக் கொள்ளையின் தந்தை. நேர்மையான சகாயத்தின் அருகில் உட் காருவதற்கு அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை'' என்று கூச்சல் போட, பியூஸ் மானஸை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி விட்டனர்.

''ஊழல் குற்றவாளியின் அருகே சகாயம்?''

அதன்பிறகு, கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக் குனராக இருக்கும் சகாயம் பேச ஆரம்பித்தார். ''என் அலுவலகத்தில் 'லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்’ என்று எழுதி இருப்பேன். மூன்று ஆண்டுகளுக்கு முன், முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினேன். 'என் வேலையைச் சரியாகச் செய்ய​வில்லை என்றால், பணிநீக்கம் செய்யுங்கள். என்னுடைய 19 வருட அரசுப் பணியில் ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கி இருந்தேன் என்றாலும் தூக்கில் போடுங்கள்’ என்றேன்'' என்றார் தில்லாக.

கூட்டம் முடிந்த பிறகு, பியூஸ் மானஸை சந்தித்துப் பேசினோம். ''ஜெய்ராம் கல்லூரி ராஜேந்திர பிரசாத் ஊழலுக்கு எதிராக இதுநாள் வரை என்ன செய்திருக்கிறார்? ஊழல் பெருச்சாளியான இவர் எப்படி சகாயம் கலந்துகொள்ளும் விழா வுக்குத் தலைமை ஏற்க முடியும்? ஏழை, எளிய மாணவர்களிடம் இவர் கொள்ளையடிக்கும் டொனேஷன் தொகை பற்றி ஊருக்கே தெரியும். இவர் கல்லூரிக்கு என்று தனியாக சட்ட திட்டங்களை வகுத்துக்கொண்டு பெண் உரிமைக்கு எதிராகச் செயல்படுபவர். அவரைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளாமல், சகாயம் இந்த விழாவுக்கு வந்து விட்டார். அதனால்தான் சத்தம் போட்டேன். சகாயத்தைச் சந்தித்து அத்தனை உண்மைகளையும் சொல்லப்போகிறேன்'' என்றார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஜெய்ராம் கல்லூரி தாளாளர் ராஜேந்திர பிரசாத்திடம் பேசினோம். ''நான் அந்தக் கூட்டத்தில் தலைமை ஏற்கக் கூடாது என்று சொல்வதற்கு அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அவரை நாங்கள் யாரும் விழாவுக்கு அழைக்கவே இல்லை. பிரச்னை செய்ய வேண்டும் என்பதற்காகவே அழையாத விருந்தாளியாக வந்து இருக்கிறார். என்னைப் பற்றி சேலத்தில் இருக்கும் எல்லோருக்கும் தெரியும். எங்கள் கல்லூரியில் எத்தனையோ ஏழை மாணவர்களைக் கட்டணம் இல்லாமல் படிக்க ​வைத்து வருகிறேன். இது என்னை அறிந்த எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

அந்தப் பையன் 1996-ம் ஆண்டு எங்கள் கல்லூரியில் படித்தவர்தான். கல்லூரியில் படிக்கும்போதே பல தகாத செயல்களில் ஈடு பட்டதால், இடைநீக்கம் செய்யப்பட்டார். அதை மனதில் வைத்துக்கொண்டு என்னை அசிங் கப்படுத்துவதற்காக பொதுமேடையில் வம்பு செய்கிறார். அவர் கூட்டத்தில் பேசியதை நான் பொருட்படுத்தவே இல்லை'' என்றார் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.

சத்தமில்லாமல் ஆரம்பித்த சகாயம் விழா சர்ச்சையில் முடிந்து விட்டது.

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism