Published:Updated:

''மலைராஜையும் கொலை பண்ணிட்டாங்க''

உயிருக்கு நடுங்கும் கதிரேசன் தம்பி

''மலைராஜையும் கொலை பண்ணிட்டாங்க''

உயிருக்கு நடுங்கும் கதிரேசன் தம்பி

Published:Updated:
##~##
''மலைராஜையும் கொலை பண்ணிட்டாங்க''

சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் கதிரேசன் கொலை வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டும் நிலையில், கதிரேசனின் விசுவாசியான மலைராஜ் என்பவர் சாலை விபத்தில் பலியாக, 'இதுவும் கொலைதான்’ என்று பகீர் கிளப்புகிறார் கதிரேசனின் தம்பி கிருஷ்ணன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கதிரேசன் கொலையில் பெரியகண்ணனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அர்ச்சுனன், காளையார்கோவில் ஒன்றிய அ.தி.மு.க. செய​லாளர் பழனிச்சாமி, கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-வான எஸ்.குணசேகரன் உள்ளிட்ட 30 பேர் மீது புகார் கொடுத்தார் கிருஷ்ணன். இந்த வழக்கு சி.பி. சி.ஐ.டி. விசாரணைக்கு மாறியதும் பழனிச்சாமி, குணசேகரன் ஆகியோரைத் தவிர்த்து அர்ச்சுனன் உள்ளிட்ட 20 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். பழனிச்சாமி உள்ளிட்ட சிலர் இன்னமும் விசாரணையில் இருக்கிறார்கள். இந்தநிலையில், பழனிச்சாமி உள்ளிட்டோர் தங்களுக்குக் கொலை மிரட்டல் விடுவதாக, கிருஷ்ணனின் மனைவியும் பெரியகண் ணனூர் ஊராட்சி மன்றத் தலைவருமான சத்யாவும் கதிரேசனின் மனைவி பிரேமாவும் கலெக்டரிடம் புகார் கொடுத்து இருக்கின்றனர்.

''மலைராஜையும் கொலை பண்ணிட்டாங்க''

இது தொடர்பாக நம்மிடம் பேசிய கிருஷ்ணன், ''அர்ச்சுனன் தரப்பினரின் அராஜகங்கள் தொடர்பாக 13 புகார்களைக் கொடுத்தோம். அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், அண்ணனை நாங்கள் பறிகொடுத்திருக்க மாட்டோம். எங்க அண்ணன் பொண்ணு நிகிலாவின் உடல்நிலை இப்போதுதான் தேறிவருகிறது. கொலையாளிகளை நிகிலாவுக்குத் தெரியும் என்பதால், அவரையும் எங்கள் அண்ணியையும் தீர்த்துக்கட்ட அலை​கிறார்கள். அவங்களுக்கு ஆதரவாக இருக்கும் எங்​களுக்கும் மிரட்டல் வருகிறது. டிசம்பர் 26-ம் தேதி, இளையான்குடி கண்மாய்க்குள் கூடிப் பேசிய ஒரு கும்பல், 'ஆனானப்பட்ட ஆளையே போட்டுத் தள்ளியாச்சு, இதுகளையும் முடிச்சுட்டு ஒரே கேஸா நடத்திக்குவோம்’னு பேசிருக்காங்க. இது தெரிஞ்சதுமே அண்ணியைக் கூட்டிட்டுப்போய் கலெக் டரிடம் புகார் கொடுத்தோம். எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, அண்ணிக்கும் அண்ணன் பொண்ணுக்கும்

''மலைராஜையும் கொலை பண்ணிட்டாங்க''

எந்த ஆபத்தும் வந்துடக் கூடாதுங்க. 'ராத்திரிக்கு சாப்பிட வீட்டுக்கு வந்துடுறேன்’னு சொல்லிட்டுப்போன எங்க அண்ணன் வீட்டுக்குத் திரும்பலை. அதேமாதிரி இன்னொரு சம்பவம் நடந்திருக்கிறது. எங்கள் அண்ணனுக்கு ரொம்பவும் நெருக்க​மாக இருந்தவர் மலைராஜ். டிசம்பர் 10-ம் தேதி, 'சாப்பிட வர்றேன்’னு சொல்லிட்டு காளையார்கோவிலில் இருந்து கிளம்பிய மலைராஜ், வீடு போய்ச் சேரலை. வழியில் ஆக்ஸி​டென்ட் ஆகி, மறுநாளே இறந்துட்டார். எங்க அண்ணனைத் தீர்த்துக் கட்டிய கும்பல்தான் அவரையும் விபத்து பாணியில் கொலை செய்திருக்க வேண்டும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நேர்மையாகத்தான் விசாரிக்கிறார்கள். ஆனால், காளையார்கோவில் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பழனிச் சாமியை ஏன் இன்னமும் கைது செய்யவில்லை? எல்லா​வற்றுக்கும் காரணம் அவர்தான். எங்கள் உயிருக்குப் பாது காப்பு வேண்டும்'' என்று கலங்கினார்.

''விலை மதிப்பில்லாத சொத்தையே இழந்துட்டோம், இனிமே இழக்கிறதுக்கு என்ன இருக்கு?'' எனக் கண் கலங்கிய கதிரேசனின் மனைவி பிரேமா, ''பழனிச்சாமி,போலீஸ்​காரங்க கல்யாணசுந்தரம், முருகன் இவங்​களுக்கும் கொலையில் தொடர்பு இருக்குன்னு நாங்க எழுதிக் கொடுத்தோம். இன் னமும் அவங்களைக் கைதுசெய்யலை. அவங்களாலதான் இப்ப எங்களுக்கு மிரட் டல் வருது. நானும் என் பிள்ளையும் சிவ கங்கையில் தனியாத்தான் இருக்கோம். என்னையும் என் பிள்ளையையும் தீர்த் துக்கட்ட பிளான் போடுறாங்கன்னு தெரிந் ததில் இருந்தே பயத்தில் நடுங்கு​கிறோம்'' என்றார்.

''மலைராஜையும் கொலை பண்ணிட்டாங்க''
''மலைராஜையும் கொலை பண்ணிட்டாங்க''

பழனிச்சாமி தரப்பிலோ, ''கதிரேசன் கொலைக்கும் பழனிச்​சாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால்தான் அவரைக் கைது செய்யவில்லை. தங்களுக்குப் பிடிக்காத அத்தனை பேரையும் கைது செய்யணும்னு கதிரேசன் தரப்பினர் புகார் கொடுத்திருக்காங்க. உண்மையில் கதிரேசன் தரப்பினரால் தனக்கு ஆபத்து வரும் என்று பழனிச்சாமிதான் பயப்படுகிறார்'' என்கிறார்கள்.

மாவட்ட எஸ்.பி. சக்திவேலிடம் மிரட்டல் புகார் குறித்துக் கேட்டோம். ''கொலைக்குப் பிறகு, கதிரேசனின் சொந்த ஊரில் போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கிறோம். மிரட்டல் புகார் வந்த பிறகு, இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்பைப் பலப்​படுத்​தியும் இருக்கிறோம். சிவகங்கையில் உள்ள கதிரேசனின் வீட்டை இரவும் பகலும் கண்காணிக்க ஸ்பெஷல் டீம் ஒன்றையும் நியமித்து இருக்கிறோம். இதையும் தாண்டி அவர்களை யாராவது அச்சுறுத்துவதாக ஆதாரத்துடன்புகார் கொடுத்தால், தனியாக வழக்குப்பதிவு செய்து நிச்சயம் நடவடிக்​கை எடுப்போம். மலை ராஜ் இறந்தது விபத்தில்தான்'' என்றார்.

பகையும் பதற்றமும் அடங்கட்டும்!

- குள.சண்முகசுந்தரம் படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism