Published:Updated:

பட்டாவுக்குத் தடைபோடும் கமிட்டித் தலைவர்!

தேனியில் புது ராஜாங்கம்

பட்டாவுக்குத் தடைபோடும் கமிட்டித் தலைவர்!

தேனியில் புது ராஜாங்கம்

Published:Updated:
##~##
பட்டாவுக்குத் தடைபோடும் கமிட்டித் தலைவர்!

'ஜனநாயகம் தழைப்பதற்காக அரசு உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும், இன்னமும் எங்கள் ஊரில் தனி நபர் நாட்டாமைதான் நடக்கிறது’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல் (044-66802929) அலறியது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகில் உள்ள சிலைமலைப் பஞ்சாயத்து மக்கள்தான் இப் படிப் புகார் சொன்னவர்கள். அந்தப் பகுதிக்குச் சென்றோம். சூலப்புரம் பகுதி ஒன்றாவது வார்டு கவுன்சிலர் தங்கப்பாண்டி, 'போடியை ஆண்ட மங்கம்மாள் காலம்தொட்டு 200 ஆண்டுகளாக இங்குதான் நாங்கள் சுமார் 350 குடும்பங்கள் வசிக் கிறோம். இது, மணலும் காற்றும் நிறைந்த பிரதேசம் என்பதால், காற்றால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுக்க 150 ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். எங்கள் கிராமம் சிலைமலை பஞ்சாயத்தின் கீழ் வருகிறது. எங்களுக்கு ஒரு பஞ்சாயத்துத் தலைவர் இருந்தாலும், கிராமக் கமிட்டித் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் மோகன்குமார் செய்யும் அடாவடிகளைத் தாங்க முடியவில்லை.

பட்டாவுக்குத் தடைபோடும் கமிட்டித் தலைவர்!

கடந்த 30 ஆண்டுகளாகவே இந்த மோகன் குமார்தான் கிராமக் கமிட்டித் தலைவராக இருக் கிறார். அவர் வசதி படைத்தவர். அதனால், அவர் வைத்ததுதான் இங்கே சட்டம். மண் அரிப்பைத் தடுப்பதற்காக நடப்பட்ட மரங்களை எல்லாம் வெட்டியதோடு ஓடை மணலையும் அள்ளினார். அதை நாங்கள் தட்டிக்கேட்டோம். அதனால், எங்களுக்குப் பட்டா, மின்இணைப்பு தரவிடாமல் தடுக்கிறார். அ.தி.மு.க., தி.மு.க. என்று எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வந்தாலும், கிராமக் கமிட்டியில் அவர் சொன்ன ஆட்கள்தான் உறுப் பினர்கள். அதனால், அவர் சொல்வதுதான் செல்லுபடியாகிறது.

பட்டாவுக்குத் தடைபோடும் கமிட்டித் தலைவர்!

யார் அனுமதியும் பெறாமல் பல லட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டினர். குறைந்த விலைக்கு அவர்களே ஏலம் எடுத்தனர். அதைத் தட்டிக்கேட்டதால், கிராமக் கமிட்டி உறுப்பினர் கருப்பையா மூலம் எங்கள் குடியிருப்புகளை அகற்றச் சொல்லி வழக்குப் போட்டு மிரட்டினார். நாங்கள் விடாப்பிடியாகப் போராடவே வழக்கை வாபஸ் வாங்கினர். மூர்த்தி என்பவர் மூலம் மறுபடியும் எங்களை வெளியேறச்

பட்டாவுக்குத் தடைபோடும் கமிட்டித் தலைவர்!

சொல்லி வழக்குப் போட்டனர். அதை எதிர்த்து நாங்களும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்குச் சென்ற போது, சம்பந்தப்பட்ட இடத்தை ஆராய்ந்து எட்டு வாரங்களுக்குள் மக்களுக்குப் பட் டா வழங்க வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டது. அதை எதிர்த்து கிராம ஊராட்சித் தலைவர் மூலம் அப்பீல் செய்தனர். ஐந்து ஆண்டுகள் முடிந்து, இப்போது வேறு ஒருவர் ஊராட்சித் தலைவராகி விட் டார். அதனால், வழக்கு அப்படியே கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது... எங்களுக்கு எப்போது பட்டா கிடைக்கும் என்றே தெரியவில்லை...'' என்று கலங்கினார்.

அடுத்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் செல்வராஜ், 'என் வீடும் இங்குதான் உள்ளது. வீடு கட்டி மின் இணைப்பு கொடுக்கும் நேரத்தில், இப்படிப் பிரச்னை செய்கிறார்கள். இதை நீர்நிலைப் புறம்போக்கு இடம் என்கிறார்கள். அந்த இடத்தில்தான் பள்ளிக்கூடம், அங்கன்வாடி மையம், கதிர் அடிக்கும் களம்,  மகளிர் சுய உதவிக் குழு கட்டடம் என அரசுக்குச் சொந்தமான கட் டடங்கள் இருக்கின்றன. அரசின் உள்ளாட்சி அமைப்பு முறை இருக்கும்போது, கிராமக் கமிட்டி என்ற பெயரில் ஊருக்குள் நாட் டாமை செய்வது அரசின் உள் ளாட்சி அமைப்புக்கு எதிரானது. அவர் கிராமத்தைத் தன் கைப் பிடிக்குள் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு கிராமக் கமிட்டி என்று சொல்லி எல்லோரையும் ஏமாற்றுகிறார்'' என்றார்.

குற்றம் சாட்டப்படும் சிலைமலைக் கிராமக் கமிட்டித் தலைவர் மோகன்குமாரிடம் பேசினோம். '25 வருடங்களாக நான்தான் கிராமக் கமிட்டித் தலைவராக இருக்கிறேன். இதில் எல்லா சாதிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் இருக்காங்க. முறையான ஏலம் மூலம்தான் மரங் களை வெட்டினோம். ஏலத்தில் கடைசி வரை மக்களும் கலந்து கொண்டனர். மரம் விற்ற பணத்தில், ஊருக்குப் பல நல்ல விஷயங்கள் செய்து கொடுத்து இருக்கிறோம். எனக்கு எதிரான புகார்கள் எல்லாமே கட்சிக்காரர்கள் கிளப்பிவிடுவதுதான். நான் கிராம சபைக் கூட்டம் நடத்தி, ஊரை நன்றாக வைத்திருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை'' என்றார்.

''அதற்குத்தான் உள்ளாட்சி அமைப்பும் ஊராட்சித் தலைவரும் இருக்கிறார்களே?'' என்று கேட்டதற்கு, ''எல்லா விஷயங்களையும் அவர்களால் செய்துவிட முடியுமா?'' என்று பதில் கேள்வி கேட்டார்.  

கலெக்டர் பழனிசாமியிடம் மக்களுக்குப் பட்டா கிடைக்காதது குறித்துப் பேசினோம். ''இது சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருக்கிறது. தீர்ப்பு வந்ததும் நீதிமன்றம் சொல்லும் முடிவை நடைமுறைப்படுத்துவோம்'' என்றார்.

மக்களுக்கு விரைவில் நல்லது நடக்கட்டும்!

- சண். சரவணக்குமார் படங்கள்: சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism