Published:Updated:

கையை முறுக்கி... எட்டி உடைத்து...

அராஜக போலீஸ்... அலறும் வணிகர்கள்!

கையை முறுக்கி... எட்டி உடைத்து...

அராஜக போலீஸ்... அலறும் வணிகர்கள்!

Published:Updated:
##~##
கையை முறுக்கி... எட்டி உடைத்து...

'மக்களுக்கு ஒரு பிரச்னை என் றால், போலீஸிடம் முறை​யிடுவார்கள்.... போலீஸே பிரச்னை செய்தால்?’ - சென்னை கீழ்ப்பாக்கத்தில் சமீபத்தில் நடந்த விஷயங்களைப் பார்த்து இப் படித்தான் புலம்புகிறார்கள் வணி கர்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்படி என்ன நடந்தது?

கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் செல்வம் ஸ்டோர்ஸ் என்ற மளிகைக் கடையை நடத்துபவர் செல்வநாயகம். போலீஸ்காரர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனையில் சேர்க்கப்​பட்டு இருக்கிறார். நடந்ததை அவரே சொல்கிறார். ''இந்த ஏரியாவில

25 வருஷமா கடை நடத்துகிறேன். நான் உண்டு என் வேலை உண்டுன்னுதான் இருப்பேன். கடந்த 3-ம் தேதி இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிஞ்சதும் வரவு செலவுக் கணக்கைப் பார்த்துட்டு இருந்தேன். அப்ப கடைக்கு முன்னாடியே வந்து நின்ன ரெண்டு பேர் கொஞ்சம்​கூட நாகரிகமே இல்லாம யூரின் போனாங்க. நான், 'ஏன்ப்பா கடைக்கு முன்னாடி போறீங்க? கொஞ்சம் தள்ளிப் போகக் கூடாதா?’னு

கையை முறுக்கி... எட்டி உடைத்து...

கேட்டேன். உடனே அவங்க 'நான் யாரு தெரியுமா? மதுரையே எங்க பின்னாடி வரும். எங்களுக்கு எவ்வளவு பேர் இருக்காங்க தெரியுமா? ஒரு வார்த்தை சொன்னாப்போதும், கோவில் பட்டியில இருந்து ஆட்​களை லாரி லாரியா கூட்டிட்டு வந்து எறக்கிடுவேன். நீ உன் வேலையைப் பார்த்துட்டு போடா’னு என் குடும்பத்தைப் பத்தியும் கண்டபடி திட்டினாங்க. சரி குடிச்சுட்டு பேசுறாங்கன்னு நான் ஏதுவுமே கண்டுக்​கலைங்க. எனக்கு ஆதரவா வந்தவங்களை நான்தான் சமாதானப்படுத்திக்கிட்டு இருந்தேன். 'போறான் விடுங்க. நாம க்ளீன் பண்ணிக்கலாம்’னு சொன்னேன். அப்ப, அந்த இரண்டு பேரும் என்னை அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. எல்லாரும் தடுத்தப்பவும் தள்ளிட்டு வந்து கெட்ட வார்த்தையால திட்டிக்கிட்டே சரமாரியாக அடிச்சாங்க. ஒருத்தன் என் வலது கையைப் பிடிச்சு முறுக்கி எலும்பு முறியற மாதிரி அடிச்சுட்டான். இன்னொருத்தன் எட்டி உதைக்க ஆரம்பிச்சுட்டான்.பக்கத்துக் கடைக்காரங்க அதுக்குள்ள 100-க்கு போன் போட்டுட்டாங்க. அப்பத்தான் அதில ஒருத்தன், ''நாங்களே போலீஸ்.. எங்களைப் பிடிக்க எந்த போலீஸ்டா வருவான்? வரச் சொல்லு பார்ப்போம்’னு சத்தம் போட்டான். அப்பத்தான் அவங்க போலீஸ்காரங்கன்னு எங்களுக்குத் தெரியும். போலீஸ் வர்ற வரைக்கும் எங்களைப் பத்தியும் எங்க குடும்பத்தைப் பத்தியும் கண்டபடி திட்டிக்கிட்டேதான் இருந்​தாங்க. போலீஸ் வண்டி வந்தது. அப்பவும் கெட்ட வார்த்தையில திட்டுறதை நிறுத்தவே இல்லே. வந்த போலீஸ்​காரங்களும் அதை வேடிக்கை பார்த்துக்கிட்டுத்தான் இருந்தாங்க' என்று நிறுத்தினார்.

அடுத்து நடந்ததை செல்வநாயகத்​தின் தம்பி திருமா சொன்னார்.  

''வந்த போலீஸ்காரங்க,  'நாங்க பார்த்துக்​கிறோம். இவங்க மேல நடவடிக்கை எடுக்கிறோம்’னு சொன்னாங்க. அதை நம்பி நாங்க அந்த இடத்துல இருந்து புறப்பட்டோம். நாங்க போன பின்னாடி அவங்களை விட்டுட்டாங்க. இது காலையிலதான் எங்களுக்குத் தெரியவந்தது. உடனே, வியாபாரிகள் சங்கத்தினர் கமிஷனர் ஆபீஸுக்கு நேர்ல போய் புகார் கொடுத்ததும்தான் அவங்க ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணினாங்க. அப்பத்தான் மணிகண்டன், அங்குதுரைங்கிற அந்த ரெண்டு பேரும் கான்ஸ்டபிள்கள் என்று தெரியவந்தது. சமூக விரோதிகள்தான் மக்களுக்குத் தொந்தரவு பண்ணுறாங்கன்னா ,போலீஸ்காரங்களும் இப்படிப் பண்ணினா நாங்க எங்கதான் போய் வியாபாரம் செய்ய முடியும்?'' என்றார் விரக்தியாக.

கையை முறுக்கி... எட்டி உடைத்து...
கையை முறுக்கி... எட்டி உடைத்து...

உண்மையில் அவர்கள் இருவரும் போலீஸ்தானா என்று கீழ்ப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸிடம் கேட்ட​போது, ''மணிகண்டன், அங்குதுரை ஆகிய இரண்டு பேரும் ஆயுதப்படை போலீஸ்காரர்கள். இரண்டு பேரையும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி ரிமாண்ட் பண் ணிட்டோம்'' என்றார்.

செய்யும் வேலையின் பொறுப்பை உணர்ந்து பணியாற்றுவது மற்ற எந்த துறையினரையும் விட காவலர்​களுக்கு முக்கியம். அது குறைந்து வருவது அந்தத் துறைக்கே அவமானம்!

- நா.சிபிச்சக்கரவர்த்தி

படங்கள்: எஸ்.நாகராஜன்