Published:Updated:

கள்ளிச்செடியால் கண் பறிபோனதா..?

குடியாத்தம் பள்ளி ஆசிரியரின் அடாவடி!

கள்ளிச்செடியால் கண் பறிபோனதா..?

குடியாத்தம் பள்ளி ஆசிரியரின் அடாவடி!

Published:Updated:
##~##
கள்ளிச்செடியால் கண் பறிபோனதா..?

ரு பள்ளி மாணவனின் பார்வை பறிபோவதற்கு ஓர் ஆசிரியரே காரணமாகி விட்ட கொடூரம் இது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேலூர் அடுத்த குடியாத்தம் அருகே உள்ளது தட்டப்பாறை கிராமம். அங்கு உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான் அதே கிராமத்தைச் சேர்ந்த மணி​வண்ணன். பள்ளி அருகில் இருக்கும் கள்ளிச் செடிகளை அகற்றச் சொன்னதால், இப்போது பார்வை இல்லாமல் தவித்துக்கொண்டு இருக்கிறான் மணிவண்ணன்.

தட்டம்பாறையில் உள்ள மணிவண்ணன் தந்தை ஏகாம்பரத்திடம் பேசி​னோம். ''என் பையன் ஸ்கூலுக்குப் போய் ஒரு வருஷம் ஆச்சுங்க. போன வருஷம் 5-வது படிச்சான். ஒரு நாள் சாயங்காலம் அழுதுக்கிட்டே வீட்டுக்கு வந்தான். 'ஏண்டா?’ன்னு கேட்டேன். 'ஸ்கூல்ல வேலை செய்யச் சொன்னாங்க. நான் பக்கத்துல இருக்கிற செடியை எல்லாம் வெட்டிக் குப்பையில் போட்டேன். அப்ப கள்ளிச் செடி

கள்ளிச்செடியால் கண் பறிபோனதா..?

பால் கண்ணுல பட்டுருச்சி. ஒரே எரிச்சலா இருக்கு’ன்னு சொல்லி அழுதான். உடனே நான் பக்கத்துல இருக்கிற ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனேன். டாக்டர் செக்-அப் பண்ணிப் பார்த்துட்டு ஒண்ணும் இல்லன்னு சொல்லிட்டாங்க. ஆனா, இப்ப வரை இவனுக்குப் பார்வை சரியாத் தெரியலைங்க. ஸ்கூல்ல போய் வாத்தியாருகிட்ட கேட்டேன். அதுக்கு எல்லாரும் ஒண்ணு சேர்ந்துக்கிட்டு எங்களை மிரட்டுறாங்க. பறையடிச்சுதான் என் பொழப்பு ஓடுது. இதுவரை எங்க பையன் மேல இரக்கப்பட்டு ஸ்கூல்ல இருந்து யாரும் பேச​லைங்க. எனக்கு யார்கிட்ட போய் புகார் கொடுக்கறதுன்னு தெரி​யலை. யாரையும் நான் குத்தம் சொல்லலைங்க. என் பையனுக்குப் பார்வை கொடுக்க அரசாங்கம் ஏற் பாடு பண்ணினாப் போதும்'' எனக் கண் கலங்கினார்.

மணிவண்ணனின் தாய் செல்வி, ''ஒரு வாரமா பையன் கண்ணுல ரத்தம் ரத்தமா வருதுங்க. மனசே வெடிச்சிடும் போல இருக்கு. ஆறு மாசமா நாங்க பையனை வேலூர்ல இருக்கிற சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறோம். நாங்க

கள்ளிச்செடியால் கண் பறிபோனதா..?

புருஷன், பொஞ்சாதி ரெண்டு பேரும் சேர்ந்து மாசம் 4,000 ரூபா சம்பாதிக்​கிறோம். வெளியில் பத்து வட்டிக்குக் கடன் வாங்கித்தான் பையனுக்கு செலவு பண்ணிட்டு இருக்கோம். நாங்க கண்ணுல தூசுதான் விழுந்து இருக்குன்னு நினைச்சு, ஆஸ்பத்​திரிக்குக் கூட்டிட்டுப் போனோம். ஆனா, இப்ப கண்ணே தெரியாம போயிடுச்சி'' என்று அழுதார்.

மணிவண்ணனிடம் பேசினோம். ''போன வருஷம் எங்க வாத்தியாரு மோகன் சார் என்னைக் கூப்பிட்டு பக்கத்துல இருக்கிற செடிகளை வெட்டி சுத்தம்

கள்ளிச்செடியால் கண் பறிபோனதா..?

செய்யச் சொன்​னாரு. நான் கத்தியை எடுத்து எல்லாத்தையும் வெட்டினேன். அப்ப கள்ளிச்செடியில் இருந்து பால் முகத்தில் அடிச்சது. அப்ப ஒரே எரிச்சலா இருந்துச்சு. ஓடிப் போய் பக்கத்துல இருந்த தண்ணித் தொட்டியில் முகத்தைக் கழுவினேன். மோகன் சார்கிட்ட சொன்னேன். 'அதெல்லாம் ஒண்ணுமில்லடா. நீ வீட்டுக்குப் போ. இதையெல்லாம் யாருகிட்டயும் சொல்லக் கூடாது’ன்னு சொல்லிட்டார். நானும் யாருகிட்டயும் சொல்லலை. ஒரு வாரத்துக்கு அப்புறம் மறுபடியும் கண்ணு எரிய ஆரம்பிச்சது. பார்வையும் மங்கலாத்

கள்ளிச்செடியால் கண் பறிபோனதா..?

தெரியுது. இப்ப எனக்கு கண்ணுல ரத்தம் ரத்தமா வருது. வலி அதிகமா இருக்கு'' என்றபடி அழுதான்.

தட்டம்பாறையில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மோகனசுந்தரத்திடம் பேசி​னோம். ''சத்தியமா எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க. அந்தப் பையனுக்கு சின்ன வயதில் இருந்தே அப் படித்தான் இருக்கு. என்கிட்ட பணம் பறிக் கணும்னு இப்படிப் பண்றாங்க. அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கரிடம் பேசினோம். ''இதுபற்றி எந்தப் புகாரும் என் கவனத்​துக்கு வரவில்லை. இருப்பினும் முறையாக விசாரணை செய்கிறோம். ஒருவேளை, பள்ளி நிர்வாகத்தால் அந்த மாணவனின் பார்வை பறிபோய் இருந்தால் நிச்சயமாக  நடவடிக்கை எடுக்கப்படும். மாணவனுக்கு இலவசமாக சிகிச்சை எடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறுதி அளித்தார்.

சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய், ''பள்ளி மாணவர்களை இதுபோல வேலை செய்யச் சொல்வது மிகவும் தவறு. குற்றம்நடந்தது உறுதி செய்யப்பட்டால் கண் டிப்பாக நடவடிக்கை உண்டு. மாணவன் நிலை குறித்து ஆராய்ந்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் தீர்க் கமாக.

விவரம் தெரியாத பள்ளி மாணவர்களிடம் பொறுப்பே இல்லாமல் வேலை வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும்!

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்,   கா.முரளி