Published:Updated:

விஷம்... தூக்கு... கிணறு!

வறுமை குடித்த உயிர்கள்

விஷம்... தூக்கு... கிணறு!

வறுமை குடித்த உயிர்கள்

Published:Updated:
##~##
விஷம்... தூக்கு... கிணறு!

றுமையின் கொடுமை ஐந்து உயிர்களைக் காவு வாங்கி இருக்கிறது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு பக்கம் பருவ மழை பொய்த்து ஆறுகள் அனைத்​தும் வற்றிப்போக மறுபக்கம் மின்வெட்டுப் பிரச்னை. என்னதான் செய்வார்கள் விவசாயிகள்? விவசாயி​களைவிட அதிகம் பாதிப்புக்கு உள்ளானது விவசாய நிலத்தில் தினக் கூலியாக வேலை செய்தவர்கள்தான். அப்படி தினக் கூலியாக வேலை பார்த்த முருகன் வறுமை​யின் உச்சத்தில், குடும்பத்தோடு தற்கொலை முடிவைத் தேடி இருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் பனப்பாக்கத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி சிவகாமி. இவர்களுக்கு சத்யா, சங்கீதா, தியாகு என மூன்று குழந்தைகள். முருகன், சிவகாமி இருவருமே அதே கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் வேலை பார்த்தவர்கள். இப்போது அந்தக் குடும்பத்தில் யாரும் உயிரோடு இல்லை. காரணம், வறுமை.

விஷம்... தூக்கு... கிணறு!

முருகனின் நெருங்கிய நண்பரான சிவகொழுந்து நம்மிடம் பேசினார். ''வழக்கமா முருகன் 6 மணிக்கெல்லாம் வேலைக்குக் கிளம்பிடுவான். போன 2-ம் தேதி அவன் வரலை. வீடு சாத்தி​யிருந்தது. நான்தான் போய்க் கதவைத் தட்டினேன். யாரும் கதவு திறக்கலை. அசந்து தூங்குறாங்கனு நினைச்சு நான் கிளம்பிட்டேன். முருகனோட புள்ளையோட பள்ளிக்கூடம் போற ஒரு பொண்ணுதான் வீட்டுக்கு வந்து கதவு ஓட்டையில பார்த்து இருக்கு. உள்ளே புள்ளைங்க மூணும் வாயில நுரை தள்ளிட்டு இருந்திருக்கு. அப்புறம்​தான் எங்களுக்கு விஷயம் தெரிஞ்சு ஓடினோம். கதவை உடைச்சுப் பார்த்தா, குழந்தைங்க மூணும் செத்துக் கிடந்துச்சுங்க. முருகனையும், அவரோட சம்சாரத்தையும் வீட்டுல காணோம். ஊர்க்காரங்க எல்லோருமா சேர்ந்து தேடினோம். எங்க ஊரு சுடுகாட்டுக்குப் பக்கத்துல இருந்த புளிய மரத்துல சேலை மாட்டி அறுந்திருந்துச்சு. பக்கத்துலயே ரெண்டு ஜோடி செருப்பும் இருந்துச்சு. அது முருகனோட செருப்புங்கிறதைப் பார்த்ததும் கண்டு​கிட்டேன். ஆனா அவங்களைக் காணோம். மறுநாள் பக்கத்துல இருந்த கிணத்துல ரெண்டு பேரோட உடம்பும் மிதந்துச்சுங்க.

விஷம்... தூக்கு... கிணறு!

முருகன் அமைதியான ஆளுங்க. எந்த வம்புதும்புக்கும் போக மாட்டான். எனக்குத் தெரிஞ்சு அவனுக்கு இருந்த ஒரே பிரச்னை வறுமை​தான். 'புள்ளைங்க மூணு பேரையும் படிக்க வெச்சு நல்ல நிலைமைக்கு கொண்டு​வரணும்டா’னு பேசுறப்ப எல்லாம் சொல்லிட்டே இருப்​பான். போன மாசம்,

விஷம்... தூக்கு... கிணறு!

பைய னுக்கும் பொண்ணுக்கும் உடம்பு சரியில்லாமப்போச்சு. அதுல நிறைய செலவு ஆகிருச்சு. பணப் பிரச்னை எதாவது இருந்திருந்தா சொல்லி இருக் கலாம். எங்க​ளால முடிஞ்ச உதவியைச் செய்​திருப்போம்'' என்று கண் கலங்கினார்.

சிவகாமியின் தம்பி கோடீஸ்​வரனிடம் பேசினோம். ''குழந் தைங்க மூணு பேரோட படிப் புக்கும் என்னால முடிஞ்ச உதவியை செஞ்சுட்டு இருந் தேன். குழந்தைங்களை என் வீட்டுக்கு அனுப்பச் சொல் லிக்கூட கேட்டேன். அவங்க செத்ததோட இல்லாம குழந்தைகளையும் கொன் னுட்டாங்க. தூக்கு மாட்டி சாவப் பார்த்திருக்காங்க. பாரம் தாங்காம சேலை அறுந்​துடுச்சுபோல இருக்கு. அதனால ரெண்டு பேரும் இடுப்புல கல்லைக் கட்டிக்கிட்டு கிணத்துல குதிச்சுட்டாங்க'' என்​கிறார் வேதனையோடு.

வழக்கை விசாரிக்கும் விழுப்​புரம் டிஸ்.எஸ்.பி. சேகரைத் தொடர்பு கொண்டோம். ''சாக முடிவெடுத்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்திருக்கிறார்கள். கணவன், மனைவி இரண்டு பேரும் விஷம் குடிக்காமல் எதற்காகத் தூக்கு போட முயற்சி செய்தனர் என்பது தெரியவில்லை. எங்களுக்கு இதில் சில சந்தேகங்கள் இருப்பதால் விசாரித்து வருகிறோம். தற்கொலைக்குக் காரணம் வறுமைதான் என்று ஊர்க்காரர்கள் சொன் னாலும், அது மட்டுமே  காரணமாக இருக்குமா என்று தெரியவில்லை'' என்கிறார்.

விவசாயிகள் மரணத்தையே மூடி மறைக்கப் பார்க்கும் அரசு, விவசாயக் கூலித் தொழிலாளியின் மரணம் வறுமையால் நிகழ்ந்தது என்பதை ஒப்புக் கொள்ளுமா என்ன?

- ஆ.நந்தகுமார்

படங்கள்: தே.சிலம்பரசன்