Published:Updated:

ஒரு ரியல் அத்திப்பட்டி

நாகையில் 'வெள்ளை மணல்'

ஒரு ரியல் அத்திப்பட்டி

நாகையில் 'வெள்ளை மணல்'

Published:Updated:
##~##
ஒரு ரியல் அத்திப்பட்டி

''நாகை மாவட்டத்தில் இருக்கும் வெள் ளை மணல் என்ற கிராமத்துக்குப் போய்ப் பாருங்கள். தமிழகத்​தில் இப்படியும் ஒரு கிராமமா என்று அதிர்ந்து​ போ வீர்கள்!'' - நண்பர் ஒருவர் சஸ்பென்ஸ் வைத்து தகவலைச் சொல்ல, அந்தக் கிராமத்தை நோக்கிப் பயணப்பட்டோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாகை மாவட்டத்தின் கடைக்கோடியில் சீர் காழி தாலுக்காவுக்கு உட்பட்டது அந்தக் கிராமம். கொள்ளிடத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் இருக் கும் அளக்குடி வரைதான் பேருந்து பயணம். அங்கே இருந்து 2 கி.மீ. வரை மட்டுமே சாலை. அது முடியும் இடத்தில் இருந்து தொடங்குகிறது வெள்ளை மணல். பாலைவனம் போல் பரந்த அந்த மணலில் பகுதியில் ஆங்காங்கே இருக்கும் விளக்குகள் இல்லாத மின் கம்பங்கள் வழிகாட்ட நடந்து சென்றால், 4 கி.மீ. நடை பயணத்தில் ஊர் வருகிறது.

ஒரு ரியல் அத்திப்பட்டி

பரந்த வெள்ளை மணல் பரப்பில் கிராமம் இருப் பதால் ஊருக்கும் 'வெள்ளை மணல்’ என்றே பெயர். ஒரு பக்கம் கடல், மறுபக்கம் ஆறு, இன் னொரு பக்கம் மணல் என இயற்கை சூழ்ந்த இந்தக் கிராமம், பெயர்ப்பலகைகூட இல்லாமல் இருக்கிறது. கிட்டத்தட்ட 100 வீடுகளில் வசிக்கும் இவர்கள் அனைவருமே மீனவர்கள். கொள்ளிடம் ஆற்றிலும் கடலிலும் மீன் பிடித்து வாழ்க்கையை ஓட்டுகிறார்கள் இவர்கள்.

ஒரு ரியல் அத்திப்பட்டி

ஊரின் மூத்த குடிமகளான 60 வயதைத் தாண்டிய அஞ்சம்மாள், ''நான் பிறந்ததில் இருந்து இந்த ஊர்லதான் இருக்கேன். அன்னைக்கு இருந்து இன்னைக்கு வரை ஊர் ஒண்ணும் பெருசா வளரலை. ரோடு, மின் விளக்கு வசதி, நிலப் பட்டானு எதுவும் எங்களுக்குக் கிடைக்​கலே. அதிசயமா ரேஷன் கார்டும், கரன்ட்டும் கிடைச்சிருச்சு. ஆனா, ரேஷன் பொருள் வாங்க அளக்​குடிக்குத்தான் போகணும். பிடிக்கிற மீனை விக்கிறதுக்கும் பக்கத்து ஊர்களுக்குத்தான் போகணும். ரோடு வசதியோ, சரியான பாதையோ இல்லாத​தால் கஷ்டமா இருக்கு'' என்றார் பரிதாப​மாக.

ஒரு ரியல் அத்திப்பட்டி

புஷ்பா என்பவரோ, ''போக்குவரத்து வசதி இல்லாததால், எங்க ஊர் தொடக்கப் பள்ளிக்கு எந்த வாத்தியாரும் வர மாட் டேங்கிறாங்க. இந்த ஸ்கூல் ஆரம்​பிச்சது 2006-ல்தான். இந்த அஞ்சு வருஷத்தில் இங்கே வந்த ஆறு வாத்தியாருங்க மாற்றல் வாங்கிக்​கிட்டுப் போயிட்டாங்க. அதனால், பாதிப் புள்ளைங்க அளக்குடிக்கு நடந்து​போய்தான் படிக்கிறாங்க. மழைக் காலத்தில் இரண்டு மூணு அடி தண்ணி நிக்கும். இதுல புள்ளைங்க போயிட்டு, திரும்ப வர்ற வரைக்கும் என்ன ஆகு மோ, ஏது

ஒரு ரியல் அத்திப்பட்டி

ஆகுமோனு பயந்துக்​கிட்டு இருக்கணும். எங்க ஊருல ரோடு இல்லைங்கிற கார ணத்தால, யாரும் பொண்ணு கொடுக்குறதோ, எடுக்குறதோ கிடையாது. ஒரு அவசரத்துக்கு ஆஸ்பத்திரிக்கோ, மளிகைப் பொருட்கள் வாங்கவோ, எது வானாலும் அளக்குடிக்கு​தான் போகணும். ரோடு மட்டும் போட்டுக் கொடுத்தா, நாங்க சாகுற வரை அவங்களை மறக்க மாட்டோம்யா'' என்று கலங் குகிறார்.

''எங்க ஊர்ல மொத்தம் 450 பேர் இருக்கோம். மொத்தம் 80 ரேஷன் கார்டு இருக்கு. இருபது வருஷமா ரோடு வசதி கேட்டு அதிகாரிகளிடமும்,  அரசியல் வாதிகளிடமும் மனு கொடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்தக் கிராமம் உருவாகி 50 வருஷத்துல ராதாகிருஷ்ணன் கலெக்டர் மட்டும்தான் இங்கே வந்திருக்கார். சுனாமியின்​போது எங்க கிராம​மும் மோசமா சேதமாச்சு. அதுக்கான எந்தச் சலுகைகளும் எங்களுக்குக் கிடைக்கலே. சுனாமியால பாதிக் கப்பட்ட இடங்களில் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளும் எங்களுக்குக் கிடைக்கலே. ஆட்சி மாறுது, ஆளுங்களும் மாறுறாங்க, எங்க தலைவிதி மட்டும் மாறலே'' என்று பெருமூச்சு விட்டார் வீரபாண்டி.

சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ம.சக்தி​யின் கவனத்துக்கு இதைக் கொண்டு​சென் றோம். ''அந்தக் கிராமம் அமைந்திருக்கும் பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், அங்கு பட்டா கொடுக்க முடியவில்லை. பல முறை நிதி ஒதுக்கியும் வனத்துறை அனுமதி கொடுக்காததால், சாலை போட முடியவில்லை. இப்போதும் அதிகாரிகளிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். வனத் துறை அனுமதி கிடைத்ததும், உடனே எல்லாம் செய்து​தரப்படும்'' என்றார் உறுதியாக.

வெள்ளை மணல் மக்களின் துயர் தீருமா?

- மு.சா.கௌதமன்

படங்கள்: ஜெ.ராம்குமார்