Published:Updated:

தொழிலாளர் நிலங்களை அபகரித்தாரா அ.தி.மு.க. சேர்மன்?

மேட்டூர் மிரட்டல்

தொழிலாளர் நிலங்களை அபகரித்தாரா அ.தி.மு.க. சேர்மன்?

மேட்டூர் மிரட்டல்

Published:Updated:
##~##
தொழிலாளர் நிலங்களை அபகரித்தாரா அ.தி.மு.க. சேர்மன்?

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றதும் நில அப கரிப்பு வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தி.மு.க-வினரை விரட்ட ஆரம்பித்தார். இப் போது, அ.தி.மு.க-வைச் சார்ந்தவர்கள் மீதே நில அப கரிப்புப் புகார்கள்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் கம்பெனித் தொழிலாளர்​களுக்கு சொந்தமான மூன்று கோடி மதிப்புள்ள நிலத்தை நங்கவள்ளி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், வீரக்கல்புதூர் பேரூராட்சித் தலைவருமான எமரால்ட் வெங்கடாசலம் அபகரித்து, பலருக்கும் விற்கிறார் என்று கொதித்துப்போய் குற்றம்சாட்டுகிறார்கள் கெம்ப் ளாஸ்ட் சன்மார் ஹவுஸிங் வெல்ஃபேர் சொசைட்டி உறுப்பினர்கள்.

சொசைட்டியின் உறுப்பினர் நாராயணன், ''மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் தொழிற்சாலையில் வேலைபார்த்த தொழிலாளர்கள் 164 பேர் சேர்ந்து கெம்ப்ளாஸ்ட் சன்மார் ஹவுசிங் வெல்ஃபேர் கூட்டுறவுச் சங்கத்தை ஆரம்பித்தோம். அந்தச் சங்கத்துக்கு ரங்கநாதன் என்ற உறுப்பினரைத் தற்காலிகத் தலைவராக நியமித்தோம். 1995-ம் ஆண்டு மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள குஞ்சாண்டியூர் சமத்துவபுரம் அருகே 13.5 ஏக்கர் நிலத்தை வாங்கினோம். அதை சங்க உறுப்பினர்களான 164 பேருக்கும் வீட்டுமனைக்காகப் பிரித்தோம். ஒவ்வொருவருக்கும் தலா நாலரை சென்ட் வீதம் கொடுத்தோம். மீதி இடத்தில் வழிபாட்டுத் தலம், விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா, நூலகம், சொசைட்டியின் வருமானத்துக்காக சாலை ஓரத்தில் கடைகள் கட்டவும் இடம் ஒதுக்கி இருந்தோம்.  

தொழிலாளர் நிலங்களை அபகரித்தாரா அ.தி.மு.க. சேர்மன்?

164 குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்​போக மீதி இருந்த இந்தப் பொது நிலங்கள் சொசைட்டி தலைவர் ரங்கநாதன் பெயரில் இருந்தன. அதை அவர் தன் மனைவி ராஜகுமாரி, மகன் தங்கமணி,

தொழிலாளர் நிலங்களை அபகரித்தாரா அ.தி.மு.க. சேர்மன்?

மகள் மைதிலி ஆகியோருக்குத் தான செட்டில்மென்ட் செய்து விட்டார். மிகவும் தாமதமாகத்தான் அது எங்கள் கவனத்துக்கு வந் தது. எங்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து புதிய தலைவராக ராஜாவையும், செயலாளராக சம்பத்தையும் நியமித்து ரங்க நாதனுக்கு எதிராக மேட்டூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம். இந்த வழக்கு, பத்து ஆண்டுகள் நடைபெற்றது. நாங்கள் தேர்ந்தெடுத்து செயல்பட்டுவந்த ராஜாவும் சம்பத்தும் எங்களுக்கே துரோகம் செய்தனர். நங்கவள்ளி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எமரால்ட் வெங்கடாசலத்தின் பேச்சைக் கேட்டு, நீதிமன்றத்தில் அவர்கள் பல்டி அடித்ததால் வழக்கு தள்ளுபடி செய் யப்பட்டது.

அதன் பிறகு ராஜா, சம்பத், ரங்கநாதன் குடும்பத்தினர் அனை வரும் சேர்ந்து அந்தப் பொது இடங்​களை வெங்கடாசலத்துக்கும் அவரது மனைவி டெய்சி ராணிக்கும் பவர் கொடுத்து விட்டனர். இந்தப் பவரைப் பயன்படுத்தி சொசைட்டிக்கு சொந்தமான நிலங்களை வெளியாட்களுக்கு மூன்று கோடிக்கு விற்றுள்ளனர். வெங்கடாசலம் ஆளும் கட்சிக்காரர் என்பதால், நில அபகரிப்புப் புகார் கொடுத்தாலும் வாங்க மறுக் கிறார்கள். அதனால்தான், உயர் நீதிமன்றத்துக்குப் போனோம். நீதிமன்றம் வழிகாட்டுதல் கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. இந்த நிலங்களை மீட்காமல் விட மாட்டோம். 164 குடும்பங்களும் தொடர்ந்து சாலைமறியல் செய்யத் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

இங்கு குடியிருக்கும் ஜெயா, ''என் வீட்டுக்காரர் ஜெயபால், கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தில் ஆபரேட்​டராக

தொழிலாளர் நிலங்களை அபகரித்தாரா அ.தி.மு.க. சேர்மன்?

வேலைப் பார்த்தார். அதனால், எங்களுக்கும் ஒரு வீட்டுமனை ஒதுக்கப்பட்டது. அதில் வீடு கட்டிக் குடியிருக்கிறோம். எங்கள் வழித் தடத்தையும், கோயில், பூங்கா, விளையாட்டு மைதானம், நூலகம், கடைகள் கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தையும் வீரக்கல்புதூர் பேரூராட்சித் தலைவர் வெங்கடாசலம் பிளாட் போட்டு வெளியாட்களுக்கு விற்று வருகிறார். இதனால் நாங்கள் நடக்கக்கூட வழி இல்லாமல் இருக்கிறோம்.

இதைத் தட்டிக்கேட்ட என் கணவரை மிரட்டி அவருக்கு மன உளைச்சல் கொடுத்ததால், அவர் இறந்து​விட்டார். இப்போது, இங்கு குடியிருக்கும் அனைவரும் எமரால்டை எதிர்த்துக் கேள்வி கேட்பதால் இந்தப் பகு தியில் வசிப்பவர்களுக்குக் குடிநீர் கொடுப்பது இல்லை. குடிநீர் இல்லாமல் தவிக்கிறோம்'' என்றார்.

எமரால்ட் வெங்கடாசலத்திடம் பேசினோம். ''அந்த இடம் பொது இடம் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. கெம்ப்ளாஸ்ட் தொழி​லாளர்கள் ஒரு சொசைட்டி ஆரம் பித்து இந்த நிலம் வாங்கி​னர் என்பதெல்லாம் பொய். அங்கு மூன்று, நான்கு வீடுகள்தான் கெம்ப்ளாஸ்ட்டில் வேலை பார்த்தவர்களுக்குச் சொந்தம். மற்றது வெவ்வேறு தொழில் செய்பவர்களின் வீடுகள்தான். இந்த இடத்தை விற்றவருக்கும் வாங்கியவர்களுக்கும் ரங்கநாதன் புரோக்கராக இருந்துள்ளார். ரங்கநாதனுக்கு புரோக்கர் கமிஷ னாகத் கொடுக்கப்பட்டதுதான் இந்த நிலங்கள். ரங்கநாதன் என்பவர் அவரது மனைவி, மகனுக்கு இந்த நிலங்களை தான செட்டில்மென்ட் செய்து இருக்கிறார். அவர்களிடம் இருந்து நிலத்தை முறையாக நான் வாங்கி இருக்கிறேன். இதற்குப் பக்காவான ரெக்கார்ட் இருக்கிறது. ஆனால், எங்கள் கட்சியைச் சார்ந்தவர்களே எனக்கு எதிராக அந்த மக்களைத் தூண்டிவிட்டுப் பிரச்னை செய்கிறார்கள். என்னைப்பற்றி இந்தப் பகுதி மக்களுக்குத் தெரியும். தொடர்ந்து நான்காவது முறையாக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். இதிலி​ருந்து என்னுடைய செல்வாக்கை உணரலாம்'' என்றார்.  

நிலம் யாருக்குச் சொந்தம் என்பதை நீதிமன்றம்​தான் விசாரிக்க வேண்டும். அதற்கு முன்னால் அந்தப் பகுதி மக்கள் அனுபவித்து வந்த வசதி களை யாரும் பறிக்கக் கூடாது!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: க.தனசேகரன்