Published:Updated:

''எப்படி லட்சாதிபதி ஆனார்?''

கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக அ.தி.மு.க.

''எப்படி லட்சாதிபதி ஆனார்?''

கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக அ.தி.மு.க.

Published:Updated:
##~##
''எப்படி லட்சாதிபதி ஆனார்?''

டெண்டர் விவகாரத்தால் பற்றி எரிகிறது மார்க்சிஸ்டுகள் கையில் இருக்கும் சிவ   கங்கை நகராட்சி! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவகங்கை நகராட்சியில் சாலைகள் அமைத்தல், கழிவுநீர் வாய்க்கால்கள் கட்டுதல், ஃபேவர் பிளாக் பதித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நகர்ப்​புற உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 2.32 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு. இதற்கான டெண்டர் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. அனுராதா, திலகம், ராஜா ஆகிய மூன்று கான்ட்ராக்டர்கள் போட்டி போட்​டனர். மற்ற இருவரின் டெண்டர்கள் தள்ளு​படி செய்யப்பட்டு, ராஜாவுக்கு டெண்டரைக் கொடுத்து இருக்கிறார்கள். இதற்குத் தடை ஏதும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, ஜனவரி 2-ம் தேதி நகர்மன்றத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி டெண்டருக்கு ஒப்புதல் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றினர். இந்த விவகாரத்தில்தான் அ.தி.மு.க. கான்ட்ராக்டர்கள் பிரச்னையைக் கிளப்பி, கோர்ட் படி ஏறி இருக்கிறார்கள்.

''எப்படி லட்சாதிபதி ஆனார்?''

'புரட்சித் தலைவி அம்மா ஒப்பந்ததாரர்கள் சங்கம்’ என்ற அமைப்பின் தலைவராக  இருக்கிறார் ராஜேந்திரன். அவரை சந்தித்தோம். ''நாங்கள் திலகத்தின் பவர் ஏஜென்ட் என்ற முறையில் டெண்டர் போட்டு இருந்தோம். ராஜா, அனுராதா ஆகிய இருவருமே ஒரே குரூப். ராஜாவுக்கு டம்மியாகத்தான் அனுராதா பெயரில் டெண்டர் போட்டு இருந்தனர். டெண்டர் நடக்கும் நாளிலேயே டெண்டரைப் பிரிப்பதுதான் முறை. ஆனால், மறுநாள் யாருக்கும் தெரியாமல் டெண்டரைப் பிரித்தனர். அப்போது, எங்களது டெண்டரைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்​காக, டெண்டர் படிவத்துடன் நாங்கள் இணைத்திருந்த ஐந்து டாக்குமென்ட்டுகளைக் கிழித்து விட்டனர். அந்த டாக்குமென்ட்​டுகள் இல்லை என்று சொல்லி எங்களது டெண்டரை நிராகரித்து விட்டு ராஜா​வுக்கு டெண்டர் கொடுத்து விட்டனர்.

2.32 கோடிக்கான வேலையை 2.19 கோடியில் முடித்துத் தருவதாக நாங்கள் போட்டு இருந்த டெண்டரைத் தள்ளு​படி செய்துவிட்டு, சுமார் 2.51 கோடியில் முடிப்பதாக ராஜா கொடுத்திருந்த டெண்டரை ஓகே செய்து இருக்கிறார்கள். இதனால், அரசுக்கு 32 லட்சம் இழப்பு. ராஜாவுக்கு இந்த டெண்டரைக் கொடுக்க  பேரமும் நடந்திருக்கிறது. மார்க் சிஸ்ட் தோழர் ஊழலுக்குத் துணை போக மாட்டார் என்று நம்பித்தான் மக்கள் அர்ச்சுனனை சேர்மன் ஆக்கினர். ஆனால், நடப்பவை எல்லாம் நேர்மாறாக இருக்கிறது'' என்றார்.

தொடர்ந்து, சங்கத்தின் செயலாளர் கமலநாதன் பேசி னார். ''இதற்கு முன் 70 லட்ச ரூபாய்க்கு விடப்பட்ட டெண்​டருக்கு இன்னும் நகர்மன்றம் ஒப்புதல் வழங்கவில்லை. இந்த டெண்டருக்கு மட்டும் அவசரக் கூட்டத்தைக் கூட்டி ஒப்புதல் வழங்கி இருக்கிறார்கள். ஒரு காலத்தில், ராணி ஸ்டோ​ரில் பத்து ரூபாயைக் கொடுத்து 'ரெண்டு ரூபாய்க்கு நல்லெண்ணெய், ஒரு ரூபாய்க்கு பொட்டுக் கடலை, அஞ்சு ரூபாய்க்கு உளுந்தம் பருப்பு குடுங்க’னு கேட்டு வாங்கிய சேர்மன் அர்ச்சுனன் இன்றைக்கு லட்சாதிபதி. லட்சங்களைக் கொட்டி வீடு கட்டுகிறார். எங்கிருந்து வந்தது இந்த வசதி? மறு டெண்டர் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு போட்​டிருக்கோம். நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்'' என்றார்.

''எப்படி லட்சாதிபதி ஆனார்?''

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சேர்மன் அர்ச்சுனன் என்ன பதில் சொல்கிறார்? ''நான் முறை தவறி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை. 'ஒருவருக்கே வேலையைக் கொடுக்காமல் எல்லாருக்கும் பிரிச்சுக் குடுங்க’ன்னு கமலநாதன் எனக்குத் தூது அனுப்பினார். கடந்த முறை அப்படிப் பிரித்துக் கொடுத்து வேலை​கள் தரமில்லாமல் போயிருச்சு. 'யாராக இருந்தாலும் ஒரே ஆளே டெண்டர் எடுத்து  செய்து கொடுக்கட்டும்’னு முடிவு எடுத்​தோம். அதன்படி, தகுதியான நபரான ராஜாவுக்கு டெண்டரை ஓகே செய்தோம். தங்களுக்கு வேலை கிடைக்காத ஆதங்கத்தில் ராஜேந்திரனும் கமலநாதனும் ஏதேதோ பேசு றாங்க. டெண்டர் எடுப்பவரின் வங்கிக் கணக்கில் திட்ட மதிப்பீட்டில் 15 சதவிகித நிதி இருக்க வேண்டும். இந்த வேலைக்கு சுமார் 36 லட்சம் இருக்கணும். ஆனால், திலகத்தின் வங்கிக் கணக்கில் அவ்வளவு பணம் இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கான ஆடிட் ரிப்போர்ட் நகல் தாக்கல் செய்திருக்கணும். அதுவும் செய்யவில்லை. இதுபோன்ற காரணங்களால் ராஜேந்திரனின் டெண்டர் ஆரம்ப நிலை யிலேயே தள்ளுபடி ஆனது. டாக்கு​மென்ட் டுகளை நாங்கள் கிழித்தோம் என்பது எல் லாம் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு'' என்றவர் தன் மீதான புகார்கள் குறித்து விளக்கம் சொன்னார்.

''என்னுடைய நிலங்களை விற்றும் மெர்க்கன்டைல் வங்கியில் 15 லட்சம் லோன் வாங்கியும்தான் நான் வீடு கட்டுகிறேன். நகராட்சியில் மார்க்சிஸ்ட் கவுன்சிலர் ஒருவர்கூட இல்லை. ஆனாலும், பிரச்னை களைச் சமாளித்து நிர்வாகத்தைத் திறம்பட நடத்துவது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதுதான் இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம்'' என்றார் நிதானமாக.

மார்க்சிஸ்ட் தோழர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும்!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்