Published:Updated:

சாவை சந்தோஷமா ஏத்துக்குவேன்

எஸ்.ஏ.ராஜாவின் இறுதி நிமிடங்கள்

சாவை சந்தோஷமா ஏத்துக்குவேன்

எஸ்.ஏ.ராஜாவின் இறுதி நிமிடங்கள்

Published:Updated:
##~##
சாவை சந்தோஷமா ஏத்துக்குவேன்

''என் மீது கொலைப் பழி விழுந்ததும் துடிச்சுப்​போயிட்டேன். நல்ல வேளையாக அந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுன்னு தீர்ப்பு வந்த பிறகுதான் நிம்மதியா இருக்கு. இனி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இப்பவே சாவு வந்தால்கூட அதை சந்தோஷமா ஏத்துக்குவேன்!'' - சில தினங்களுக்கு முன், தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் இப்படிச் சொல்லி இருக் கிறார் எஸ்.ஏ.ராஜா. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவ்வளவு சீக்கிரம் அவர் சொன்ன வார்த்தைகள் பலிக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சர்ச்சை​களின் நாயகனாக இருந்தாலும் ராஜாவின் மரணம் திருநெல்வேலியை சோகத்தில் மூழ்கடித்தது. எஸ்.ஏ.ராஜா​வைப் பற்றிப் பேசும் அவரது நண்பர்கள், ''விமானப் படையில் பணியாற்றிய ராஜா ஓய்வுக்குப் பின் அவரின் சொந்த ஊரான வடக்கன்குளத்துக்கு வந்து விட்டார். தன்னுடைய பகுதி மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய நினைத்துத்தான், கல்லூரிகளைத் தொடங்கினார்.

சாவை சந்தோஷமா ஏத்துக்குவேன்

கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு பல பிரபலங்களை அழைத்து வந்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அரசியல்வாதிகளுடன் ஏற்பட்ட நெருக்கம் அவரை அரசியல் பாதைக்குத் திருப்பியது. 2000-ம் ஆண்டில் 'இந்திய ஜனநாயக மக்கள் கட்சி’ என்ற பெயரில் அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார். அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில், தன் கட்சி சார்பில் வேட்பாளர்களைக் களம் இறக்கினார். ஆனால், டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. அதனால், கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் கல் லூரிப் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 2004-ம் ஆண்டு, ஆலடி அருணா கொலை வழக்கில் ராஜா பெயரும் சேர்க்கப்பட்டது. தொழில் போட்டியே கொலைக்குக் காரணமாக போலீஸ் தரப்பில் சொல்லப்​பட்டது. நெல்லை நீதிமன்றம் ராஜாவை விடுதலை செய்தது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், ராஜாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதைஎதிர்த்து, உச்ச நீதிமன்றத்துக்குப் போனார். அங்கே, ராஜா நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு, குஜாராத்திலேயே தங்கி அங்குள்ள அவரது மருத்துவக் கல்லூரியைக் கவனித்து வந்தார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எங்களை விட்டுப் பிரிந்து விட்டார்'' என்கிறார்கள் சோகத்துடன்.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் வாய்விட்டுக் கதறி அழுதார். கல்லூரி மாணவர்கள், கிராம மக்கள் என்று பெரும் கூட்டம் ராஜாவின் இறுதிச் சடங்கில் கலந்து பங்கேற்றனர்.

அவரது இறுதிப் பயணமும் குறிப்பிடும்படியாக இருந்தது!

- ஆண்டனிராஜ், அ.கோமதிநாயகம்

படங்கள்: ரா.ராஜ்குமார்