Published:Updated:

சாய்மீரா... 'மர்மயோகி'

பல கோடிகள் சுருட்டப்பட்டதா?சென்னை மண்டலம்

பிரீமியம் ஸ்டோரி

ரே நேரத்தில் 10 படங்களுக்குப் பூஜை,

##~##
கமல்ஹாசனின் 'மர்மயோகி’க்கு அட்வான்ஸ் தொகையாக மட்டும்
சாய்மீரா... 'மர்மயோகி'
14 கோடி... இப்படி தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய சாதனை செய்தது பிரமிட் சாய்மீரா நிறுவனம். பட பூஜையின்போது அதன் நிர்வாக இயக்குநர் சாமிநாதன், ''இந்த நிறுவனத்தில் பணம் கொட்டிக்கிடக்கிறது. செலவு செய்யத்தான் வழியில்லாமல் தவிக்கிறோம்!'' என்றார். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே நஷ்டக் கணக்குக் காட்டி அந்த நிறுவனம் மூடப்பட்டது. இதில் பணியாற்றிய 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குக்கூட சம்பளம் கொடுக்கவில்லை.  இந்நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்த பணம் கிட்டத்தட்ட
சாய்மீரா... 'மர்மயோகி'
1,000 கோடிகள், சப்தம் இல்லாமல் எங்கே போனதோ தெரியவில்லை. அது பற்றி யாருக்கும் கவலை இல்லை!

 பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் குரூப் ஊழியர்கள் நல சங்கத் தலைவர் நரசிம்மன், பொதுச் செயலாளர் முத்து​மாணிக்கம், சட்ட ஆலோசகர் பழனிவேல் ஆகியோரைச் சந்தித்தோம். '' 'சங்கமம்,’

சாய்மீரா... 'மர்மயோகி'

'மிஸ்டர் ரோமியோ’ படங்களைத் தயாரித்த பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் நடராஜனின் பிரமிட் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், சென்னை மடிப்பாக்கத்தில் கேபிள் டி.வி. நடத்திவந்த சாமிநாதன் என்பவரின் சாய்மீரா நிறுவனமும் இணைந்து 2004-ம் ஆண்டு, 'பிரமீட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்’ என்ற நிறுவனத்தை உருவாக்கியது. இந்த நிறுவனம் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, சீனா, இங்கிலாந்தில் தனது தொழிலை நடத்தியது. சினிமா தியேட்​டர்களைக் குத்தகைக்கு எடுப்பது, சினிமா தயாரிப்பு, கண்காட்சி நடத்துவது, தியேட்​டரில் கேன்டீன், விளம்பரப் பணிகளை மேற்கொள்வது போன்ற வேலைகளை இந்த நிறுவனம் செய்தது.

'தொழிலை விரிவுபடுத்த பங்குச் சந்தையில் நிதி திரட்டப் போகிறேன்...’ என்று 2007-ம் ஆண்டு, பங்குச்

சாய்மீரா... 'மர்மயோகி'

சந்தையில் நுழைந்தனர்.

சாய்மீரா... 'மர்மயோகி'

100 கோடிகள் அளவுக்கு நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பொதுமக்களிடம் இருந்து

சாய்மீரா... 'மர்மயோகி'

2,000 கோடிகள் அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. பங்குச் சந்தை மூலம்

சாய்மீரா... 'மர்மயோகி'

100 கோடிகள், வெளிநாட்டு முதலீடாக

சாய்மீரா... 'மர்மயோகி'

400 கோடிகள், பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் இருந்து

சாய்மீரா... 'மர்மயோகி'

520 கோடிகள் என்று மொத்தம்

சாய்மீரா... 'மர்மயோகி'

1,020 கோடிகளுக்கும் மேல் கடன் பெற்று தொழிலை விரிவுபடுத்தினர். இல்லாதததை எல்லாம் இருப்பதுபோல காட்டித்தான் இந்தப் பணத்தை, இவர்கள் பெற்றனர் என்பது எங்கள் குற்றச்சாட்டு.

பணம் வாங்கியதும் இவர்களின் போக்கு மாறி​விட்டது, இந்தியாவின் பல பகுதிகளிலும், அயல்நாட்டிலும் முதலீடு செய்துள்ளதாகக் கூறினார்கள். 2008-09-ம் ஆண்டில், இந்த நிறுவனத்தின் விற்பனை வருவாய்

சாய்மீரா... 'மர்மயோகி'

1,200 கோடி என்று கணக்குக் காட்டினர். ரஜினி நடித்த 'குசேலன்’ படத்தின் விநியோக உரிமையை சுமார்

சாய்மீரா... 'மர்மயோகி'

60 கோடிக்கு வாங்கினார்கள். ஆனால், அந்தப் படம் சுமாராகப் போனதால்,

சாய்மீரா... 'மர்மயோகி'

30 கோடிகளே வருவாயாக வந்தன. விளம்பரதாரர்கள் மூலம் சில கோடிகள் கிடைத்தன. ரஜினியும், படத் தயாரிப்பாளரும் சில கோடிகளைத் திரும்பக் கொடுத்தனர். இதனால், பிரமிட் சாய்மீராவுக்கு நஷ்டம் ஒரு சில கோடிகள்தான்... ஆனால், 'குசேலன்’ படத்தால் நிறுவனமே நொடிந்து​விட்டதுபோல ஊரை ஏமாற்றிக் கடைசியில் நிறுவனத்தையே மூடிவிட்டனர்.

இவர்கள் முதலீடு செய்த நிறுவனங்கள், வாங்கிய நிறுவனங்கள் எல்லாம் 2008-ம் ஆண்டிலேயே காணாமல் போய்விட்டன. இவர்கள் முதலீடு செய்த நிறுவனங்களின் சிலவற்றில் சாமிநாதனின் மனைவி இயக்குநராக இருந்திருக்கிறார். அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தை பல கோடி கொடுத்து

சாய்மீரா... 'மர்மயோகி'

வாங்கினார்கள். கடைசியில் அதில் நஷ்டம் என்று வாங்கியவரிடமே திரும்பக் கொடுத்துவிட்டார்கள். இப்போது இந்தத் தொகை எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை. இந்த நிறுவனத்தில் வேலை பார்த்த 400 ஊழியர்களுக்கு சம்பள பாக்கி மட்டுமே

சாய்மீரா... 'மர்மயோகி'

4.5 கோடி. இதுதவிர எங்கள் பி.எஃப். பணத்தைச் செலுத்தாமல்

சாய்மீரா... 'மர்மயோகி'

2.5 கோடி மோசடி செய்துள்ளனர்.

'பங்குச் சந்தையில் திரட்டப்பட்ட

சாய்மீரா... 'மர்மயோகி'

800 கோடியில் ஒரு ரூபாய்கூட லாபம் இல்லை’ என்று சொல்லி மொத்தத்தையும் இந்தக் கும்பல் சுருட்டிவிட்டது. இவர்கள் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்​பட்டு, 'பங்குச் சந்தைக்குள் நுழையக்​கூடாது’ என்று செபி அமைப்பு சாமிநாத​னுக்கும், அவரது மனைவிக்கும் தடைபோட்டுள்ளது. கம்பெனியின் இயக்குநர்களாகப் பணியாற்றிய சிலர் பணியில் இருந்த காலத்தில், புதிதுபுதிதாக சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய சில கோடிகளை ஹவாலா முறையில் பெற்றுக்கொண்டார்கள் என்பது எங்கள் சந்தேகம். அதை, இயக்குநர் கூட்டத்தில் வாராக் கடனாக தள்ளுபடி செய்யப்படுவதாக சொல்லித் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கிடையே சாமிநாதனும், மோசடியில் உடந்தையாக இருந்த பிரபல சமூகத் தலைவர் ஒருவரும் சேர்ந்து பினாமி ஒருவரின் பெயரால் மீண்டும் வேறு பெயரில் நிறுவனம் தொடங்கி, பங்குச் சந்தையில் இறங்கி மக்களிடம் இருந்து பணம் திரட்டுவதற்கான வேலையில் இருக்கிறார்கள். இதைத் தடுத்தால்தான் மக்கள் பணம் மேற்கொண்டும் கொள்ளை போகாமல் தடுக்க முடியும்!'' என்று படபடத்தனர்.

சாமிநாதனின் கருத்தை அறிய பல முறை தொடர்புகொண்டோம். ஆனால், முடியவில்லை. பணம் மறைந்துபோன மர்மங்களுக்கு விளக்கம் தருவாரா சாமிநாதன்? அவர் விளக்கத்தை வாசகர்களிடம் கொண்டுசெல்ல நாம் தயாராக இருக்கிறோம்!

 - பா.பிரவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு