கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த முதல் சட்டமன்றக் கூட்டத்

. தொடரில், ''விவசாயிகளின் விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்!'' என முதல்வர் அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்பு இன்னமும் நிறைவேறவில்லை என்று புலம்புகின்றனர் ஏழை ஆதிதிராவிட விவசாயிகள்!.
கடலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நம்மிடம் வருத்தப்பட்டார்கள். ''சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், 'தமிழகம் முழுவதும் ஆதி திராவிடமக்கள் வாங்கியுள்ள தனி நபர் கடனான தாட்கோ கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை எழுப்பினார். அதோடு, அனைத்து தலித் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் கையெழுத்தையும் வாங்கி முதல்வரிடம் தந்தார். பரிசீலித்த முதல்வர், '2009 டிசம்பர் மாதம் வரை வாங்கிய அனைத்து விதமான தாட்கோ கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்!’ என்று உத்தரவிட்டார். சட்டமன்றக் கூட்டத்தொடரின் கவர்னர் உரையிலும் 'அனைத்து விதமான தாட்கோ கடன்களும் தள்ளுபடி’ என்று சொன்னார். இதற்கு அப்போது விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனும், மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்தனர்.

கடன்கள் அனைத்தும் தள்ளுபடியாகி விட்டதாக நாங்கள் நினைத்துக்கொண்டு இருந்தபோதுதான், திடீரென வங்கி ஊழியர்கள் வந்து எங்களிடம், 'கடனைத் திரும்பச் செலுத்துங்கள்!’ என்று நெருக்கடி

கொடுத்தனர். கடன் வங்கியவர்கள், 'தள்ளுபடி செய்த கடன்களை எதற்காக கட்டவேண்டும்? சட்டசபையிலேயே தள்ளுபடி என சொல்லியாச்சு!’ என்று வங்கி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

ஆனால் அவர்கள், 'தாட்கோ நிர்வாகம் தனி நபர் கடன்கள் என்று

85 ஆயிரத்தில் இருந்து

7.5 லட்சம் வரை கொடுக்கிறது. அந்தக் கடனில் மானியம் 25 சதவிகிதம். பயனாளித் தொகை 5 சதவிகிதம். விளிப்புத்தொகை 20 சதவிகிதம். இந்தத் தொகைதான் தாட்கோ கடன். மீதித் தொகையான 50 சதவிகிதத்தை வங்கிகள் கொடுக்கிறது. அப்படி வங்கி கொடுக்கும் கடன் தொகையை பயனாளிகள் கட்டாயம் கட்டத்தான் வேண்டும்’ என்று சொன்னார்கள். எங்களை நம்ப வெச்சு ஏமாத்திட்டாங்களே...'' என்றனர் அழாத குறையாக.

இது குறித்து தமிழக ஆதி திராவிடநலத் துறை அமைச்சர் தமிழரசியிடம் கேட்டோம். ''தள்ளுபடி என்பது பழைய கடனுக்குத்தான். அதுவும் தாட்கோ கொடுத்த பணம் மட்டும்தான் தள்ளுபடி. இதைத்தான் நாங்கள் சட்டசபையில் சொன்னோம்...'' என்று மட்டும் சொன்னார்.

சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரிடம் பேசியபோது, ''தாட்கோ கடனில் இணைந்த வங்கிக் கடன் தொகையை தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. அரசு அதைப் பிரித்து தனித்தனியே சொல்லியிருந்தால் மக்கள் குழம்பியிருக்க மாட்டார்கள்...'' என்றார்.

கடன் தொகை தரவேண்டியதில்லை என்று சந்தோஷமாக இருந்த விவசாயிகள் இப்போது வசூலுக்கு வரும் வங்கிக்காரர்களைக் கண்டு ஓடி ஒளிவதுதான் மிச்சம்!

- க.பூபாலன்