Published:Updated:

துரைமுருகன் மகன் வருவாரா?

வேலூர் தி.மு.க-வில் தில்லாலங்கடிவடக்கு மண்டலம்

பிரீமியம் ஸ்டோரி

மிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சட்டம் மற்றும்

##~##
சிறைத் துறை அமைச்சர் துரைமுருகன், தனது மகன் கதிர் ஆனந்த்துக்கு ஸீட் கேட்க அடிபோடுவதாகப் பரபரக்கிறது வேலூர்!

 வேலூர் தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர் ஒருவர் நம்மிடம் இது குறித்துப் பேசினார். ''துணை முதல்வர் ஸ்டாலின், 'இனி வரும் தேர்தல்களில் இளைஞர்களுக்கே அதிக வாய்ப்பு!’ என்று கூறி இருக்கிறார். அப்போதே இந்தப் பேச்சு, முன்னணித் தலைகளுக்குக் கலக்கத்தைக் கொடுத்தது. அதன் விளைவாகவே, அமைச்சர் வீரபாண்டியார் உட்பட பல தலைவர்கள் தங்களின் வாரிசுகளை கட்சியில் முக்கியப் பொறுப்புக்குக் கொண்டு வந்துள்ளனர். தொடர்ச்சியாக, எங்கள் அண்ணன் துரைமுருகனும் தன் மகனை அரசியலுக்குக் கொண்டுவர முயற்சிக்கிறார். முதல்வர் எப்போது வேலூருக்கு வந்தாலும்

துரைமுருகன் மகன் வருவாரா?

சுற்றுலா மாளிகையில்தான் தங்கி ஓய்வெடுப்பார். சமீபத்தில், இங்கு வந்தவர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தங்கினார். அதற்கும் காரணம் உண்டு. வி.ஐ.டி. வேந்தரும் தன் மகனுக்கு ஸீட் கேட்டுள்ளாராம். இது துரைமுருகனுக்கு கொஞ்சம் மனக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறது. அதனால்தான், கதிர் ஆனந்த்துக்கு அணைக்கட்டு தொகுதியில் ஸீட் கேட்க முடிவு எடுத்திருக்கிறார். கல்லூரியை மட்டுமே நிர்வகித்து வரும் கதிர் ஆனந்த், மார்ச் மாதம் முதல் களத்தில் இறங்கி பம்பரம்போல் சுழல்வதை நீங்களும் பார்க்கலாம். நாங்களும் அவருக்காக வேலை

துரைமுருகன் மகன் வருவாரா?

செய்யப் போகிறோம். ஏற்கெனவே, எங்கள் அமைச்சருக்கு செல்வாக்கு அதிகம். வேலூர் மாவட்டத்திலேயே தனது தொகுதியான காட்பாடிக்கு அவர் அந்த அளவுக்கு நல்லதை செய்திருக்கிறார். இது மட்டுமே போதும், எங்க சின்ன அண்ணன் ஜெயிக்க... 2011 தேர்தலில் வெற்றிப் பெற்று அப்பாவும், மகனும் சட்டசபைக்குச் சென்று தொகுதி மக்களுக்காக பேசப் போவது நிச்சயம்!'' என்று உணர்ச்சிவசப்பட்டார்.

துரைமுருகன் மகனும், கிங்ஸ்டன் கல்லூரியின் சேர்மனுமான கதிர் ஆனந்த்தைத் தொடர்புகொண்டு கேட்டோம். ''எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை. நான் அரசியலுக்கு வர மாட்டேன். கல்லூரி நிர்வாகத்தை கவனிக்கவே நேரம் போதவில்லை. ஆகவே, நிச்சயமாக அரசியலுக்கு வர மாட்டேன்...'' என்று ஒரே போடுபோட்டார்.

அரசியல் பிரபலத்தின் வாரிசு இப்படிச் சொன்னாலும், 'எல்லாம் காற்றில் எழுதிய வாக்குறுதிதான்’ என்று புன்னகைக்கிறார்கள் வேலூர் மாவட்ட மக்கள்!

- கே.ஏ.சசிகுமார், படம்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு