Published:Updated:

'கை' மாறும் தொகுதி?

புதுக்கோட்டை புகைச்சல்..மத்திய மண்டலம்

பிரீமியம் ஸ்டோரி

ப்துக்கோட்டையை மையப்படுத்தி தி.மு.க. நடத்தும் உட்கட்சி யுத்தம் ஒரு பக்கம் தூள்

##~##
கிளப்ப... காங்கிரஸும் களத்தில் குதித்திருக்கிறது. திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம், ஜி.கே.வாசன் என்று மூவரும் ஆளுக்கொரு தொகுதி கேட்டு அடம் பிடிக்கிறார்கள்.

 ''புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கென திருமயம் தொகுதி மட்டுமே கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டு இருந்தது. அங்கு தன்னுடைய தீவிர விசுவாசியான ராம.சுப்புராமை நிறுத்தி ஜெயிக்க வைத்தார் ப.சிதம்பரம். வரும் தேர்தலில் சில தொகுதிகளைக் கூடுதலாகப் பெற்றே தீருவது என கார்த்தி சிதம்பரம் காய்நகர்த்தி வருகிறார். ஏனென்றால், அவரே இங்குதான் போட்டியிடப் போகிறார்!'' என்ற ஏரியா காங்கிரஸ் பிரமுகர்கள் மேலும் விலாவாரியாகப் பேசினார்கள்.

''பி.ஜே.பி-யில் இருந்து திருநாவுக்கரசர் காங்கிரஸ் பக்கம் திரும்பியதுமே அவரின் ஆதரவாளர்கள்,

'கை' மாறும் தொகுதி?

அறந்தாங்கி இனி அரசருக்குத்தான் என உறுதியாகப் பேசினர். அங்கு தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கும் உதயம் சண்முகம், தி.மு.க-வைச் சேர்ந்தவர். தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர். இருந்தாலும், அந்தத் தொகுதியை எப்படியாவது வாங்கி விட அரசர் குரூப் ஆவேசம் காட்டிவருகிறது. கார்த்தி சிதம்பரமோ வேறொரு கணக்குப் போட்டார். அதாவது அறந்தாங்கியைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த முறை புதுக்கோட்டையை எப்படியும் வாங்கி விடவேண்டும் என நினைக்கிறார். புதுக்கோட்டை தி.மு.க-வைப் பொறுத்த வரை முன்னாள் அமைச்சர் ரகுபதியும், மாவட்டச் செயலாளரான பெரியண்ணன் அரசுவும் 'நீயா... நானா?’ என அரசியல் செய்து வருகிறார்கள். கடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்ட ஜாஃபர் அலி சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் நெடுஞ்செழிய​னிடம் தோற்றார். முன்னாள் அமைச்சர் ரகுபதியின் ஆதரவாளரான ஜாஃபர் அலி தோல்விக்கு, அங்கு இருக்கும் கோஷ்டி அரசியலே காரணம் எனப் பேசப்பட்டது. இந்த முறை, மாவட்டச் செயலாளரான பெரியண்ணன் அரசுவும், ரகுபதியும் புதுக்கோட்டை தனக்குத்தான் வேண்டும் என தலைமையிடம் கேட்கின்றனர். யாருக்கு ஸீட் கொடுப்பது

'கை' மாறும் தொகுதி?

என குழம்பியுள்ளது தலைமை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கார்த்தி சிதம்பரத்தை புதுக்கோட்டையில் நிற்கச்சொல்லி அவர் ஆதரவாளர்கள் கேட்டு வருகிறார்கள். இந்தத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லாத கார்த்தி சிதம்பரம், தமது ஆதரவாளருக்கு அந்தத் தொகுதியைப் பெற்றுத்தர நினைக்கிறார்...'' என்றார்கள்.

இதற்கு ஆதாரமாக அவர்கள், ''ஏற்கெனவே திருமயம் தொகுதி முழுவதும் மத்திய அரசின் திட்டங்களைப் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார் ப.சிதம்பரம். அந்தப் புத்தகத்தைத் தொகுதி முழுவதும் எம்.எல்.ஏ-வான ராம.சுப்புராம் கொடுத்து பிரபலப்படுத்தி வருகிறார். அதில் திருமயம் தொகுதியில், மத்திய அரசுத் திட்டங்கள் எந்த அளவில் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது என்ப​தைத் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். பெல் நிறுவனம் திருமயம் தொகுதிக்குக் கொண்டுவந்ததையும் சிறப்பாகக் குறிப்பிட்டு உள்ளனர். மேலும் தொகுதிக்குள் நடக்கவேண்டிய அத்தியாவசிய வேலைகள் குறித்து எம்.எல்.ஏ-விடம் கேட்கச் சொல்லி இருக்​கிறாரார். அதனால்தான் ராம.சுப்புராம் போகும் இடங்களில் எல்லாம் சிதம்பரம் பெற்றுக்கொடுத்த கல்விக் கடன்கள், இதய அறுவை சிகிச்சைக்குப் பெற்றுக்கொடுத்த நிதி விவரம், தொகுதி எம்.பி. நிதியில் இருந்து பெற்றுத் தந்த திட்டங்கள், அதன் மூலமான பயன்கள் என விலாவாரியாகப் பேசிவருகிறார். இப்படிச் செய்வதன் மூலம் திருமயம் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்வதோடு பக்கத்துத் தொகுதியான புதுக்கோட்டை மக்களுக்கும் அதைத் தெரியப்படுத்துவதுதான் நோக்கம்...'' என்றும் கூறினார்கள்.

கார்த்தி சிதம்பரத்தின் கணக்கு இப்படி இருக்க... ஜி.கே.வாசனின் விசுவாசிகளும், 'புதுக்கோட்டையை எங்களுக்குத்தான் வாங்கித்தர வேண்டும்’ எனக்கேட்டு தொந்தரவு செய்து வருகிறார்கள். ஜி.கே.வாசனின் ஆதரவாளரும் முன்னாள் எம்.பி. சுந்தர்​ராஜனின் மகனுமான ராஜா, இளைஞர் காங்கிரஸில் பொறுப்பு

'கை' மாறும் தொகுதி?

கேட்டார். கிடைக்கவில்லை. அடுத்து மாணவர் காங்கிரஸில் பொறுப்பு கேட்டார். கொடுக்​க​வில்லை. இதையே காரணம் காட்டி, ''புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை கண்டிப்பாகப் பெற்றுத் தரவேண்டும்!'' என்று போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரை சந்தித்தோம்.

''எங்க அப்பா மூணு தடவை எம்.பி-யாகவும், இரண்டு தடவை திருமயம் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் இருந்திருக்​காங்க. எங்க தாத்தா ராமையா, காங்கிரஸ் கட்சி மாநிலப் பொறுப்புல இருந்தவங்க. அப்படிப்பட்ட பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம் எங்களோடது. எங்க அப்பா இறந்தப்ப எம்.பி. ஸீட் அம்மாவுக்குத் தர்றதா மூப்பனார் ஐயா சொன்னாங்க. ஆனா, எங்க அம்மா, 'என் பையன் பெரியவனா வந்ததும் அவனுக்கு ஸீட் குடுங்க’ன்னு சொன்னாங்க. இப்பவும் எங்க அம்மாதான், வாசன் ஐயாவைப் பார்த்துப் பேசி இருக்காங்க. மத்தபடி எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து கட்சிப் பணியை சிறப்பா செஞ்சிட்டு இருக்கேன். இப்ப திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் துணைத் தலைவரா இருக்கேன். வர்ற தேர்தல்ல புதுக்கோட்டைத் தொகுதியை காங்கிரஸுக்கு வாங்குறதுல ஆவலா இருக்கோம்!'' என்றார்.

தொகுதி நிலவரங்கள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவரும் ப.சி-யின் ஆதரவாளருமான புஷ்பராஜிடம் கேட்டபோது, ''புதுக்​கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஆறு தொகுதிகளில், மூன்று காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்து இருக்கிறோம். இதுகுறித்து எங்கள் கட்சித் தலைவர்களும் பேசி வருகிறார்கள். மற்றபடி, கார்த்தி சிதம்பரம் இந்தத் தேர்தலில் போட்டியிட மாட்டார். அடுத்து, காங்கிரஸ் கட்சியில் யார் யார் போட்டியிடுவது என்பதைக் கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும். அதுவரை கிளம்பும் யூகங்களுக்கு நான் என்ன சொல்ல முடியும்?'' என்றார்.

காங்கிரஸ் கட்சியில இந்த முட்டல், மோதல்கூட இல்லைன்னா எப்படி?

- வீ.மாணிக்கவாசகம்

படங்கள்:   பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு