Published:Updated:

கொள்ளைப்போகும் கூழாங்கற்கள்!

பூத்துறையில் அடுத்த வில்லங்கம்

கொள்ளைப்போகும் கூழாங்கற்கள்!

பூத்துறையில் அடுத்த வில்லங்கம்

Published:Updated:
##~##
கொள்ளைப்போகும் கூழாங்கற்கள்!

சைக்க முடியாத சக்தியாக வலம் வந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியை, அனுமதி இல்லாமல் செம்மண் அள்ளியதாக சிறைக்கு அனுப்பி வைக்கக் காரணமாக இருந்தது விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமம். 'செம்மண் திருடின அதே கும்பல், இப்ப கூழாங்கற்களைத் திருடிட்டுப் போறாங்க’ என்று அந்த கிராம மக்கள் புகார் வாசிக்க, விரைந்தோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதுச்சேரி பகுதியான முத்திரைப்பாளையத்தைத் தாண்டி சில கிலோ மீட்டர்களில் தொடங்குகிறது விழுப்புரம் எல்லை. அங்கே சாலையின் இருபுறமும் சிறிய சிறிய குன்றுகள்போல கூழாங்கற்கள் சைஸ் வாரியாகப் பிரிக்கப்பட்டு, லாரிகளின் வருகைக்காகக் காத்திருப்பதைக் கண்டோம்.  

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த 'செம்படுகை நன்னீரகம்’ அமைப்பின் நிர்வாகி ராமமூர்த்தியிடம் பேசினோம். ''இது புதிதாக முளைத்த தொழில் இல்லை. பல வருடங்களாகவே அரசு அனுமதி இல்லாமல் சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொண்டு வருகிறது. 25 வருடங்களுக்கு முன்னர் இருந்தே பூத்துறை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் செம்மண் எடுத்து வருகின்றனர். 2007-க்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில்தான் இங்கு செம்மண் தாறுமாறாக கொள்ளை போனது. எடுக்க வேண்டிய அளவைவிட அதிகமாக செம்மண்ணை எடுத்து, நிலத்தடி நீராதாரத்தைக் காலிசெய்தனர். இதன் காரணமாக அதிக நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக விளங்கிய பூத்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பெருமளவுக்குப் பாதிப்புக்குள்ளாகி விவசாயத்தையே கைவிட்டுவிட்டுச் செல்லும் அளவுக்குத் தள்ளப்பட்டனர்.

கொள்ளைப்போகும் கூழாங்கற்கள்!
கொள்ளைப்போகும் கூழாங்கற்கள்!

ஒரு பக்கம் செம்மண் அள்ளுவதும் மறுபக்கம் கூழாங்கற்களை அள்ளுவதும் அப்போதே நடந்து வந்தது. கூழாங்கற்களைவிட செம்மண் எடுப்பது சுலபமானது என்பதால், விற்பனையில் கொள்ளை

கொள்ளைப்போகும் கூழாங்கற்கள்!

லாபம் பார்த்தனர். அப்போது கூழாங்கற்கள் வியாபாரம் மந்தமாகவே இருந்தது. முன்னாள் அமைச்சர் பொன்முடியும் புதுச்சேரியைச் சேர்ந்த சிலரும் செம்மண் விவகாரத்தில் சிக்கியதில் இருந்து இந்தப் பகுதியில் யாரும் செம்மண் எடுப்பது இல்லை. செம்மண் மீது கை வைத்தால் அரசு நடவ டிக்கை பாயும் என்று பயந்து, கூழாங்கற்களின் பக்கம் திரும்பினர். கூழாங்கற்களை சைஸ் வாரியாகப் பிரித்து, லோடு 30 ஆயிரம் ரூபாய் வரை கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்கின்றனர். அதிக பளபளப்பாக இருக்கும் கற்களை வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்து வருகின்றனர்'' என்றார்.

ஆனால் கூழாங்கற்கள் குவாரி உரிமையாளர் பாஸ்கரன், ''லோடு நாலாயிரம் ரூபாய்ங்க. இப்ப எல்லாம் இந்தப் பகுதியில் எதுவும் எடுக்கிறது கிடையாது. எல்லாமே பண்ருட்டியில் இருந்து வரும். இங்க அதை சலிச்சு வித்துட்டு இருக்கோம். அரசிடம் இருந்து அனுமதி வாங்கித்தான் நடத்திகிட்டு இருக்கோம்'' என்றார். பெரும்பாலும் ஆழ்துளைக் கிணறுகளுக்குப் பயன்படுத்தபடும்இந்தக் கூழாங்​கற்கள் சில பண்ணை வீட்டு சாலை ஓரங்களில் அலங்காரத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

கூழாங்கற்களை எங்கு இருந்து சட்ட விரோதமாக எடுக்கிறார்கள் என்பதை அறிய ராமமூர்த்தியுடன் பயணித்தோம். கரடுமுரடான செம்மண் சரிவுகளை கடந்தவுடன், சாலையில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் பெரம்பை என்ற இடத்தில் கிட்டத்தட்ட 20 பேர் செம்மண்ணை சலித்துக் கூழாங்கற்களைப் பிரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

ராமமூர்த்தி மேலும் விளக்க ஆரம்பித்தார். ''பண்ருட்டியில் இருந்து கூழாங்கற்கள் வருகிறது என்று குவாரி உரிமையாளர் சொல்வது எல்லாம் சுத்தப் பொய். குவாரி உரிமையாளர்கள் சிலர் சட்டத்துக்குப் புறம்பாக செம்மண் எடுத்து வந்தவர்கள்தான். இவர்களைத் தட்டிக் கேட்பதற்கு யாரும் இல்லை. புதுச்சேரி அரசிடம் இதுபற்றி எடுத்துக் கூறி தாசில்தாரை இங்கு அழைத்து வந்தோம். அவர் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. தமிழக எல்லையில்தானே எடுக்கிறார்கள் என்று புதுச்சேரி அரசு அலட்சியம் காட்டுவதை கைவிட வேண்டும். இது எதிர்காலத்தில் புதுச்சேரி மாநிலத்திலும் பரவும்'' என்று வேதனைப்பட்டார்.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் சுரங்கத் துறையின் துணை இயக்குநர் கந்தனிடம் பேசினோம். ''கூழாங்கற்களும் கனிம வளத்தில்தான் வருகிறது. யாருக்கும் அதை எடுப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தை விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம்'' என்று உறுதியளித்தார்.

எப்போது..?  

- நா.இள அறவாழி

படங்கள்: எஸ்.தேவராஜன்