Published:Updated:

'2 தடவை சுட்டேன்... ஒரு புல்லட் மிச்சம் இருக்கு!'

போலீஸ் பிடியில் சத்தியமூர்த்தி

'2 தடவை சுட்டேன்... ஒரு புல்லட் மிச்சம் இருக்கு!'

போலீஸ் பிடியில் சத்தியமூர்த்தி

Published:Updated:
##~##
'2 தடவை சுட்டேன்... ஒரு புல்லட் மிச்சம் இருக்கு!'

நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மண்டல பொறுப்பாளர் சத்தியமூர்த்தியை ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்திருக்கிறது திருப்பாச்சேத்தி போலீஸ். கைதுக்கு முன்பாக சத்தியமூர்த்தி கோஷ்டிக்கும் போலீஸுக்கும் இடையில் துப்பாக்கி முனையில் நடந்த சேஸிங், ஹாலிவுட் சினிமாவை மிஞ்சிவிடும் என்கிறார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தமிழ்நாடு மீட்சிப் படையின் மணிகண்டன், சத்தியமூர்த்தி, முத்துக்குமார் இந்த மூன்று பேரையும் விடுதலை செய்யணும்’- கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின் போது வீரப்பன் வைத்த முக்கியமான கோரிக்கை இது. இதற்கு அடிபணிந்து மூவரும் அப்போது விடுதலை செய்யப்பட்டார்கள். கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் தன்னோடு வனவாசம் செய்த சத்தியமூர்த்திக்கு வீரப்பன் வைத்த பெயர் நீலன். வெள்ளித் திருப்பூர் போலீஸ் ஸ்டேஷன் அட்டாக் உள்பட பங்களாபுதூர், அந்தியூர், சத்தியமங்கலம் ஸ்டேஷன்களில் வீரப்பன் மீது போடப்பட்ட அத்தனை வழக்குகளிலும் சத்தியமூர்த்தியையும் குற்றவாளியாகச் சேர்த்திருக்கிறது போலீஸ். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில்

'2 தடவை சுட்டேன்... ஒரு புல்லட் மிச்சம் இருக்கு!'

ஏழாண்டுகள் சிறையில் இருந்த சத்தியமூர்த்தி இப்போது சீமானின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவர்.

இவர் ஆள் கடத்தல் வழக்கில் கைதானது எப்படி? நடந்த சம்பவத்தை திருப்பாச்சேத்தி போலீஸாரே விவரிக்​கிறார்கள். ''புதுக்கோட்டையைச் சேர்ந்த டாக்ஸி டிரைவர் குமார் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைத்திருக்கிறார். மதுரை மாவட்டம் பேரையூர் பெரியார் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் கிளர்க்காக இருக்கும் ராஜேந்திரன் என்பவர் அவரது சித்தப்பா சோணை மூலமாக கள்ள நோட்டு பிசினஸ் பண்றதா ஒரு ரூட் கிடைச்சிருக்கு. இவர்களிடம் ஏழு லட்சம் வரைக்கும் கொடுத்திருக்கார் குமார். பதிலுக்கு அந்தப் பக்கம் இருந்து பணம் இரட்டிப்பாகி வந்தபாடில்லை. ஒரு கட்டத்துல தான் ஏமாற்றப்பட்டது தெரிஞ்சிருக்கு. சத்தியமூர்த்திக்கிட்ட போயி அழுதிருக்கார் குமார். அவருக்காகத்தான் ஆள் கடத்தலில் இறங்கி இருக்கார் சத்தியமூர்த்தி. ராஜேந்திரனை தந்திரமா பேசி திருப்பரங்குன்றத்துக்கு வரவழைத்து, கடத்தி இருக்காங்க.

'2 தடவை சுட்டேன்... ஒரு புல்லட் மிச்சம் இருக்கு!'

ராஜேந்திரன் வாயில துணியைக் கட்டி கார்ல ஸீட்டுக்கு அடியில் போட்டிருக்காங்க. அவனியாபுரத்துல ரோட்டோரமா இருந்த கடையில டீ குடிக்க காரை நிறுத்தி இருக்காங்க. அப்போ ராஜேந்திரன் எப்படியோ வாயில இருந்த துணியை எடுத்துட்டு சத்தம் போட்டிருக்காரு. அக்கம் பக்கத்துல இருந்தவங்க ஓடி வரவும், காரை வேகமா எடுத்துட்டு கிளம்பிட்டாங்க. விசயம் போலீஸுக்குத் தெரிஞ்சது, எல்லா பக்கமும் அலார்ட் செஞ்சோம். மானாமதுரை டி.எஸ்.பி. வெள்ளத்துரைதான் அவங்களை மடக்கினாரு'' என்றார்கள்.

'2 தடவை சுட்டேன்... ஒரு புல்லட் மிச்சம் இருக்கு!'

டி.எஸ்.பி. வெள்ளத்துரையிடம் பேசினோம். ''எங்களை பார்த்துமே அவங்க வந்த காரோட ஹெட் லைட்டை ஆஃப் பண்ணிட்டாங்க. எதுக்காக லைட்டை ஆஃப் பண்றாங்கன்னு சந்தேகப்பட்டு நான் வண்டியை நெருங்கியதும், பச்சேரி நோக்கி கார் வேகமா பறந்தது. திருப்​பாச்சேத்தி இன்ஸ்பெக்டரை பச்சேரிக்கு வரச் சொல்லிவிட்டு, அந்தக் காரை நான் துரத்தினேன். பச்​சேரியில் இன்ஸ்பெக்டர் ஜீப்பை

'2 தடவை சுட்டேன்... ஒரு புல்லட் மிச்சம் இருக்கு!'

வைத்து ரோட்டை மறித்து நின்றார். நாங்கள் பின்னால் துரத்திச் சென்றோம். வேற வழி இல்லாததால, காரை நிறுத்திவிட்டு, காட்டுக்குள் இறங்கி ஓட ஆரம்பித்தார்கள். நாங்கள் துரத்தவும் சத்தியமூர்த்தி எங்களை நோக்கி சுட்டான். நல்லவேளை யாருக்கும் காயம் படல. விடாம துரத்தி அவனுக ரெண்டு பேரையும் மடக்கிட்டோம். சத்தியமூர்த்தி துப்பாக்கி எடுத்த போதே நானும் துப்பாக்கியை எடுத்துருப்பேன். தேவை இல்லாத சர்ச்சைகள் வரும் என்பதால்தான் அமைதியாக இருந்துவிட்டேன்'' என்கிறார்.

சத்தியமூர்த்தி அவரது கூட்டாளிகள் சரவணன், மகாராஜன், பிரபாகரன் ஆகியோர் இப்போது நீதிமன்ற காவலில் இருக்கின்றன. சத்தியமூர்த்தியிடம் பேசினோம். ''என் தம்பி ராஜாவும் குமாரும் நண்பர்கள். ராஜேந்திரன் குமாரிடம் ஏழு லட்சம் வரைக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. 'இனிமேல் தற்கொலை பண்ணிக்கிறதைத் தவிர வேற வழியில்லண்ணே’னு என்கிட்ட அழுதான் குமார். அதனால்தான் ஆளைத் தூக்கி கஸ்டடியில் வைத்து பணத்தை வசூல் செய்துடலாம் என்று நினைத்தேன். இடையில் போலீஸ் குறுக்கே வந்ததால் துப்பாக்கி எடுக்க வேண்டியதாகி விட்டது. இரண்டு தடவை சுட்டேன். ஒரு புல்லட் மிச்சம் இருக்கு'' என்றார் சர்வ சாதாரணமாய்.

கடத்தப்பட்ட ராஜேந்திரனோ, ''எனக்கும் இந்தக் கும்பலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்க சித்தப்பா சோனை மூணு மாசத்துக்கு முன்பு குமாரை அறிமுகப்படுத்தி வைத்தார். 'குமாரு பணத்தோட வந்திருக்காரு திருப்பரங்குன்றத்துல அவரைப் பார்த்து பணத்தை வாங்கிட்டு வந்துரு’ன்னாரு. பணத்தை வாங்க வந்த இடத்துல என்னைக் கடத்திட்டாங்க'' என்கிறார்.

கள்ள நோட்டு வழக்கைத் துருவ ஆரம்பித்திருக்கும் மதுரை போலீஸார், 'இதில் பெரும் புள்ளிகள் பலரும் சிக்குவார்கள்’ என்று திகிலைக் கூட்டுகிறார்கள்.

- குள.சண்முகசுந்தரம், படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்