Published:Updated:

என் வீட்டுக்கு குடிநீர்கூட விடுவது இல்லை...

தொகுதி பக்கமே எட்டிப் பார்த்தது இல்லை!சர்ச்சையில் சிக்கிய சந்திரகுமார்!

என் வீட்டுக்கு குடிநீர்கூட விடுவது இல்லை...

தொகுதி பக்கமே எட்டிப் பார்த்தது இல்லை!சர்ச்சையில் சிக்கிய சந்திரகுமார்!

Published:Updated:
##~##
என் வீட்டுக்கு குடிநீர்கூட விடுவது இல்லை...

தே.மு.தி.க. மாநிலப் பொருளாளர் சந்திரகுமாரும் பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கமும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டு இருப்பது தான் ஈரோட்டின் ஹாட் டாபிக்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''குடிநீர் வசதி, சாக்கடை வசதி, சாலை வசதி என எந்த ஒரு அடிப்படை வசதியும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் இல்லை. எம்.எல்.ஏ-விடம் கேட்கலாம் என்று அவருடைய அலுவலகத்துக்குப் போனால், எப்போதும் பூட்டியே கிடக்கிறது'' என்று ஈரோடு கிழக்குத் தொகுதியைச் சேர்ந்த மக்கள் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சந்திரகுமார் வீட்டை முற்றுகையிட்டு சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்தச் சூழ்நிலையில் சந்திரகுமாரைச் சந்தித்தோம். ''அடிப்படை வசதி செய்து தரவில்லை என்று என் வீட்டை முற்றுகையிட்டவர்கள் அ.தி.மு.க-வைச் சேர்ந்த பெண்கள்தான். அவர்களை ஈரோடு நகரச் செயலாளர் மனோகரனும், மாவட்டச் செய​லாளரும் பொதுப்பணித் துறை அமைச்சருமான ராமலிங்கமும்தான் தூண்டிவிட்டு இருக்கின்றனர்.  

என் வீட்டுக்கு குடிநீர்கூட விடுவது இல்லை...

'தண்ணீர் வரவில்லை. சாக்கடையை சுத்தப்படுத்த வில்லை. ரேஷன் கடையில் சரியாக பொருட்கள்

என் வீட்டுக்கு குடிநீர்கூட விடுவது இல்லை...

வழங்குவது இல்லை. ஊனமுற்றவர்களுக்கு உதவித் தொகை வரவில்லை. ரோடு போடவில்லை. எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை’ என்று அவர்கள் கூச்சல் போட்டனர். இந்த உண்மைகளை அ.தி.மு.க-வினரே சொல்லி இருப்பதுதான் ஹைலைட். ஈரோடு கிழக்குத் தொகுதியில் நான் எம்.எல்.ஏ-வாக பதவியேற்றதில் இருந்து, இதுநாள் வரை ஒரு தெரு விளக்கோ குடிநீர் பைப்போ போட்டது இல்லை. நான் எதிர்க் கட்சிக்காரன் என்பதால் திட்டமிட்டே அதிகாரிகளும் மாநகராட்சி நிர்வாகமும் அமைச்சர்களும் புறக்கணிக்கிறார்கள்.

என் தொகுதியில் இருக்கும் ஈரோடு அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இரண்டு லிஃப்ட்கள் பழுதாகிக் கிடக்கிறது. அவற்றை சரிசெய்து தரச் சொல்லி சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கேட்டும் கண்டு கொள்ளவில்லை. அதேபோல ராஜாஜிபுரத்தில் உள்ள பொதுமக்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. செங்குட்டுவன் வீதியில் குடிநீர் பைப்பும் வி.ஏ.ஓ. அலுவலகமும் இல்லை. என் தொகுதியில் உள்ள பல ரேஷன் கடைகளுக்கு ஆள் பற்றாகுறை உள்ளது. இவைபற்றி பலமுறை புகார் கொடுத்தும் பிரயோஜனம் இல்லை.

குயிலாந்தோப்பு வாய்க்கால் பாலம் கட்ட போன வருடமே தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 40 லட்ச ரூபாய் ஒதுக்கியும்... பொதுப்பணித் துறை அமைச்சர் கையெழுத்துப் போடாததால், பாலம் கட்டி முடியவில்லை. சூரம்பட்டியில் ஓடைப்பள்ளம் கால்வாயின் கரைகளைக் கட்ட பொதுப்பணித் துறை

என் வீட்டுக்கு குடிநீர்கூட விடுவது இல்லை...

அமைச்சரிடம் கேட்டால், பராமரிப்பை மாநகராட்சிதான் செய்யும் என்று சொல்லி தட்டிக் கழிக்கிறார். இதையெல்லாம்விட கொடுமை, நான் சட்டசபையில் மக்கள் பிரச்னைகளை பேசுவதால் கடந்த ஆறு மாத காலமாக என் வீட்டுக்கு குடிநீர்கூட விடுவது இல்லை.

எதிர்க் கட்சியான எங்களை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு துரோகம் செய் கிறார்கள். இந்த நிலை இப்படியே நீடித்தால், எங்கள் தலைவரிடம் சொல்லி தொகுதி மக்களைத் திரட்டி அமைச்சர்களின் வீடுகளையும் முதல்வர் வீட்டையும் நாங்கள் முற்றுகையிடுவோம்'' என்று கொதித்தார்.

இதுபற்றி ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர் மனோகரனிடம் கேட்டோம். ''பெண்களைத் தூண்டிவிட்டு முற்றுகை செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மோத நினைத்தால், நேரடியாகவே நாங்கள் மோதுவோம். அம்மாவின் தயவால் பதவி கிடைத்ததை மறந்துவிட்டு, மக்கள் பணி புரியாமல் வெறும் வாய் சவடால் அடித்துக்கொண்டு இருந்தால், பொதுமக்கள் முற்றுகையிடத்தான் செய்வார்கள். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் இவர்கள். இன்னும் கொஞ்ச காலத்தில் காணாமல் போய்விடுவார்கள்'' என்றார்.

இதுபற்றி பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத்திடம் கேட்டோம். ''சந்திரகுமார் தொகுதி பக்கமே எட்டிப் பார்ப்பது இல்லை. அவர் தொகுதியில் மட்டும் 15 வாரம் இலவச மிக்ஸி, கிரைண்டர் கொடுத்து இருக்கிறோம். ஒரு நிகழ்ச்சியில்கூட கலந்துகொண்டது இல்லை. மக்கள் இவருக்காக ஓட்டுப்போடவில்லை. அம்மாவுக்காகதான் ஓட்டு போட்டனர். அதனால் இவருடைய தொகுதியையும் நாங்கள்தான் பார்த்துக்கொள்கிறோம்.  

நான் அமைச்சராக இருந்தாலும் இதுவரை ஆறு, ஏழு முறை என் தொகுதி முழுக்க சென்று வந்துவிட்டேன். அவர் எம்.எல்.ஏ, ஆனதில் இருந்து ஒரு முறைகூட தொகுதிப் பக்கம் போனது இல்லை. அதனால், தொகுதி மக்கள் அவர் வீட்டை முற்றுகையிட்டு இருக்கிறார்கள். அவர் தொகுதியில் என்ன நடக்கிறது என்றே அவருக்குத் தெரியாது. இதுநாள் வரை அவர் தொகுதிக்காக என்னிடம் ஒரு கோரிக்கைகூட வைத்தது இல்லை. குயிலாந்தோப்பு பாலம் கட்ட அடுத்த வாரம் டெண்டர் விடப்படுகிறது. ஓடைகள் மாநகராட்சி கட்டுப்பாட்டில்தான் வரும். இவர் தொகுதிப் பக்கம் வராமல் சென்னையில் அவருடைய தலைவருடன் இருந்துகொண்டே அரசியல் செய்கிறார்'' என்றார் கிண்டலாக.

வாக்களித்த மக்கள்தான் பாவம்!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி