ஜெயலலிதாவைச் சந்திக்கப்போகிறார், அ.தி.மு.க-வில் சேரப்போகிறார் என்றெல்லாம் பரபரக்கப்பட்ட லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமாரோஸ் இப்போது, இந்திய ஜனநாயகக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர். ஐ.ஜே.கே-வின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தரை சந்தித்த அவர், கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டதோடு, மாநிலப் பதவியையும் பெற்றுள்ளார். '

'என்ன திடீர்னு ஐ.ஜே.கே-வில் சேர்ந்துட்டீங்க?''

''ரொம்ப நாளா வெளியுலகம் தெரியாம, ஹவுஸ் வொய்ஃப்பாகத்தான் இருந்தேன். இப்போதான் ஹோமியோபதி மெடிக்கல் காலேஜ், ரெடிமேட் ஷோரூம் ஆகியவற்றைக் கவனிச்சுட்டு வர்றேன். கணவர் மார்ட்டின் மீது வழக்கு, கைது எனப் பிரச்னை வந்த பிறகுதான் அரசியலில் ஈடுபடணும்னு தோணுச்சு. அ.தி.மு.க-வில் சேரலாம்னுதான் இருந்தேன். அதற்கான முயற்சி எல்லாம் செஞ்சேன். ஆனா, யாரும் என்னைக் கூப்பிடவே இல்லை. காங்கிரஸில் சேரலாம்னு ராகுல் காந்தி, ஷீலா தீட்சித்கிட்ட பேசினேன். காங்கிரஸில் நிறையப் பிரிவுகள் இருப்பதால், அதிலேயும் சேரலை. அப்பதான் ஐ.ஜே.கே-வில் இருந்து அழைப்பு வந்துச்சு. 'நம்ம சமூகத்தைச் சேர்ந்தவங்க எல்லாம் ஒற்றுமையா இருக்கணும். ஏதாவது பிரச்னைன்னா, நாங்க வந்து நிப்போம். நீ இங்கே இருக்கிறதுதான் நல்லது’னு சொன்னாங்க. அதனால, ஐ.ஜே.கே-வில் இணைஞ்சுட்டேன்.''

''ஐ.ஜே.கே-வில் சேர்ந்ததில் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்னு நினைக்கிறீங்க?''

''ஆள் பலம், கட்சி பலம்னு ஒரு பாதுகாப்புதான். உளுந்தூர்பேட்டையில் நடந்த ஐ.ஜே.கே. மாநாட்டில், ஐந்து லட்சம் பேர் முன்னிலையில், கட்சியைச் சேர்ந்த ஜெயசீலன், என் கணவருக்கு ஆதரவாகப் பத்து நிமிஷம் பேசினார். என் கணவருக்காக யாருமே இதுவரை பேசலை. அவங்கதான் பேசினாங்க. இனி

எந்த பிரச்னைனாலும் வந்து நிப்பாங்கனு நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிக்கையில்தான் கட்சியில் சேர்ந்தேன். நான் கேக்காமலே எனக்கு கட்சியோட துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுத்திருக்காங்க. மகிழ்ச்சியா இருக்கேன்.''

''மார்ட்டின் தி.மு.க-வில் இருக்காரே? நீங்க ஏன் அங்கே சேரலை?''

''கணவர் இருக்கிற கட்சியில்தான் மனைவி இருக்கணும்னு அவசியம் இல்லை. அது என் விருப்பம். தவிர, என் கணவருக்குப் பிரச்னை ஏற்பட்டப்ப அவங்க (தி.மு.க.) எந்த உதவியும் செய்யலை. கணவர் ஜெயிலில் இருந்தப்ப, எனக்கு உடல்நிலை சரியில்லை. ஆனா, ஆறுதல்கூட அவங்க சொல்லலை. தி.மு.க-வில் இருந்த சிலரே, ஆளும் கட்சிக்கு ஆதரவாப்போறதுதான் நல்லதுனு சொன்னாங்க. அதனாலதான் தி.மு.க-வில் சேரலை.''

'' நீங்க அ.தி.மு.க-வில் சேர விரும்பியது முதல்வருக்குத் தெரியுமா?''

''எனக்கு அ.தி.மு.க-வில் சேரத்தான் ரொம்ப விருப்பம். ஆனா, நிறையப் பேருக்கு நான் அ.தி.மு.க-வில் சேர்றது பிடிக்கலை. என் கணவரைப் பத்தியும், என்னைப் பத்தியும் அம்மாகிட்ட தப்பா சொல்லிட்டாங்க. என்னைக் கட்சியில் இணைச்சுக்கச் சொல்லி பலமுறை மனு கொடுத்திருக்கேன். இருபது முறை தலைமைச் செயலகம், மூன்று முறை போயஸ் கார்டன்னு போய், அம்மாவைப் பார்க்க முயற்சி செஞ்சேன். அம்மா கொடநாட்டில் தங்கியிருந்தப்ப ஒரு வாரமா தினமும் கொடநாடு போனேன். கூப்பிடுவாங்கனு காத்திருந்தேன். மெயில் அனுப்பினேன். முதல்வரின் பெர்சனல் செகரெட்டரி பூங்குன்றனை நேரில் சந்திச்சு கட்சியில் சேர விரும்புறதைச் சொன்னேன். ஆனா, இதெல்லாம் அம்மா காதுக்குப் போச்சானு தெரியலை. என்னைக் கட்சியில் சேர்த்துப்பாங்கனு ரொம்ப நம்பினேன். சேர்த்துக்காமப் போனது ஏமாற்றம்தான்.''

''தி.மு.க-வுக்குப் பெரிய அளவுக்கு நிதி உதவி செஞ்சிருக்கீங்களே..?''

(கேள்வியை முடிக்கும் முன்னர் இடையில் குறுக்கிட்டு) ''அ.தி.மு.க-வுக்கும்தான் செஞ்சிருக்கோம். எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கோ, அவங்களோட தொழில் அதிபர்கள் இணக்கமா இருக்கிறது யதார்த்தம்தான். அப்படித்தான் நாங்க இருந்தோம். அ.தி.மு.க-வுக்கும் நாங்க நிதி கொடுத்திருக்கோம். எந்த அரசு வந்தாலும் தொழில் அதிபர்கள் அவர்களைச் சார்ந்துதான் இருக்க வேண்டியிருக்கு.''

''மார்ட்டின் இப்போ எங்கே இருக்கார்?''

''ஜெயிலில் இருந்து வந்த உடனே, அவர் வெளிநாடு போயிட்டார். இந்தியா வர்றதே இல்லை. வந்தாலும் கொல்கத்தாவுக்கு மட்டும்தான் வர்றார். தமிழ்நாட்டுக்கு வருவது இல்லை. வழக்கு, கைது பிரச்னைகள் எல்லாம் தீர்ந்தால்தான் அவர் வருவார். எங்க மேல் தொடர்ந்த வழக்குகள் எல்லாமே பொய் வழக்குகள். எல்லா வழக்கையும் சட்டப்படி சந்திப்போம். போலீஸ் அதிகாரிகள் எங்களை மிரட்டிப் பணம் பறிச்சாங்க. அது தொடர்பாக நாங்க சொல்றதை யாரும் கேட்பதே இல்லை. அரசு என்ன சொல்லுதோ, அதைத்தான் எல்லோரும் கேட்கிறார்கள்.''

- ச.ஜெ.ரவி

படம்: த.சித்தார்த்