பரஞ்சோதியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட காரணமாக இருந்த டாக்டர் ராணி, உலக மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி, தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் பரவ... திருச்சியில் பரபரப்பு!

டாக்டர் ராணியிடம் பேசினோம். ''என்னை ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, ஒன்றரை வருடமாக காவல் நிலையம், கோர்ட் என அலைகிறேன். வழக்கில் ஒரு முன்னேற்றமும் இல்லை. அதனால், கடுமையான மன உளைச்சலிலும், உடல் நலப் பாதிப்பிலும் இருக்கிறேன். இந்தச் சூழ்நிலையில் என்னைப் பற்றி வதந்திகளைப் பரப்பிவிட்டு, என்னை மேலும் மன நெருக்கடிக்கு ஆளாக்குகின்றனர்'' என்று நொந்துகொண்டவர், தொடர்ந்தார்....

''பரஞ்சோதியிடம் விசாரிக்க போலீஸார் தயங்குகிறார்கள். இந்த வழக்கின் புகார்தாரரான நான், போலீஸ் விசாரணை, கோர்ட், கேஸ் என அலைகிறேன். தவறு செய்த அவர் கவலை இல்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கிறார்.

போலீஸிடம் நான் கொடுத்துள்ள மிக முக்கியமான ஆதாரம், அவர் எனக்கு கைப்பட எழுதிக்கொடுத்த பத்திரங்கள். அவற்றைக் கையெழுத்துப் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பியது போலீஸ். அவரை நீதிமன்றத்துக்கு அழைத்து ஸ்பெசிமென் கையெழுத்து பெற வேண்டும்; அவர் தேர்தல் ஆணையத்திடம் அதிகாரபூர்வமாக எழுதிக்கொடுத்த உறுதிமொழி பத்திர நகல்களையும் இணைத்து கையெழுத்துப் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்றெல்லாம் போலீஸாரிடம் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை போலீஸார் சட்டைசெய்யவில்லை. கடந்த முறை எம்.எல்.ஏ-வாக இருந்தபோது, தனியார் மருத்துவமனையில் வேலை வழங்கக் கோரி பரஞ்சோதி, ஒரு நபருக்குக் கொடுத்த சிபாரிசுக் கடிதத்தை, கையெழுத்து ஒப்பீட்டுச் சோதனைக்காக அனுப்பியுள்ளது.

'பொதுவாக சிபாரிசுக் கடிதங்களை உதவியாளர்களே எழுத, கையெழுத்து மட்டும் போட்டுக்கொடுப்பது வழக்கம். இதுபோன்ற கடிதங்களில் போடும் கையெழுத்துகூட மாறுபட்டிருக்கும். அதனால், இது மாதிரியான கடிதங்களை ஒப்பீட்டுக்கு ஆதாரமாகப் பயன்படுத்தக் கூடாது’ என்று சொல்லியும், போலீஸ் கேட்கவில்லை. கையெழுத்துப் பரிசோதனை முடிவு எனக்குப் பாதகமாக வந்தால், அதை வைத்து நான் சொல்லும் அனைத்துப் புகார்களும் பொய் என, வழக்கை முடிவுக்குக் கொண்டுவர ஏற்பாடு நடப்பதாக சந்தேகப்படுகிறேன்.

இதையெல்லாம்விட, காவல் துறையை வைத்து ஒரு சூழ்ச்சி நடத்தி என்னைக் களங்கப்படுத்தவும் பரஞ்சோதி திட்டமிட்டு இருப்பதாக எனக்குத் தகவல் வந்துள்ளது. நான் வெளியிடங்களுக்குச் செல்லும்போது, எனது காரில் கஞ்சா பொட்டலம் வைத்து, கடத்தல் கேஸ் போட திட்டம் வைத்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட நான் அடிக்கடி கோயில்களுக்குச் செல்வேன். வெளியூர்களில் உள்ள கோயில்களுக்குச் செல்லும்போது, நான் எங்கே தங்குகிறேன் என்பதைக் கவனித்து, போலீஸ் மூலம் என் மீது விபசார வழக்கு போடவும் துணிந்துவிட்டதாகவும் தெரிகிறது. இதனால் நான் வெளியூர் கோயில்களுக்கு இப்போது செல்வது இல்லை. நீதிக்காகப் போராடியே நான் பைத்தியமாகிவிடுவேன் என்று நினைக்கிறேன்'' என்றார் கண்ணீருடன்.

இதுகுறித்து விளக்கம் கேட்க பரஞ்சோதியைச் சந்திக்க முயற்சித்தோம். முடியவில்லை. செல்போனில் அழைத்தபோதும், அழைப்பை ஏற்கவில்லை.

வழக்கை விசாரித்துவரும் ஸ்ரீரங்கம் போலீஸ் உதவிக் கமிஷனர் ஜெயச்சந்திரன், '' இந்த வழக்கு விசாரணை தொடர்பாக என்னை யாரும் நிர்ப்பந்திக்கவில்லை. எம்.எல்.ஏ. பரஞ்சோதியிடம் விசாரணை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. டாக்டர் ராணியை மிரட்டியவர்கள் பற்றிய புகாரையும் விசாரித்து வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

டாக்டர் ராணிக்கு நீதி கிடைப்பது எப்போது?

- அ.சாதிக் பாட்ஷா