Published:Updated:

'எட்டாம் வகுப்பு எப்போ படிச்சாரு?'

சிக்கலில் சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. கந்தன்!

'எட்டாம் வகுப்பு எப்போ படிச்சாரு?'

சிக்கலில் சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. கந்தன்!

Published:Updated:
##~##
'எட்டாம் வகுப்பு எப்போ படிச்சாரு?'

''புதுச்சேரியில் கல்வி அமைச்சராக இருந்த கல்யாணசுந்தரம், பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியபோது ஆள்மாறாட்டம் செய்ததை எல்லோரும் பெருசாப் பேசினாங்க. சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கந்தன் மூன்றாம் வகுப்பே முழுசாப் படிக்காதவர். ஆனா, எட்டாம் வகுப்பு பாஸாகிட்டதாக போலிச் சான்றிதழ் கொடுத்து தேர்தலில் நின்றிருக்​கிறார். இதை நீங்கதான் வெளியில் கொண்டு​வரணும்'' - ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044 -66802929) இப்படி ஒரு குரல் பதிவாகி இருந்தது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்குத் தகவல் சொன்ன வழக்கறி​ஞர் ரமேஷ் மணிகண்டனைச் சந்தித்தோம். ''ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வாக இருக்கும் கே.பி.கந்தன் படித்தது மூன்றாம் வகுப்புதான். ஆனால், அவர் கொடுத்த போலிச் சான்றிதழின் விவரத்தை உங்களுக்கு ஆதாரங்களுடன் தருகிறேன். புனித தோமையார் மலைப் பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளி என்று

'எட்டாம் வகுப்பு எப்போ படிச்சாரு?'

சீல் வைக்கப்பட்ட இந்தச் சான்றிதழில் கே.பி.கந்தனின் துவக்கப் பள்ளி படிப்பு குறித்த விவரம் இருந்தது. 1970 முதல் 73 வரை அந்தப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே அங்கு படித்துள்ளார். அதுவும் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி அடையவில்லை. மீண்டும் அதே வகுப்பில் படித்தவர் படிப்பைத் தொடராமல், 1973-ம் ஆண்டிலேயே இடைநிறுத்தம் செய்ததாக இருக்கிறது.

செங்கல்பட்டு புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளி வழங்கிய சான்றிதழ் இது. சேர்க்கை எண் 408 என்று குறிப்பிடப்பட்ட அந்தச் சான்றிதழில் ஜூன் மாதம் 1974-ம் ஆண்டு இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் கே.பி.கந்தன் சேர்க்கப்பட்டதாகவும், 29-4.1977 அன்று எட்டாம் வகுப்பு தேறிய நிலையில் அவர் பள்ளியைவிட்டுச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்​கழகத்தில் பி.ஏ. அரசியல் படிப்பு பயில அவர் 23-03-2009 தேதியில் அனுப்பிய விண்ணப்பத்தில், கல்வி 8-ம் வகுப்பு பெயில் என்றும், 2009-ம் ஆண்டு பிரைவேட்டாகப்

'எட்டாம் வகுப்பு எப்போ படிச்சாரு?'

படித்த​தாகவும் அவரே கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளார். சட்டமன்றத்

'எட்டாம் வகுப்பு எப்போ படிச்சாரு?'

தேர்தலில் மனுத்தாக்கல் செய்தபோது 8-ம் வகுப்பு என்றும் 2008-ம் ஆண்டு படித்ததாகவும் குறிப்பிட்​டுள்ளார். இதில் எது சரி? உண்மையில் அவரது கல்வித் தகுதி என்ன?

இவர் ஏற்கெனவே பெருங்குடி பேரூராட்சித் தலைவராக இருந்தபோதே கல்விச் சான்றிதழில் தவறு நடந்திருப்பதாக போலீஸில் புகார் செய்தேன். அப்போது இருந்தே போலீஸ் விசாரணை மந்தமாகத்தான் நடக்கிறது. இப்போது மீண்டும் டி.ஜி.பி-யிடம் புகார் கொடுத்துள்ளேன்'' என்று, அத்தனை சான்றிதழ் ஆதாரங்களையும் நம்மிடம் கொடுத்தார்.

கந்தன்,  எட்டாம் வகுப்பு படித்ததாகச் சான்றிதழ் கொடுத்த செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஜேசுராஜை சந்தித்தோம். நாம் காட்டிய சான்றிதழ் நகலைப் பார்த்தவர், ''இந்தச் சான்றிதழில் வரிசை எண் மற்றும் சேர்க்கை எண் ஆகியவை எங்கள் பள்ளியில் கொடுத்த எண் இல்லை. பள்ளி முத்திரையில் செங்கல்​பட்டு அஞ்சல் குறியீட்டு எண் 60300 என்ற ஐந்து இலக்க எண் இருக்கிறது. இது செங்கல்​பட்டு அஞ்சல்

'எட்டாம் வகுப்பு எப்போ படிச்சாரு?'

எண்ணும் கிடையாது. சான்றிதழ் கொடுத்த 1977-ம் ஆண்டு எந்தப் பள்ளியிலும் பன்னிரெண்டாம் வகுப்பு இல்லை. அப்போது இருந்தத் தலைமை ஆசிரியர் கையெழுத்தும் இது இல்லை. இது உறுதியாகப் போலிச் சான்றிதழ்தான். எங்கள் பள்ளியில் இப்படி ஒரு சான்றிதழ் வழங்க​வில்லை. எங்கள் பள்ளிக்கும் இந்தச் சான்றிதழுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது'' என்று மறுத்தார்.

சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. கே.பி.கந்தனை நேரில் சந்தித்தோம். அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை வரிசைப்​படுத்தினோம். ''நான் 20 வருடங்களுக்கும் மேலாக அ.தி.மு.க-வில் இருக்கிறேன். அம்மாவின் ஆசியால் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறேன். மூன்று முறை பெருங்குடி பேரூராட்சித் தலைவராக இருந்துவிட்டு இப்போதுதான் எம்.எல்.ஏ-வாகி இருக்கிறேன். நான் எட்டாம் கிளாஸ் பிரைவேட்டாகத்தான் படித்தேன். செங்கல்பட்டு பள்ளி வழங்கியதாக இருக்கும் சான்றிதழ் என்னுடையது இல்லை. என் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த யாரோ திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள்'' என்று மறுத்தார்.

தன் மீது தவறு இல்லை என்றால், அதை நிரூபிக்கும் பொறுப்பு மக்கள் பிரதிநிதிக்கு இருக்கிறது.

- நமது நிருபர்கள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism