Published:Updated:

யாரைப் பத்தியும் எனக்கு கவலை இல்லை!

தடாலடி அமைச்சர்

யாரைப் பத்தியும் எனக்கு கவலை இல்லை!

தடாலடி அமைச்சர்

Published:Updated:
##~##
யாரைப் பத்தியும் எனக்கு கவலை இல்லை!

சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடக்கும் நேரத்தில், அந்தத் துறையின் அமைச்சரான எம்.சி.சம்பத் மீது அவரது தொகுதியில் இருந்தே புகார். அ.தி.மு.க-வில் உள்ள முக்கியப் புள்ளிகளில் சிலர் கோட்டைக்கு அனுப்பி இருக்கும் புகாரால் ஆடிப்போயிருக்கிறார் அமைச்சர் சம்பத். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புகார் அனுப்பியவர்களில் ஒருவரான கடலூர் மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் பாசறை உறுப்பின​ரான சேகரிடம் பேசி​னோம். ''சம்பத்துக்கு அமைச்சர் பதவி அறிவிச்சதும் மாவட்டம் முழுக்கப் பட்டாசு வெடித்துக் கொண்டாடினோம். பதவி வந்ததும் சம்பத் நடவடிக்கைகள் மாறிடுச்சு. இப்போ அவரைக் கட்சிக்காரங்க பார்க்கப் போனால், நாயை விரட்டுவதைப் போல அவர்கூட இருக்கும் ஆட்கள் விரட்டுறாங்க. அதையும் மீறி அமைச்சரைப் பார்த்தாலும், 'எனக்கு யாரைப் பத்தியும் கவலை இல்லை... நீ யார்கிட்ட வேணும்​னாலும் சொல்லிக்கோ’னு அலட்சியமாப் பேசுறார்.

சமீபத்தில், கடலூர் மாவட்டக் கூட்டுறவு வங்கிகளில் விற்பனைப் பிரிவில் தி.மு.க., பா.ம.க.,

யாரைப் பத்தியும் எனக்கு கவலை இல்லை!

விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவங்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார். எங்க கட்சியைச் சேர்ந்தவங்க யாருக்கும் வேலை கிடைக்​கலை. கடலூர் மாவட்டத்தில் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் அத்தனை பேரும் சம்பத் மீது

அதிருப்தியில்தான் இருக்காங்க. அவரைக் கவனித்தால், கடலூர் மாவட்டத்தில் எந்தப் பதவியும் வாங்கலாம் என்பதுதான் சம்பத் உருவாக்கிவைத்திருக்கும் நிலை. இதைத்​தான் நாங்கள் புகாராக அம்மாவுக்கு அனுப்பியிருக்கிறோம்'' என்றார்.

பண்ருட்டி நகர அம்மா பேரவைச் செயலாள​ரான ஹரிகிருஷ்ணன் நம்மிடம், ''அமைச்சர் மீது தனிப்பட்ட பகையோ, பொறாமையோ எங்களுக்குக் கிடையாது. அவரது சமீபகால நடவடிக்கைகள் அனைத்தும் மோசமாக இருப்பதுதான் வேதனைக்குரியது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கட்சிப் பதவியை விற்பனை செய்திருக்கிறார். குறிஞ்சிப்பாடி அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர் பதவியை குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆலப்பாக்கம் வீரமணி என்பவருக்கு கொடுத்து இருக்கிறார். செல்வம் என்பவரை பேரவைச் செயலாளராக நியமித்துள்ளார். அவர் புதுச்சேரியில் எந்தக் கடையில் வேலை பார்க்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். பண்ருட்டி நகர அ.தி.மு.க.

யாரைப் பத்தியும் எனக்கு கவலை இல்லை!

செயலாளராக இருந்தவர் ரவிச்சந்திரன். இவர் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அந்தப் பதவியை தன்னுடைய உறவினர் தாடி முருகனுக்குக் கொடுத்திருக்கிறார். இந்தத் தாடி முருகன் காங்கிரஸ்காரர் என்பது ஊருக்கே தெரியும். இதே நிலைமை தொடர்ந்தால், எங்கள் கட்சியை அழிக்க வேறு யாரும் தேவை இல்லை... அமைச்சர் சம்பத்தே போதும். அத்தனையும் ஆதாரங்களுடன் அம்மாவுக்கு அனுப்பிவிட்டோம். அவர்தான் நடவடிக்கை எடுத்து கட்சியைக் காப்பாற்ற வேண்டும். இப்படியே போனால், உண்மையான தொண்​டன் யாரும் இயக்கத்தில் இருக்க மாட்டான்'' என்று வெம்பினார்.

இதுகுறித்து அமைச்சர் சம்பத்தி​டம் விளக்கம் கேட்க முயன்றோம். அவர் தொடர்ந்து பிஸியாக இருப்பதாகவே சொல்லப்பட்டது. அவர் சார்பாக பேசிய அவருடைய பி.ஏ-வான சீனிவாசன், ''அமைச்சர் மீது குறை சொல்லும் ஆட்களுக்கே கூட்டுறவுத் துறையில் 16 ஸீட்களை அமைச்சர் பெற்று தந்திருக்கிறார். பணம் வாங்கிக்கொண்டு போஸ்டிங் போடும் அவசியம் அவருக்கு கிடையாது. வேறு யாராவது கட்சிக்காரர்கள் பணம் வாங்கியிருக்கலாம். அமைச்சருக்கு வேண்டப்பட்ட சிலருக்குப் பதவி கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுவதும் தவறான குற்றச்சாட்டுகள்தான். யாருக்குப் பதவி தர வேண்டும் என்பதை அம்மாதான் முடிவெடுக்கிறாரே தவிர, அந்த அதிகாரம் அமைச்சருக்குக் கிடையாது. அவர் அமைச்சராவதற்கு முன்பும் சரி, இப்போதும் சரி... எல்லோருக்கும் மரியாதை கொடுத்துதான் பழகி வருகிறார். யாரையும் மரியாதைக் குறைவாக நடத்துவது இல்லை. அவரைச் சுற்றி இருப்பவர்களும் அப்படித்தான்'' என்று பதிலளித்தார்.

என்ன செய்யப்போகிறார் ஜெயலலிதா?

- க.பூபாலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism