Published:Updated:

பிச்சைக்குத் தடா!

கும்பகோணம் அதிரடி

பிச்சைக்குத் தடா!

கும்பகோணம் அதிரடி

Published:Updated:
##~##
பிச்சைக்குத் தடா!

கோயில் நகரமான கும்பகோணத்தில் பிச்சை எடுக்கத் தடை விதித்து நகராட்சி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இந்த அதிரடி முடிவு குறித்து பிச்சைக்காரர்கள் மற்றும் பொதுமக்களின் ரியாக்ஷனை அறிய நகரை வலம் வந்தோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிச்சை எடுக்கும் சீதா, ''எனக்கு சொந்த ஊர் மன்னார்​குடிப் பக்கம். இங்கே 15 வருஷமா பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கேன். எங்க ஊரில் கிடைச்ச வருமானத்தைவிட இங்கே ரொம்ப அதிகமாக் கிடைக்குது. இப்போ திடீர்னு பிச்சை எடுக்கக் கூடாதுன்னு சொன்னா, என்னதான் செய்யுறது சொல்லுங்க சாமி. கும்பகோணம் மாதிரி இன்னொரு ஊருக்குப் போய், சோலியைப் (பிச்சை எடுப்பது) பார்க்க வேண்டியதுதான்'' என்றார் வருத்தமாக.

பிச்சை எடுக்கும் ராதிகா, ''எனக்கு சொந்த ஊர் நன்னிலம். இந்த ஊரில்தான் எட்டு வருஷமா பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கேன். என்னோட புள்ளைங்க எல்லாம் என்னை விரட்டிவிட்டுட்டாங்க. அதான் இப்போ இந்தப் பொழைப்பைப் பார்க்குறேன். இந்தப் பொழைப்புல உள்ள சுதந்திரம் வேறு எதிலேயும்

பிச்சைக்குத் தடா!

கிடையாது. எங்களுக்கு வேலையும் சாப்பாடும் கொடுத்தாக்கூட வேண்டாம். நாங்க எங்க வழியில் சந்தோஷமா, சுதந்திரமா, நிம்மதியா இருந்துக்கிறோம். நாங்க இந்த வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் செய்ய விரும்பலை'' என்றார் திட்டவட்டமாக.

பிச்சைக்காரர்கள் பற்றி பொதுமக்களில் ஒருவரான விஜயகுமாரிடம் கேட்டபோது, ''பொதுவா பிச்சைக்காரங்கன்னா இல்லாத​வங்கனு சொல்லுவாங்க. ஆனா, இப்போ பிச்சைக்காரங்களுக்குத்தான் நல்ல வருமானம் கிடைக்குது. சின்ன வயசுப் பசங்க எல்லாம் இப்போ சர்வசாதாரணமா பிச்சை எடுக்குறாங்க. ஒரு ரூபா, ரெண்டு ரூபா எல்லாம் குடுத்தா வாங்க மாட்டேங்கிறாங்க. குறைஞ்சது அஞ்சு ரூபாய் குடுத்தாதான், நம்மளைத் திட்டாமப் போறாங்க. பிச்சை போடாம, 'ஏண்டா தம்பி பிச்சை எல்லாம் எடுக்குற?’னு அட்வைஸ் பண்ணா, 'காசு குடுக்குறதுன்னா குடு... இல்லன்னா, உன் வேலையைப் பாரு’னு நமக்கே அட்வைஸ் பண்றாங்க. இதில் இன்னொரு புது ஸ்டைல், காசு கொடுக்கலைன்னா காலில் விழுந்துடறது; காசு கொடுக்கிற வரை எந்திரிக்கிறது கிடையாது. இப்படி தொல்லை தாங்காம, பலர் அவங்களுக்குக் காசு குடுத்துடுறாங்க. கும்பகோணத்தில் பிச்சை எடுக்கத் தடை விதிச்சது ரொம்ப சரி. ஆனா, அவங்களுக்கு ஏதாவது மாற்று வழி செஞ்சதுக்குப் பிறகு இந்தத் தடையை அமல்படுத்தினா, இன்னும் நல்லா இருக்கும்'' என்றார்.

பிச்சைக்குத் தடா!

வழக்கறிஞர் ரஜினிகாந்த், ''பிச்சைக்காரர்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்யாத வரை, அவர்கள் பிச்சை எடுப்பதை நிறுத்த மாட்டார்கள். அவர்களின் உணவுக்கு உத்தரவாதம் தரும் வகையில், முதலமைச்சரின் ஒரு ரூபாய் இட்லித் திட்டத்தை கும்பகோணத்தில் செயல்படுத்தலாம். சட்டப்படி, ஒரு இந்தியனை பிச்சை எடுக்கத் தடை விதிக்க முடியாது. ஆகையால், பிச்சைக்காரர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றுதான் அறிவிப்பே இருக்க வேண்டும்'' என்றார்.

கும்பகோணம் நகராட்சி ஆணையர் கலைச்செல்வனிடம் பேசினோம். ''கும்பகோணத்தில் பிச்சை எடுக்கத் தடை என்பது இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. அதுபற்றி விவாதித்து வருகிறோம். இந்தத் தடையை அமல்படுத்தும்போது பிச்சைக்காரர்களுக்கு சரியான மாற்று ஏற்பாடுகளை செய்துதர, அரசு சாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவிகளைக் கேட்டிருக்கிறோம். இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன், பிச்சைக்காரர்கள் குறித்த கணக்கெடுப்பை எடுக்கச் சொல்லி இருக்கிறோம். அவர்களின் வருமானம், வசிப்பிடம், ஊனம் போன்றவற்றை கணக்கில்கொண்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க இருக்கிறோம். பிச்சைக்காரர்களை ஒழிப்பது அல்ல, பிச்சையை ஒழிப்பதே எங்கள் நோக்கம்'' என்றார் விரிவாக.

நல்ல முயற்சி!

- மு.சா.கௌதமன்

படங்கள்: செ.சிவபாலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism