Published:Updated:

பரிதாப ஈ.மு... பரிதவிக்கும் மக்கள்!

நடவடிக்கை எடுப்பாரா நாமக்கல் கலெக்டர்?

பரிதாப ஈ.மு... பரிதவிக்கும் மக்கள்!

நடவடிக்கை எடுப்பாரா நாமக்கல் கலெக்டர்?

Published:Updated:
##~##
பரிதாப ஈ.மு... பரிதவிக்கும் மக்கள்!

மு முதலீட்டுப் பிரச்னை இன்னமும் ஓயவில்லை. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஈரோடு மாவட்டத்துக்கு அடுத்தபடி​யாக ஈமு பண்ணையால் ஏமாந்திருப்பது சேலம், நாமக்கல் மாவட்ட மக்கள்தான். நாமக்கல்லில் செயல்பட்டு வந்த செல்லம் ஈமு ஃபார்ம்ஸில் முதலீடுசெய்த 876 பேர், செலுத்திய பணம் திரும்ப வருமா என்று பரிதவிக்கிறார்கள்.

ஜலகண்டபுரத்தைச் சேர்ந்த செல்லதுரை, ''நாமக்கல்லில் செல்லம் ஈமு ஃபார்ம்ஸ்  விளம்​பரத்தைப் பார்த்தேன். அதன்  ஓனர் சிவக்குமாரை சந்தித்தேன். அவர் 'எங்க ஈமு ஃபார்ம்ஸுல பண்ணைத் திட்டம், வி.ஐ.பி. ஸ்கீம் என இரண்டு ஸ்கீம் இருக்கு. பண்ணைத் திட்டம் என்றால் முன்பணம் 1.60 லட்சம் கட்டணும். ஆறு கோழி தருவோம். பண்ணை அமைத்துக் கொடுப்போம். தீவனமும் நாங்களே கொடுப்போம். அதில்லாமல் மாதம் 12 ஆயிரம் ரூபாய்

பரிதாப ஈ.மு... பரிதவிக்கும் மக்கள்!

வீதம் ஒரு வருடத்​துக்குக் கொடுப்போம். வருட இறுதியில் நீங்கள் செலுத்திய முன்பணத்தைத் திருப்பிக் கொடுத்து​விடுவோம்.

வி.ஐ.பி. திட்டம் என்றால் முன்பணம் 1.60 செலுத்திவிட்டால் போதும், நாங்களே உங்கள் கோழியை வளர்ப்போம். மாதம் 14 ஆயிரம் கொடுப்போம். வருட இறுதியில் நீங்கள் கட்டிய முன்பணத்தை உங்களிடமே திரும்​பிக் கொடுத்துவிடுவோம்’ என்றார். அதை நம்பி நானும் பண்ணைத் திட்டத்தில் எட்டு லட்சம் கட்டி 30 கோழிகளை வாங்கினேன். ஃபார்ம் போட்டுக் கொடுத்தாங்க. தீவனமும் மாதக் கூலியும் அஞ்சு மாசம் கொடுத்தாங்க. அதற்குப் பிறகு தீவனமும் கொடுக்கலை. பணமும் கொடுக்கலை. கேட்கப்போனால் வட நாட்டுக் காவலாளிகளைவைத்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டுறாங்க. 'சி.எம்-கிட்டயே நான் நேராப் பேசக்கூடியவன். என்​கிட்டயே பணம் கேட்கும் அளவுக்கு உங்களுக்குத் தைரியம் வந்து​டுச்சா?’னு சிவக்குமார் திமிராப் பேசுறார். போலீ​ஸும் ஒழுங்கான நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்க ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுத்தால், அடுத்த நிமிடமே சிவக்குமாருக்குத் தகவல் சொல்லிவிடுகிறார்கள். சிவக்குமார் எங்களுக்கு போன் செய்து மிரட்டுகிறார்'' என்றார்.

பரிதாப ஈ.மு... பரிதவிக்கும் மக்கள்!
பரிதாப ஈ.மு... பரிதவிக்கும் மக்கள்!

அதே ஊரைச் சேர்ந்த பூங்கோதை, ''எங்க வீட்டுக்காரர் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தில்தான் மூணு லட்சம் கட்டி வி.ஐ.பி. ஸ்கீம்ல சேர்ந்தோம். மூணு மாசம் பணம் கொடுத்தாங்க. அதற்குப் பிறகு பணம் கொடுக்கலை. முதலீட்டாளர்கள் சுமார் 100 பேர் போய் ஈமு ஃபார்ம்ஸை முற்றுகையிட்டோம். 30 நாட்களில் உங்க பணத்தைக் கொடுத்துடறேன்னு சொன்னார். நாங்களும் திரும்பி வந்துட்டோம். 30 நாள் கழிச்சுப்போய் கேட்கும்போது, 'எல்லோருக்கும் செக் கொடுக்கிறேன். நான் கொடுத்த ஒப்பந்தப் பத்திரத்தைத் திருப்பிக் கொடுங்க’ என்றார். நாங்களும் ஒப்பந்தப் பத்திரத்தைத் திருப்பிக் கொடுத்துட்டோம். அவருடைய பஸ் கம்பெனி மேனேஜர் கனகராஜ் பெயரில் நாங்க கட்டிய முன்பணத்துக்கான செக்கைக் கொடுத்தார். அதை பேங்கில் கொடுத்தால் இது போலி செக்னு சொல்றாங்க. நாமக்கல் டவுன் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்​போனால், விரட்டி அடிக்கிறார்கள். பொருளாதாரக் குற்றப் பிரிவிலும் எங்க புகாரை வாங்க மறுக்கிறாங்க.'' என்றார்.

செக் கொடுத்த கனகராஜிடம் கேட்டோம். ''சிவக்குமார் பஸ் கம்பெனியில் மேனேஜரா வேலை பார்த்தேன். பஸ்ல கலெக்ஷன் ஆகும் பணத்தைப் போட்டுவைக்க என்னுடைய பெயரில் பேங்கில் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணச் சொன்னார். நானும் ஓப்பன் பண்ணினேன். மற்றபடி செக்கில் நான் கையெழுத்து போட்டுக்கொடுக்கவில்லை. நானும் மோகனூர் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருக்கிறேன். எனக்கே சிவக்குமார் இரண்டு மாதமா சம்பளம் கொடுக்கவில்லை'' என்றார்.

பரிதாப ஈ.மு... பரிதவிக்கும் மக்கள்!

இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி, ''என்னிடம் கொடுக்கப்பட்ட புகார்​களைப் பதிவுசெய்து விசாரித்துவருகிறேன். நான் யாரையும் மிரட்டவில்லை'' என்றார் சுருக்கமாக.

செல்லம் ஈமு ஃபார்ம்ஸ் சிவக்குமாரிடம் பலமுறை தொடர்புகொண்டும் பேசமுடியவில்லை. அவர் தலைமறைவாக இருப்​பதாகச் சொல்கிறார்கள்.

நாமக்கல் கலெக்டர் ஜெகநாதன், ''இந்தப் பிரச்னை என் கவனத்துக்கு வரவில்லை. தவறு நடந்திருக்கும்பட்சத்தில் செல்லம் ஈமு ஃபார்ம்ஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

சீக்கிரம் சார்!

- வீ.கே.ரமேஷ், படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism