Published:Updated:

வெளிவரும் பெண் தொடர்புகள்... காணாமல்போன அரசு டிரைவர்...

நடுநடுங்கும் விருதுநகர் அதிகாரிகள்

வெளிவரும் பெண் தொடர்புகள்... காணாமல்போன அரசு டிரைவர்...

நடுநடுங்கும் விருதுநகர் அதிகாரிகள்

Published:Updated:
##~##

ரசு கார் டிரைவர் ஒருவர் காணாமல்​போன விவகாரத்தில், வெளிவரும் தகவல்கள் மாவட்டத்தையே அதிர​வைக்கிறது. 

விருதுநகர், இந்திரா நகரைச் சேர்ந்தவர் 46 வயதான மனோகரன். விருதுநகர் டி.ஆர்.ஓ-வின் டிரைவராக இருந்த இவர், கடந்த மார்ச் 13-ம் தேதி திடீரென மாயமாகிவிட்டார். விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் அவருடைய மனைவி திருச்செல்வி புகார் செய்யவும், மனோகரனின் செல்போன் அழைப்புகளை போலீஸார் அலசினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனோகரன் காணாமல்போவதற்கு முன், கடைசியாக ஒரு எண்ணுக்குப் பேசியிருந்தார். அது அவரது வீட்டுக்கு அருகில் உள்ள ஆறுமுகத்தின் மனைவியின் எண். ஆறுமுகத்தை அழைத்த போலீஸார், 'உன் மனைவியின் செல்போனுக்குத்தான் மனோகரன் அடிக்கடி பேசியிருக்கிறார். உங்கள் குடும்பத்துக்கும் டிரைவர் மனோகரனுக்கும் என்ன மாதிரியான பழக்கம்?’ என்று விசாரித்தனர். அதோடு, 'உன் மனைவியிடமும் நாங்கள் விசாரிக்க வேண்டும்’ என்று சொல்லி அனுப்பியிருக்கின்றனர். அவமானத்தால் மனம் உடைந்த ஆறுமுகம், தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தார். இரண்டு குழந்தைகளையும் தாத்தா வீட்டுக்கு அனுப்பிவிட்டு, இருவரும் விஷம் குடித்து இறந்தனர்.

வெளிவரும் பெண் தொடர்புகள்... காணாமல்போன அரசு டிரைவர்...

அதுவரை 'மேன் மிஸ்ஸிங்’ வழக்கு என்று நினைத்த போலீஸாருக்கு, இருவரின் தற்கொலை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனோகரனின் செல்போன் தொடர்புகளை போலீஸார் மேலும் தீவிரமாக ஆராய்ந்தனர். கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட செல்போன் எண்களுக்கு மனோகரன் அடிக்கடி பேசியிருந்தார். அந்த எண்களைத் தொடர்புகொண்டபோது, பெரும்பாலும் அவை பெண்கள் நம்பர்தான் எனத் தெரியவந்தது. கலெக்டர் அலுவலகத்துக்கு குறை தீர்க்கும் நாளில் மனுகொடுக்க வந்த பெண்கள்தான் அதில் அதிகம்.

வெளிவரும் பெண் தொடர்புகள்... காணாமல்போன அரசு டிரைவர்...

அருப்புக்கோட்டையில் அரசு விடுதியில் பணியாற்றும் பெண் ஒருவரை போலீஸார் தொடர்புகொண்டு, 'மனோகரனுக்கும் உங்களுக்கும் எப்படிப் பழக்கம்?’ என்று கேட்டார்களாம். 'கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தேன். அப்போது டிரைவர் மனோகரன் வலியவந்து என்னுடன் பழகினார். நான் கணவரைப் பிரிந்திருப்பது அவருக்கு வசதியாகப் போய்விட்டது. பிறகு, அடிக்கடி வெளியூர்களில் சந்தித்துக்​கொண்டோம்’ என்று விவரமாக சொன்னவர், 'என்னை விட்டுவிடுங்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்தால், தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை’ என்று கதறினாராம்.

மனோரனுடன் தொடர்பில் இருந்த இன்னொரு பெண்ணும், 'கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வரும்போது, உதவிசெய்ய வருவதுபோல் பழகினார். பிறகு, எங்கள் இருவருக்கும் ரொம்பவும்

வெளிவரும் பெண் தொடர்புகள்... காணாமல்போன அரசு டிரைவர்...

நெருக்கம் ஏற்பட்டது. அது மட்டும் இன்றி, சில அதிகாரிகளிடமும் தனிமையில் என்னை அழைத்துச் செல்வார். வயிற்றுப் பிழைப்புக்காக இப்படி எல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது’ என்று சொன்னவர், அதே தற்கொலை மிரட்டலைச் சொல்லி போலீஸாரை மிரட்டினாராம்.

இந்த வழக்கை விசாரித்துவரும் போலீ​ஸாரிடம் பேசினோம். ''மனோகரனுக்குப் பல பெண்களிடம் தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதில் பலர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தவர்கள்தான். அவர்களுக்கு உதவுவதுபோல் பழகி, 'அதிகாரிங்ககிட்டச் சொல்லி அதைச் செஞ்சு தர்றேன்... இதைச் செஞ்சுத் தர்றேன்’ என்று சொல்லி, அந்தப் பெண்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதில் மனோகரனோடு சில அதிகாரிகளும் டிரைவர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கண்டுபிடித்துவிட்டோம்'' என்றனர் வருத்தத்துடன்.

விருதுநகர் எஸ்.பி-யான மகேஸ்வரனிடம் பேசினோம். ''மனோகரன் காணாமல் போனாரா... அல்லது பெண்கள் விவகாரம் தொடர்பாக அவரை ஏதாவது செய்துவிட்டார்களா என்று விசாரித்து வருகிறோம். சமீபத்தில், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மனோகரனின் டூ வீலர் அனாதையாகக் கிடந்ததை போலீஸார் கைப்பற்றியிருக்கிறார்கள். பெண்கள் விஷயம் என்பதால், கவனமாக விசாரித்து வருகிறோம். விரைவில் உண்மை வெளியே வரும்'' என்றார் உறுதியுடன்.

விருதுநகர் டி.ஆர்.ஓ-வான ராஜுவிடம் பேசினோம். ''டிரைவர் மனோகரனின் பெண்​தொ​டர்புகள் பற்றி போலீஸ் விசாரணையில் தெரியவந்ததும், கடும் அதிர்ச்சியடைந்தேன். மனோ​​கரனால் பாதிக்கப்பட்டது தொடர்பாக யாராவது புகார்​செய்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன்'' என்றார்.  

டிரைவர் மனோகரன் வழக்கு விசாரணையில் தங்களைப் பற்றிய விவரங்கள் வெளியேவந்து​விடுமோ என்று பல உயர் அதிகாரிகள் பதைப்பதைப்பில் இருக்​கிறார்கள் என்பதுதான் உண்மை!

- எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism