பூம்புகார் காவல் நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்திருக்கும் இரட்டைக் கொலை, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கைக் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

நாகை மாவட்டம் பூம்புகார் காவல் நிலையத்தில் கடந்த 19-ம் தேதி நடந்தது இந்தக் கொடூரக் கொலைகள். முத்து.ராஜேந்திரன் என்பவரை கொன்ற வழக்கில், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த இரண்டு பேர்தான் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். ராஜேந்திரன், ரவி ஆகிய இருவரும் பூம்புகார் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வேண்டும். அப்போதுதான் கொலைசெய்யப்பட்டார்கள். ''தி.மு.க-வின் மாவட்டச் செயற்குழு உறுப்பினராக இருக்கும் முத்து.மகேந்திரன் என்பவர், தனது உறவினர்களுடன் சேர்ந்து இந்தக் கொலைகளை அரங்கேற்றி இருக்கிறார்'' என்று சொல்லப்படுகிறது. இவர் முன்பு கொலைசெய்யப்பட்ட முத்து.ராஜேந்திரனின் சகோதரர்.

காவல் நிலைய வாசலில் ஒரு வேட்டியைப் போட்டு மூடிவைக்கப்பட்டிருந்தது ராஜேந்திரனின் சடலம்.

''காலை 10.45 இருக்கும். போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ--யான நடராஜன் இருந்தார். அப்ப கையெழுத்துப் போட வந்த ராஜேந்திரன், எஸ்.ஐ-கிட்ட ஏதோ பேசிட்டு இருந்தார். அப்ப மூணு பைக்குகள் வேகமா வந்து ஸ்டேஷன் வாசலில் நின்னுச்சு. அதில் இருந்து இறங்கினவங்க உள்ளே ஓடினாங்க. ராஜேந்திரனை வெளியில் இழுத்துப்போட்டு, அரிவாளால் வெட்டினாங்க. ரெண்டு நிமிஷத்துக்குள்ள ராஜேந்திரன் உயிர் அடங்கிடுச்சு. ஆனாலும், அவங்க ஆத்திரம் அடங்கலை. வெளியில் கிடந்த பெரிய கல்லைத் தூக்கிட்டு வந்து தலையில் போட்டுச் சிதைச்சாங்க. 'வர்ற வழியில் ரவியையும் போட்டுத்தள்ளிட்டோம். எங்களைக் கைதுசெய்யுங்க’னு சொல்லிட்டு அங்கேயே உட்கார்ந்துட்டாங்க'' என்று லைவ் ரிலே செய்தார் ஸ்பாட்டில் இருந்த ஒருவர்.

இந்தக் கொலைகளுக்குப் பின்னணி என்ன? காவல் துறை நண்பர் ஒருவரிடம் விசாரித்தோம். ''கோ.சி.மணியின் தூரத்து உறவினரான முத்து.ராஜேந்திரன், தி.மு.க-வில் மாவட்ட அளவில் முக்கியமான நபராகவும் தலைமைப் பொதுக் குழு உறுப்பினராகவும் இருந்தார். அவரை சென்ற

ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி ஒரு கும்பல் குண்டு வீசி நிலைகுலையச்செய்து அரிவாளால் வெட்டிக் கொலைசெய்தது. அந்தக் கொலையைச் செய்ததாக கூலிப் படையைச் சேர்ந்த நால்வரையும், கூலிப்படையை ஏற்பாடு செய்த விடுதலைச் சிறுத்தைகள் பொறுப்பாளர்களான ரவி, ராஜேந்திரன், சிவானந்தம் ஆகியோரையும் கைதுசெய்தோம்.

முத்து.ராஜேந்திரனின் தம்பி மகேந்திரன் தலித் மக்களுக்கு விரோதமாக நடக்கிறார் என்று, அவரைக் கொல்லத்தான் அந்தக் கும்பல் வந்தது. தகவல் தெரிந்து மகேந்திரன் தலைமறைவாகிவிட, ராஜேந்திரனைக் கொலை செய்தனர். அந்தக் கொலைக்குப் பிறகு, சீர்காழியில் படிக்கும் முத்து.ராஜேந்திரனின் இன்னொரு தம்பியான தேவேந்திரனின் மகளை யாரோ கடத்த முயற்சித்தனர். அதையும் இவர்கள்தான் செய்தனர் என்று மகேந்திரன் தரப்பினர் முடிவு செய்தனர். நிபந்தனை ஜாமினில் வந்தவர்களை, பூம்புகார் காவல் நிலையத்தில் கையெழுத்துபோடச் சொல்லி உத்தரவிடப்பட்டது மகேந்திரன் தரப்பினருக்கு வசதியாக போய்விட்டது'' என்று விலாவாரியாக சொன்னார்.

வழக்கை விசாரிக்கும் போலீஸாரிடம் மகேந்திரன் தரப்பினர், ''எங்க அண்ணன் முத்து.ராஜேந்திரனைக் கொன்றதையே மறக்க முடியலை. அதுக்கப்புறம் தேவேந்திரன் பெண்ணைக் கடத்தப் பார்த்தாங்க. ஜாமினில் வந்ததுக்கு அப்புறம் தினமும் பணம் கேட்டு மிரட்டினாங்க. இல்லைனா ஒவ்வொருத்தரையா கொலை செய்வோம்னு சொன்னாங்க. நிம்மதியாவே இருக்கவிடலை. அவங்க கையால் சாகுறதுக்குப் பதிலா, அவங்களை வெட்டிட்டு உள்ளே போவோம்னுதான் போட்டுத் தள்ளிட்டோம்'' என்று கூலாகச் சொன்னார்களாம்.

மகேந்திரனின் ஊரைச் சேர்ந்த உறவினர்கள் இருவர், கூட்டாளிகள் இருவர், மதுரையைச் சேர்ந்த உறவினர்கள் மூவர் என்று எட்டுப் பேரைக் கைதுசெய்திருக்கிறது காவல் துறை.

பழிக்குப் பழி தொடராமல் பார்த்துக்கொள்வது முக்கியம்!

- கரு.முத்து