ஒரு காலத்தில் 6,5,00 குடும்பங்களை வாழவைத்த புதுச்சேரி ஏ.எஃப்.டி. பஞ்சாலையை இழுத்து மூடப்போகிறார்கள். காரணம், அதிகாரிகளின் சுரண்டலும் அரசியல்வாதிகளின் அலட்சியமும்தான்!

தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த 1,500 ஊழியர்கள் அனைவரும் 'ஏ.எஃப்.டி ஒருங்கிணைந்த ஊழியர் கூட்டமைப்பு’ என ஒரு கூட்டமைப்பை உருவாக்கி பஞ்சாலையின் வாரியத் தலைவர் பாலனுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

பஞ்சாலையின் இப்போதைய நிலை குறித்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முத்தழகனிடம் பேசினோம். ''1826-ல் இருந்து இந்த ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல் ஆலை இயங்கி வருகிறது. 1986 வரை இது பிரெஞ்சு நிறுவனமாக இருந்தது. அதன் பிறகுதான் இது புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அப்போது பஞ்சாலையின் ஊழியர்கள் எண்ணிக்கை 6,500. பிறகு 94-லிருந்து புதிய ஆட்கள் பணியமர்த்தப்படவில்லை. ஏற்கெனவே பணியிலிருந்த ஊழியர்களும் 60 வயதைக் கடந்து ஓய்வு பெறத் தொடங்கினர். ஆட்களின் எண்ணிக்கை குறைந்ததால், உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் பஞ்சாலையின் தலைமை அதிகாரிகள் கோடிகளில் சுருட்ட ஆரம்பித்தனர்.

கடந்த காலங்களில் பஞ்சாலையைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்திய அரசின் அகவிலைப்படியைப் பெற்று பெரும் பகுதி தொகையைப் பஞ்சாலையின் வருவாயில் இருந்து எடுத்துவிட்டனர். மீதியிருந்த தொகையைக்கொண்டு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கினர். எட்டு மணி நேரம் வியர்வை சிந்தி உழைக்கும் ஊழியர்களுக்கு வெறும் 6,000 ரூபாய் சம்பளம். ஆனால், அதிகாரிகளுக்கோ அகவிலைப்படி, அலவன்ஸ் எனக் கொள்ளை சம்பளம். ஊழியர்கள் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஈ.எஸ்.ஐ., பி.எஃப்., இன்ஷூரன்ஸ் என்று எதையுமே அந்தந்த நிறுவனங்களுக்கு 2001-லிருந்து முறையாக செலுத்தாமல் கிட்டத்தட்ட 110 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது. பஞ்சாலை மேலாண் இயக்குனராக இருந்த பாபு என்ற அதிகாரியும் இதற்கு உடந்தையாக இருந்தார்.

பஞ்சாலையில் நடக்கும் முறைகேடுகளை அப்போதைய காங்கிரஸ் கட்சி முதல்வர் ரங்கசாமி கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்துவிட்டார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் கவலையில்லாமல் இருந்தனர். ஊழல்செய்த அதிகாரியைப் பிடித்து 110 கோடி ரூபாய் பணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை இதுவரை காங்கிரஸ் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் இரு கட்சிகளுமே வலியுறுத்தவில்லை. இதனால் பஞ்சாலை மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்தது. ஆட்சி மாற்றம் வந்தபோது பஞ்சாலைக்குப் புதிய வாரியத் தலைவராக என்.ஆர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாலனை முதல்வர் ரங்கசாமி நியமித்தார்.

பஞ்சாலையை மீண்டும் இயக்குவதற்கு 10 கோடி ரூபாய் வேண்டும் என்ற நிலை ஏற்பட்டபோது, ஊழியர்களின் இரண்டு மாதச் சம்பளத் தொகையான 9 கோடி ரூபாயைக் கொடுத்து பஞ்சாலையை இயக்கினோம். ஒன்றரை மாதங்கள்கூட முழுமையாக இயங்கவில்லை. இப்போது கடந்த 11 மாதங்களாக முழுமையான சம்பளம் தருவது இல்லை. வாரியத் தலைவரை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தினோம். முதல்வர் ரங்கசாமி எதற்குமே செவி சாய்க்கவில்லை. எங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தக்கூட யாரும் முன்வரவில்லை.

எங்களுடைய கோரிக்கை இதுதான். எங்கள் தகுதிக்கு ஏற்ப வேறு ஓர் அரசு வேலையோ, நஷ்டஈடோ வேண்டும். இப்போதைய நிலையில் வீட்டு வாடகை, குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவுகளைக்கூட கட்ட முடியாமல் வாழ்க்கை நடத்தவே திணறுகிறோம்'' என்றார் வேதனையோடு.

பஞ்சாலையின் வாரியத் தலைவர் பாலனிடம் பேசினோம். ''தானே புயலால் 11 மாதங்களாகப் பஞ்சாலை திறக்கப்படாமல் இருந்தது அப்போதுகூட ஊழியர்களுக்கு அகவிலைப்படியோடு முழுச் சம்பளத்தை வழங்கினோம். சோதனை ஓட்டத்தின்போது மூன்றரை லட்சம் மீட்டர் துணியை உற்பத்தி செய்துள்ளோம். ஊழியர்கள் தங்களுடைய இரண்டு மாதச் சம்பளத்தை முதலீடாகப் பஞ்சாலைக்குத் தந்தனர். ஆனால், அரசு அந்தத் தொகையை எங்களுக்கு வழங்கவில்லை. நான் என்.ஆர்.காங்கிரஸின் பொதுச் செயலாளர் என்ற ஒரே காரணத்துக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் மற்றும் மத்திய அமைச்சர் நாராயணசாமி இருவரும் பஞ்சாலையில் பணியாற்றும் 100 ஊழியர்களைக் கையில்வைத்துக்கொண்டு எனக்கு எதிராகப் போராட்டங்களைத் தூண்டி வருகின்றனர். பஞ்சாலை இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதற்குக் காரணம் நாங்களா, காங்கிரஸ் கட்சியா என்று கூடிய விரைவில் தெரியும்'' என்றார் காட்டமாக.

முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம், ''வேலைசெய்த ஊழியர்கள் தங்கள் உழைப்புக்கான கூலியைக் கேட்கின்றனர். இதில் தூண்டிவிடுவதற்கு ஒன்றுமே இல்லை. 2001-லிருந்து புதுச்சேரி முதல்வராக இருந்தவர் ரங்கசாமி. அவர்தான் பாபுவை பஞ்சாலை மேலாண் இயக்குனராகப் பணியமர்த்தினார். முதல்வர் நினைத்தால் இப்போதுகூட அவரைக் கூப்பிட்டு விசாரிக்கலாமே? இப்போதுகூட வாரியத் தலைவர் மனதுவைத்து மத்திய அரசை அணுகினால், உதவி செய்வதற்குத் தயாராக இருக்கின்றனர்'' என்றார் அவர்.

அரசியல் கட்சிகள் ஈகோ பார்க்காமல் ஆலையைத் திறப்பதற்கான பணியில் கவனம் செலுத்த வேண்டும்.

- நா.இளஅறவாழி

படங்கள்: ஜெ.முருகன்