முதல்வரின் அறிவிப்பினால் அதிர்ந்துகிடக்கிறது பெரம்பலூர் பகுதி.

சில தினங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மருதையாற்றின் குறுக்கே ரூ.108 கோடி மதிப்பில் நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என அவர் அறிவித்த திட்டத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளதுதான் பெரம்பலூரின் புதிய 'ஹாட்’.

ஆலத்தூர் தாலுக்காவிலுள்ள கொட்டரை-ஆதனூர் ஆகிய கிராமங்களுக்கிடையே 465 ஏக்கர் நிலப்பரப்பு அளவில் கட்டப்படும் அணையால் பாதிக்கப்படும் கொட்டரை, ஆதனூர், குரும்பா பாளையம் கிராம மக்கள் கடந்த 19-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் இருந்த ஆதனூரை சேர்ந்த ரவி, ''முதல்வரம்மா சட்டமன்றத்தில், 'இந்தப் பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று அணை கட்டப்படும்’னு அறிவிச்சாங்க. நாங்க அப்படி எந்தக் கோரிக்கையும் வைக்கவே இல்லை. 'எங்க ஊருக்கு ஒரு பஸ் விடுங்க. ஆத்துல ஒரு மேம்பாலம் கட்டிக் கொடுங்க’ன்னுதான் மனு கொடுத்தோம். அதை விட்டுட்டு எங்க நிலத்தை எல்லாம் பறித்து அணை கட்டப்போறது எந்தவிதத்தில் நியாயம்? நாங்கள் இந்தப் பகுதியில் அணையைக் கட்ட வேண்டாம்னு சொல்லலை. ஆனா, எங்க ஊரை அழிச்சிட்டு, மற்ற ஊரை வாழவைப்போம்னு சொல்றதைத்தான் எதிர்க்கிறோம். அறிவிப்புக்குப் பிறகு திட்டத்தால் பாதிக்கப்படும் மூன்று கிராம விவசாயிகள், கலெக்டரிடம் மனு கொடுக்கப் போனபோது, பாதிக்கப்பட்ட ஒருவர், 'அரசாங்கம் நிலத்தை எடுத்தால் கலெக்டர் அலுவலகத்துக்கு முன்னாலயே மருந்து குடிச்சிட்டு சாவோம்’னு சொல்லிட்டார்.

அதில் கடுப்பான கலெக்டர் பாதியிலேயே எழுந்துபோய்விட்டார். இந்தத் திட்டத்தால் சுமார் 1,000 குடும்பங்கள் பாதிக்கப்படும். ஆனால் அதிகாரிங்க இதை மறைச்சுட்டு பொய்யான விவரங்களை அரசுக்கு சொல்றாங்க. திட்டத்தைத் தெளிவுபடுத்த வேணும்னு சொல்கிறோம். இருந்த நிலத்தை எல்லாம் விட்டுட்டு, வேற ஊர்ல வாழ்ற கொடுமையான நிலை வந்துள்ளது வேதனை'' என்றார்.

கொட்டரைக் கிராமத்தைச் சேர்ந்த சோலையம்மாள், ''எனக்குச் சொந்தமான நாலரை ஏக்கர் நிலத்துல

உழைச்சு, வாழறேன். நிலத்தை எடுத்துக்கிட்டு வாரிசுகளுக்கு வேலை தர்றாங்களாம். எட்டாவதுகூட படிக்காத என் மகனுக்கு என்ன வேலை தருவாங்கன்னு தெரியல. எங்க ஊரில் நிறையப் பேர் படிக்காதவங்கதான். விவசாயத்தை விட்டா வேற எந்த வேலையும் தெரியாது. அரசாங்கம் எங்களுடைய நிலத்தைப் பறிச்சிக்கிட்டா, மருந்தைக் குடிச்சிட்டு உயிரை விடுறதைத் தவிர வேறு வழியில்ல'' என்றார் காட்டமாக.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமது, ''மருதையாற்றில் வருகிற தண்ணீர் வீணாகக் கொள்ளிடத்தில் கலக்கிறது. இங்கு அணை கட்டினால், சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள கூடலூர், சாத்தனூர், தொண்டப்பாடி உள்ளிட்ட 10 கிராமங்களிலுள்ள 5,000 ஏக்கர் விளைநிலங்கள் பயனடையும். நீர்மட்டம் மேம்படும்.

கடந்த 1989-ம் ஆண்டு 19 கோடியில் அங்கு அணை கட்டுவதாகத் திட்டம் அறிவிக்கப்பட்டு, சிலரின் தூண்டுதலால் திட்டம் கைவிடப்பட்டது. அந்த நல்ல திட்டத்தை முதல்வர் மீண்டும் அறிவித்துள்ளார். திட்டத்துக்காக நிலங்களைக் கையகப்படுத்துவதற்காக மட்டும் 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் கருத்தைக் கேட்ட பிறகே திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்குவோம்'' என்றார் உறுதியாக.

நல்லது நடந்தால் சரி.

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: எம்.ராமசாமி,

க.வினேஷ் குமரன்