கோவை மாநகரைத் தாண்டி மேற்கு மாவட்டங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது மத மோதல்கள்.

கோவை மாநகரில் வலுத்துவரும் மதரீதியிலான மோதல்கள் குறித்து, 'திரும்புகிறதா 1998?’ என்றத் தலைப்பில் 21-4-2013 தேதியிட்ட இதழில் எழுதியிருந்தோம். கடந்த சில நாட்களில் நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களிலும் மதரீதியிலான வன்முறை சம்பவங்கள் அரங்கேற... மேற்கு மாவட்டங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கடந்த 14-ம் தேதி இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் இஸ்லாமியர்கள் குறித்து பேசிய பேச்சுகள் விமர்சனத்துக்குள்ளாக, அங்கேயே லேசான கலாட்டா நடந்துள்ளது. ஆனால், அதை போலீஸார் எளிதாக எடுத்துக்கொண்டனர். அன்று இரவு பொதுக்கூட்டம் முடிந்து வீடு திரும்பிய இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மஞ்சுநாத், சிலரால் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கப்பட்டார்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து குன்னூரில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர் இந்து முன்னணியினர். ஆர்ப்பாட்ட சுவரொட்டிகளை ஒட்டும்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

இந்தத் தாக்குதலில் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ஹரிஹரன், வெங்கட்ராஜ், ஜெயக்குமார் ஆகிய மூவர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த சிலரை போலீஸார் கைதுசெய்தனர்.

இந்தச் சம்பவங்களைக் கண்டித்து இந்து இயக்கங்கள் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்த, அதிலும் வன்முறை வெடித்தது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 15 பேருந்துகள் கல் வீசித் தாக்கப்பட்டன. இரவு 10 மணியளவில் ஸ்ரீஅன்னபூரணா ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் ஹோட்டல் முன்பகுதியில் வீசப்பட்ட ஒரு பெட்ரோல் குண்டு வெடித்தது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக கோவை, திருப்பூரில் இந்து முன்னணியைச் சேர்ந்த 32 பேரை போலீஸார் கைதுசெய்தனர். இதனால், பரபரப்பும் பதற்றமும் அதிகரித்துள்ளது,

இந்து முன்னணி பொதுச் செயலாளர் காடேஸ்வரா சுப்பிரமணியத்திடம் பேசினோம். ''கோவை-குனியமுத்தூரில் தொடங்கி இந்துக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடக்கிறது. இதனைக் கண்டித்து பந்த் போராட்டம் பொதுமக்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. பேருந்துகள் மீது நாங்கள் கல் வீசவில்லை. ஆனால், கல்வீச்சு நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம். இந்து அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

இது தொடர்பாக அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தியுள்ள இஸ்லாமிய அமைப்புகள், 'எல்லாவற்றையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம்’ என அறிவித்துள்ளன.

த.மு.மு.க. பொறுப்பாளர் சாதிக் அலியிடம் பேசினோம். ''இஸ்லாமியர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நடத்தப்படுகின்றன. கூட்டத்தில் இந்து அமைப்பினர் மிக மோசமாகப் பேசியதன் விளைவாக இந்தச் சம்பவங்கள் நடந்துவருகின்றன. ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தோம். அவர்கள் இதையெல்லாம் கட்டுப்படுத்தியிருந்தால் பிரச்னையே ஏற்பட்டிருக்காது'' என்றார்.

இது தொடர்பாக மூன்று மாவட்ட போலீஸ் அதிகாரிகளிடமும் பேசினோம். ''பந்த் போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அனைத்து சம்பவங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே சூழலில் இனி வன்முறை நிகழ்வுகள் நிகழாமல் தடுக்கவும் கண்காணிப்பு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது'' என்றனர்.

சிறு சிறு உரசல்கள், அடுத்த கட்டமாக மோதல்களாக உருவெடுத்துள்ளன. இவை மிகப் பெரிய அளவிலான சட்டம்-ஒழுங்கு பிரச்னையை கிளப்பாமல் தவிர்க்க, பிரச்னைக்கான அடிப்படை காரணிகளைக் கண்டறிந்து சட்டப்படியான கடும் நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

- ச.ஜெ.ரவி படங்கள்: தி.விஜய்